Showing posts with label தனுசு ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ?. Show all posts
Showing posts with label தனுசு ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ?. Show all posts

Monday, December 31, 2018

தனுசு ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                    தாயே பூமாதேவி
குரு பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தனுசு ராசி அன்பர்களே ராசிக்கு லாபவீட்டில் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். 

பல்வேறு காரணங்களால் தடைபட்டு பாதியில் நின்றுவிட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வாய்ப்பு ஏற்படும். அறிஞர்களின் நட்பால் தெளிவு பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. 

தனஸ்தானமான 2 ம் இடத்திலும் மறைவு ஸ்தானமான 8 ம் இடத்திலும் 12.2.19 வரை   கேது,  ராகு இருப்பதால், சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனம் தெரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். கண், காது, பல் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 

கோயில் குளங்களுக்கு சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். திடீர்ப் பயணங்கள் ஏற்படும். ஆனால், தூக்கம் குறையும். கணவன் - மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையால் பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணைக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். வழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். 

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஜன்மச் சனி தொடர்வதால், அடிக்கடி பழைய கசப்பான நிகழ்ச்சிகளை நினைத்து உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் பேசியவற்றை மறக்கப் பாருங்கள். படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். சிலர் கண்களைப் பரிசோதித்து கண்ணாடி அணிய நேரிடும். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் ஏற்படும். மற்றவர்களை எடுத்தெறிந்து பேசவேண்டாம். வழக்குகளால் கவலை ஏற்பட்டு நீங்கும்.

இடைவிடாது செல்லும் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் நிற்பதால்,  கொஞ்சம் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். தூக்கமின்மை, படபடப்பு, கனவுத் தொல்லை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்துகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் கௌரவிக்கப்படுவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு உங்கள் ராசியில் ஜன்ம குருவாக இருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாயுக்கோளாறு வந்து நீங்கும். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்‌ஷன் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். 

வீட்டு சாப்பாட்டை தவிர வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே பிரிவு ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இனம் தெரியாத சின்னச் சின்ன கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.

நீண்ட  நாளாக நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.இரும்பு வகைகளால் ஆதாயம் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு  லாபம் சுமாராகத்தான் இருக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாள்களால் சின்னச் சின்ன நஷ்டங்கள் ஏற்படக்கூடும். துரித உணவகம், நிலக்கரி,  பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும், ஒத்துழைப்பு தருவார்கள். 

அலுவலக பணியாளர்கள் அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். ஆனால், ஜன்மச் சனி தொடர்வதால் மனதில் இனம் தெரியாத அச்ச உணர்வு இருந்தபடி இருக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. 

கல்வி பயிலும் செல்வங்களே படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அவ்வப்போது தூக்கம், மறதி ஏற்பட்டு நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர அதிக செலவு செய்யவேண்டி வரும். 

சினிமா போன்ற கலை சம்பந்தப்பட்ட துறையில் உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்துவீர்கள். முடங்கிக் கிடக்கும் உங்களின் படைப்பு வெளியாக சில முக்கியப் பிரமுகர்கள் உதவி செய்வார்கள்

இந்தப் புத்தாண்டு சகிப்புத் தன்மை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:   வியாழக்கிழமையில் சூரியோதயத்தில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சணாமூர்த்தியை மனதார வழிபடுங்கள் . கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம் உணவாக கொடுங்கள் .





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328