Monday, November 14, 2022

ஜாதக பலனை சொல்லும்பொழுது லக்கினம் - ராசி - இவைகளில் எதை முதன்மையாக வைத்து பலன் சொல்லவேண்டும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

ஒரு ஜாதகத்தை முதலில் பார்க்க துவங்கும் பொழுது லக்கினம் தான் முதன்மையாக கவனிக்க பட வேண்டும். ஏன் எனில் லக்கினம் உயிர் ஸ்தானம் மற்றும் விதி என்று அழைக்கப்படும். எந்த ஒரு ஜாதகரும் லக்கினம் மற்றும் லக்கின அதிபதி குணாதிசயங்களை தான் அதிகம் வெளிப்படுத்துவார்.

லக்கினமும், லக்கின அதிபதியும் எவ்வளவு சுப வலுவில் இருக்கிறதோ அந்த அளவு தான் ஜாதகரின் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் அவ்வாறே நடைபெறும்.

ராசி என்பது உடல் மற்றும் மனதை குறிக்கும். சந்திரனின் இருப்பை வைத்து உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தையும், மன வலிமையையும் நிச்சயம் கணிக்க முடியும்.

லக்கினத்தின் அடிப்படையில் தான் தசா - புக்தி பலன்கள் காண முடியும். ராசியின் அடிப்படையில் தான் கோட்சார பலன்கள் காண முடியும்.

தசா புக்தியும், கோட்சாரமும் ஒரு ரயில் தண்டவாளத்தின் இரண்டு இரும்பு தூண்கள் ஆகும். எனவே தசா புக்தி இல்லாமல் கோட்சாரமும், கோட்சாரம் இல்லாமல் தசா புக்தியும் முழுமை பெறாது.

இறுதியாக லக்கினம் வலது கண், ராசி இடது கண். இரண்டும் நிச்சயம் நமக்கு தேவை.

ஆனால் பலன்கள் கூற முதலில் தசா புக்தி அமைப்பு தேவை. அதற்கு லக்கினம் தேவை. இரண்டாவதாக இந்த தசா புக்தியில், ஒரு குறிப்பிட்ட கோட்சார கிரக அமைப்பில் தான் ஜாதகருக்கு அந்த குறிப்பிட்ட பலன்கள் நடைபெறும்.

எனவே முதல் ரேங்க் லக்கினம், இரண்டாவது ரேங்க் ராசி. எனவே ஒரு தனி நபர் ஜாதகத்தில் இரண்டும் கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, November 9, 2022

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன ? இதன் நன்மை தீமைகளை கூற முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

நிழல் கிரகங்கள் என அழைக்கப்படக்கூடிய ராகு - கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டு தங்கி (18 மாதங்கள்) பலனை அளிப்பார்கள்.ராகு துலாம் ராசியில் இருந்தால் கேது மேஷம் ராசியில் இருக்கும்.

ராகு மகரம் இராசியில் இருந்தால் கேது கடகம் ராசியில் இருக்கும்.

ராகு - கேதுவிற்க்கு இடையேயான கற்பனை கோடு ராகு - கேது அச்சு என்று அழைக்கப்படும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இயற்கையாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் என்ற நேர் வரிசையில் நகரக் கூடியவை.

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் சில காலங்களில், வக்கிரகதியாக துலாம், கன்னி, சிம்மம், கடகம், மிதுனம் என்ற எதிர் வரிசையில் நகரும்.

ராகு - கேது அச்சு வின் சுழற்சி எல்லா காலங்களிலும் வக்கிரகதியாக, விருச்சிகம், துலாம், கன்னி, சிம்மம், கடகம் என்ற எதிர் வரிசையில் நகரும்.

நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப தோஷம் எனப்படும்.

ராகு - கேது அச்சு வின் ஒரு பகுதியில், ராசி, டிகிரி, பாகை அளவுகளில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும்.

கால சர்ப்ப தோஷத்தை யோகமாகவும் கருதலாம்.

ராகு - கேது அச்சு வின் 2 பகுதிகளில் ஏதோ ஒரு பகுதியில் மற்ற 7 கிரகங்களும் அமையப் பெறலாம்.

அதன் அடிப்படையில் 2 விதமான யோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலே உள்ள படத்தில் ராகு - கேது அச்சுவின் சுழற்சி முறையில் ராகு வுக்கும் கேதுவுக்கும் இடையே 7 கிரகங்கள் உள்ளன. இவ்வித அமைப்பு உடைய ஜாதகம்

கால சர்ப்ப யோகம் உடைய ஜாதகமாக கருதப்படுகிறது.

மேலே உள்ள படத்தில் ராகு - கேது அச்சு வின் சுழற்சி முறையில் கேது வுக்கும் ராகுவுக்கும் இடையே 7 கிரகங்கள் உள்ளன. இவ்வித அமைப்பு உடைய ஜாதகம்

கால அமிர்த யோகம் உடைய ஜாதகமாக கருதப்படுகிறது.

இந்த கால சர்ப்ப / அமிர்த யோகமுள்ள ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியில், சுமார் 36 ஆண்டுகளுக்கு, சில தடைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பிற்பகுதி வாழ்க்கை சிறப்பான யோக காலமாக அமையும்.

பல செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் இவ்வகையான கால சர்ப்ப / அமிர்த யோகம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஜாதகர் கால சர்ப்ப யோகம் உடையவராக இருந்தால் வாழ்க்கை துணையின் ஜாதகம் கால அமிர்த யோகம் அமையப் பெற்று இருப்பது சிறப்பாக இருக்கும்.

கால அமிர்த யோகம் உடைய ஜாதகருக்கு கால சர்ப்ப யோகம் ஜாதகம் அமையப் பெற்ற வாழ்க்கை துணை சிறப்பாக பொருந்தி வரும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, October 26, 2022

மலர்க்கொடி (MALARKODI) இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

மலர்க்கொடி - MALARKODI - ராகுவின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . குருவின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் கன்னி ராசிக்குரிய பெயராகும் . 

மனதுக்கு அப்பாலுள்ள சக்திகளை இந்த பெயர் காட்டுகிறது . எகிப்திய சித்திரங்களில் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் சஞ்சாரம் செய்யும் மனிதன் போன்ற சித்திரங்கள் இந்த பெயரின் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மந்திர நூல்களில் மூன்றாவது கண் என இந்த பெயர் எண்பற்றி கூறப்பட்டுள்ளது . 

இந்த பெயர் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த பெயர்  குறிக்கிறது .

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும்

தெய்வீக தன்மையையும் - காரிய வெற்றியும் - ஆன்மீக ஈடுபாடும் - முக்காலத்தை  உணரும் ஆற்றலும் -  மனம் -தத்துவம் - ஆத்மா - அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும் - தனிமையை விரும்புதலும் -இந்த பெயரின் தன்மைகள் ஆகும் . 

இந்த பெயரில் ராகுவின் சனியும் இணைந்துள்ளதால் உடல் உறுப்பில் ஏதாவது காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் .  

புதையல் போன்ற பூமியின் அடியில் உள்ள பொருள்கள் சேருதலும் - மத விஷயங்களில் அதிக கவனமும் - பொது நல காரியங்களில் நிறைந்த வெற்றிகளும் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இந்த பெயரை  உடையவர்களின் செயல்பாடாக இருக்கும் .  

எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் - அல்லது மிக வேகமாக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல் - நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும் புகழையோ - சுகத்தையோ பெறமுடியாமல் போகுதல் இந்த பெயரின்  பலன்களாகும் . 

விதி விளையாட இவர்களது வாழ்க்கையை மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - க உடையவர்கள் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது . 

மற்ற தேதியில் பிறந்த பெண்களுக்கு   இந்த பெயர்  சிறப்பானது அல்ல . 

குறிப்பாக 6 - 15 - 24 - தேதியில் பிறந்த பெண்கள்  - பிறந்த தேதியின் கூட்டு எண ஹீப்ரு எண் 6 க வருபவர்கள் இந்த பெயரை  வைத்து கொண்டால் வாழ்க்கை ஒரு விபரீத விளையாட்டாக மாறும் . 

திருமண கால கட்டங்களில்   U - V  -  போன்ற ஆரம்ப எழுத்தை உடைய ஆண்களை மணந்து கொள்வது திருமண வாழ்க்கையை  பிரகாசிக்காமல் செய்துவிடும் .  

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து கொள்வது அவசியம்  

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் மஞ்சள் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

ஆழ்ந்த பச்சை - கருநீலம் - கருப்பு நிற ஆடைகளை இவர்கள் அணிந்து சென்றால் நினைத்த காரியம் வெற்றி பெறாது . 

மலர்க்கொடி - MALARKODI - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் : 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் .
 
இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

திரு ஆலங்குடி சென்று வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

Wednesday, October 19, 2022

செவ்வாய் தோஷம் உங்களுக்கு இருக்கிறதா ? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் ? செவ்வாய் தோஷம் உங்களுக்கு பாதிப்பை தராது ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.
கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
 
செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.
 
இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.
 
செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இவ்வாறு செய்வதால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, October 8, 2022

உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு ஜாதக அமைப்பும் ஒரு காரணமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

                                                        ஓம் சிவ சக்தி 

ஒருவருடைய ஜெனன ஜாதகத்தை வைத்து அந்த ஜாதக அமைப்பு எத்தகைய சிறப்புகளை கொடுக்கும் ஜாதக அமைப்பு என்றும் - உலக புகழ் பெறப்போகும் ஜாதக அமைப்பா?  என்பதையும் கணிக்க  முடியும்க  . 

அதே போல் உலக அழகி பட்டத்தை வெல்லும் ஒரு  சில ஜாதக அமைப்புகளையும் அந்த ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகளை கொண்டும்  தெரிஞ்சிக்கலாம்க . . 

ஒரு பெண் பிறக்கும் காலகட்டம் சிறப்பாக இருக்கனும்க 
ஏன்னா  அழகு, யவனம், இளமை இதற்கெல்லாம் அதிபதிகளாக இருக்கற கிரகங்கள் இரண்டுங்க .

அந்த இரண்டு கிரகங்களும் யாருன்னு பார்த்தா சந்திரன், சுக்கிரன். இந்த இரண்டு கிரகங்களும்தாங்க 

இதில் சந்திரன் வசியத்தை கொடுக்கக்கூடிய கிரகம்க 

கண்கள் காந்தத்தைப் போல் பார்ப்பவரை இழுக்கும் அமைப்பை கொடுக்கும் கிரகம் இந்த சந்திரன்தாங்க   

இதேபோல் சுக்கிரனும் பல அழகுகளைக் கொடுக்க வல்லமை உடையவருங்க 

சுக்கிரனின் ஆதிக்கத்தில் அல்லது சுக்கிரன் ஓரையில் அல்லது சுக்கிரன் லக்னத்தில் இருக்கும் போது அல்லது லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கும் போது அல்லது சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது அல்லது லக்னத்தை சுக்கிரன் பார்க்கும் போது பிறந்த பெண் பிள்ளைகள் எல்லாம் அளவெடுத்தாற் போல் அழகான அங்க அவையங்களை பெற்றிருப்பாங்க 

நீளமான விரல்கள், உடலுக்கு ஏற்ற காதுமடல், கவர்ச்சிகரமான கண்கள் எல்லாம் இவர்களுக்கு அமைஞ்சுடுங்க .

சாதுர்யமான புத்திக் கூர்மைக்கும் உரிய கிரகம் எதுன்னு பார்த்தா சந்திரன்மட்டும்தாங்க 

உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டாலும், அதில் கேள்வி-பதில் சுற்றில் சிறப்பாக பதிலளித்தால்தான் அழகிப் பட்டத்தை வெல்ல முடியுங்க 

உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு அங்க அழகு மட்டும் போதாதுங்க .

அறிவுப்பூர்வமான அணுகுமுறையும் தேவை என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கேள்வி-பதில் சுற்றில் வெல்ல சிறப்பாக அதேசமயம் விரைவாக பதிலளிக்க வேணும்க .

கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலைத் தர உதவுவது, நவகிரகங்களில் வேகமாக நகரும் சந்திரன் மட்டும்தாங்க 

அந்த பதில் சரியான முறையில் வெளிப்படுவதற்கு உதவுவது புதன் கிரகம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளனுங்க . 

உலக அழகியாக வேண்டுமென்றால் சந்திரன், சுக்கிரன், புதன் இந்த மூன்று கிரகங்களின் பங்களிப்பு  கட்டாயம் தேவைங்க .

ஒரு பெண்ணோட ஜாதகத்தில் குரு லக்னத்தை பார்த்தா அந்த பெண் கோபப்பட்டாலும் அந்த அழகாகவே தெரிவாருங்க 

கோபத்தில் சீற்றம் இருக்காதுங்க . 

உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு இப்படி ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு பலனைத் தரும்க 

.அதேபோல் பிறக்கக் கூடிய ஓரை சிறப்பாக அமைஞ்சிட்டா உலக அழகி பட்டத்தை வெல்ல உங்களை யாரும் ஓவர் டேக் பண்ணமுடியாதுங்க . 