வாஸ்து சாஸ்திரமானது வீட்டின் வடமேற்கு மூலையில் வீட்டிலிருந்து வெளியே செல்லவேண்டிய பொருள்களையே வைக்கவேண்டும் என வலியுறுத்துகிறது . எனவேதான் வாஸ்து வடமேற்கு மூலையில் கழிவறை அமைப்பதை சிறப்பாக கூறுகின்றது .
சரியான வடமேற்கு மூலையில் கழிவறை அமைப்பதற்கு இணையான வேறு அமைப்புகள் இல்லை . இப்படி அமைக்க இயலாதவர்கள் வாயு மூலையில் தரைக்கு மேல் சரியான வெட்டு ஏற்படுவதால் இரண்டு வாயு மூலையை ஏற்படுத்தி ஒன்றில் கழிவறையையும் மற்றொன்றில் சமையல் அறையையும் ஏற்படுத்தலாம் .
தெற்கு பார்த்த வீடுகளில் பல நேரங்களில் தென்கிழக்கு மூலையான அக்கினி மூலையில் சமையல் அறையை அமைக்க இயலாது . அப்படிப்பட்ட நேரங்களில் வீட்டின் வடகிழக்கு மூலையிலோ தென்மேற்கு மூலையிலோ சமையல் அறையை அமைப்பதை விட வாயு மூலையில் இப்படி வெட்டு ஏற்படுத்தி அமைப்பது சிறப்பு .
இதேபோல் வாயு மூலையில் வெட்டு ஏற்படுத்தி ஒருபுறம் கழிவறையையும் மறுபடியும் படிக்கட்டையும் கூட ஏற்படுத்தலாம் .
சரியான முறையில் வாயு மூலையில் கழிவறை அமைத்த பின்பு அதை ஒட்டியே படுக்கை அறையை அமைத்து கொள்ளலாம் . எக்காரணத்தை கொண்டும் படுக்கை அறையை வாயு மூலை கடைசியில் அமைப்பது சிறப்பல்ல .
இப்படி படுக்கை அறை அமைத்து வாயு மூலையும் நீண்டு வீட்டின் வெளிப்புறம் காலி இடத்தில் வாயு மூலை மூடப்பட்டு வாயு மூலையின் வடக்குப்புறம் தெருகுத்தும் இருந்தால் இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் .
அதனால் வாயு மூலையை கவனமுடன் அமைத்தால்தான் வளமான வாழ்க்கையை நாம் பெறமுடியும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment