Showing posts with label சகுனம் ?. Show all posts
Showing posts with label சகுனம் ?. Show all posts

Saturday, June 13, 2020

சகுனம் பார்த்து சென்றால் நல்லது நடக்குமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். ராவணன் BSC

0 comments
மனிதனின் எதிர்கால பலன்களை ஜோதிட சாஸ்திரம் மூலம் அறிந்து கொள்ளலாம் . இந்த ஜோதிட சாஸ்திரத்தில் சகுன சாஸ்திரமும் தொடர்பு பெற்று காணப்படுகிறது ஒரு ஜோதிடரிடம் ஒருவர் ஜோதிடம் பார்க்க வருகிறார் என்றால் அவர் உள்ளே நுழையும் விதம், அவருடன் வந்தவர்கள், அவர்கள் எத்தனை பேர், அமரும் பாங்கு, அவரின் உடை நிறம், உடல்மொழி, அவர் ஜாதகத்தைத் தரும் விதம், அதன்பிறகு அவரின் உடல் அசைவுகள் இதெல்லாம்தான் ஒரு ஜோதிடருக்கு சகுன நிமித்தம்.
இவை மட்டுமல்ல, ஜோதிடரின் ஐம்புலன்களும் கூர்மையாக இருக்க வேண்டும். பார்வையில் படும் விஷயங்கள், கேட்கும் சத்தம், காற்றின் வாசனை, நாவில் உண்டாகும் மாற்றம், மனதில் ஏற்படும் எண்ணங்கள், இவை எல்லாம் சேர்ந்து பலன்களில் வெளிப்படும், 
நல்ல காரியமாக  சென்றாலும் மூன்று பேராகச் செல்லாதீர்கள். அது காரியத்தடை உண்டாக்கும்.
உங்கள் உடையின் நிறம் அடர் சிவப்பு, கருப்பு நிறத்தைத் தவிருங்கள்.
உங்களின் கைகளைக் கட்டிக்கொண்டு இருக்காதீர்கள். அது உங்கள் காரியத்தையும் கட்டிப்போட்டுவிடும்.
நீங்கள் செல்லும் இடங்களில் உங்களின்  கைகள் சாதாரணமாக இருக்கட்டும். அதாவது தலைமுடியை கோதுவது, கன்னத்தில் கை வைப்பது, புருவம், மீசையை தொடுவது கூடாது. அது காரியத்தடையைக் காட்டும்.
உங்கள் உடல் உறுப்புகளில்  நெற்றி, காதுமடல், மூக்கு நுனி, இவைகளைத் தொட… நீங்கள் கேட்டு வந்த காரியம் வெற்றியாகும்.
தூங்கி எழுந்த காலைப்பொழுதில்  எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கை, கோயில்கோபுரம், நிலைக்கண்ணாடி, பசு, யானை(படம்), பழங்கள், குழந்தைகள், எனப் பார்க்க அந்த நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.
காலையில் எழுந்து குளித்தவுடன்  முதலில் முதுகைத் துடைக்க வேண்டும். பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும்.
அதாவது நீங்கள் குளிக்கும் போது மூதேவியும், ஶ்ரீதேவியும் காத்துக்கொண்டிருப்பார்களாம். நீங்கள் துடைக்கும் முதல் பகுதி எதுவானாலும் முதலில் மூதேவி வந்து பற்றிக்கொள்வாளாம். பிறகே ஶ்ரீதேவி பொறுமையாக வந்து அமர்வாளாம். 
நீங்கள் முதலில் முகத்தைத் துடைக்க மூதேவி உங்கள் முகத்தைப்பற்றிக்கொள்வாள். எனவேதான் முதலில் முதுகையும் பிறகு முகத்தையும் துடைக்க வேண்டும் என பெரியோர்கள் சொல்வார்கள்.
மற்றுமொரு செய்தி : உழைப்பின் அடையாளம் முதுகு. சனியின் ஆளுமை உள்ள இடம் முதுகு. சனியின் பரிபூரண அருள் இருந்தால்தான் செய்கின்ற தொழில், உத்தியோகம் நிரந்தரமானதாகவும், மன நிறைவைத் தருவதாகவும் இருக்கும்.
எனவேதான் முதுகுப் பகுதி சனியின் அம்சம் என்பதால் அதற்கே முதல் மரியாதை.

முதலில் முகத்தைத் துடைப்பவர்கள்…. நிச்சயமாக சொல்கிறேன் ….முகஸ்துதி பாடி , ஆமாம்சாமி போட்டு வாழ்பவர்களாகத்தான் இருப்பார்கள்.
குளிக்கும்போது எந்த நீராக இருந்தாலும்( சுடுநீர், தண்ணீர்) முதலில் கால் பாதத்தில் இருந்துதான் குளிக்கத் தொடங்க வேண்டும்.
ஈரத்துண்டை கட்டிக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. அதுபோல் ஓர் உடை மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது. இரு உடை நமது மேனியில் இருக்க வேண்டும்.
திருநீறை ஈரப்படுத்தி பூசக்கூடாது, சாதுக்கள் மட்டுமே அவ்வாறு பூசலாம்.
திருநீறு மேற்பகுதியிலும், அதற்கு கீழே குங்குமம் இட வேண்டும். புருவ மத்தியில் விசேஷித்த மை, சந்தனம் இட வேண்டும்.
ஆலய வழிபாட்டின் போது முதலில் கோபுர தரிசனம், பிறகு கொடிமர வணக்கம், அதை அடுத்து பலிபீடம். இங்குதான் உங்கள் கோரிக்கைகள் வைக்கப்படவேண்டும். அதை அடுத்து இறைவனின் வாகனம். இவரிடம்தான் நீங்கள் இறைவனை வணங்க அனுமதியும், உங்கள் வருகையையும் பதிவு செய்யவேண்டும்.
இறைவனிடத்தில் நீங்கள் எதுவும் கேட்கக் கூடாது. ஆலயத்தில் இறைவனின் திருநாமத்தை மட்டுமே உச்சரித்துக்கொண்டு தரிசனம் செய்ய வேண்டும்.
அவருக்கு அனைத்தும் தெரியும். எனவே கோரிக்கை வைக்கிறேன் என்ற பெயரில் அவரை தொந்தரவு தராதவாறு தரிசனம் மட்டும் செய்யுங்கள்.
கொடிமரத்திடம் மட்டுமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும், அதுவும் வடக்கு பார்த்து, ஆண்கள் தம் உடலின் அனைத்து அங்கங்கள் படும்படியாகவும், பெண்கள் தங்கள் உடலின் மார்பு, வயிறு, யோனி பூமியில் படாமலும் வணங்க வேண்டும், (இவை புனிதமானவை மண்ணில்படக்கூடாது).
அடுத்து… நீங்கள் வெளியே செல்லும் போது மிருகங்கள் (நாய், பசு,காளை,ஆடு உட்பட) உங்களின் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்ல செல்லும் காரியம் வெற்றி, மாறாக இடமிருந்து வலம் சென்றால் தாமதம்.
பறவைகள் இடமிருந்து வலம் சென்றால் வெற்றி, மாறாக வலமிருந்து இடம் சென்றால் தாமதம்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328