Showing posts with label சூரியனின் ஆதிக்க தேதி ?. Show all posts
Showing posts with label சூரியனின் ஆதிக்க தேதி ?. Show all posts

Monday, July 23, 2018

சூரியனின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம் ? தொழில் நிறுவனத்தின் பெயரை எந்த அதிர்ஷ்ட எண்களில் வைக்கலாம் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

2 comments
                                                                ஓம் சிவசக்தி
ஒருவரின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளை அனுசரித்து ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தால் அந்த வியாபாரத்தில் நல்ல லாபம் காணலாம் . இந்த மூன்று எண்களின் கிரகங்கள் அவர்களின் ஜாதகத்தில் ஆட்சி - உச்சம் - கேந்திரம் திரிகோணம் - லாபஸ்தானம் போன்ற இடங்களில் இருந்து அந்த கிரகங்களின் ஆதிக்க எண்களில்  கடை அல்லது நிறுவனத்தின் பெயரை அமைத்தால் லாபம் ஒரு படி மேலே போய் நிற்க்கும் . 

இன்றும் பல பெரிய கடைகள் சிறிய கடைகள் வியாபாரத்தில் லாபம் ஈட்ட முடியாமல் தடுமாறி கொண்டுதான் இருக்கின்றன . பெருமளவுக்கு முதலீடு செய்து தொழிற்சாலைகளை அமைத்து நடத்த முடியாமல் மூடப்படும் நிலையில் உள்ள தொழிற்சாலைகளும் இருக்கின்றன . இவற்றுக்கு பல காரணங்கள் இருக்கலாம் . ஆனால் எனது கருத்து என்னவென்றால் செய்யப்படும் தொழில்  பொருத்தமான பிறந்த தேதிக்கு தகுந்தவாறு தொழிலை தேர்ந்தெடுத்து அதில் இறங்கினால் வெற்றிகாணலாம் . வியாபார நிலையத்தின் பெயர் பொருத்தமான அதிர்ஷ்ட எண்களில் அமையவேண்டும் 

ஒரு பெரிய நகரத்தில் பல ஜவுளி கடைகள் இருக்கின்றன . பல மில்களில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள் எல்லா கடைகளுக்கும் வருகின்றன ஆனாலும் சில கடைகளில் மட்டுமே கும்பல் அதிகம் காணப்படுகிறது .. அந்த கடையின் பெயரிலுள்ள எண் மக்களை தன்பால் இழுக்கும் சக்தி கொண்டதே என்பது ஜோதிட ரீதியான பார்வையில் என்னுடைய கருத்தாகும் . பிறந்த தேதிக்கு ஏற்ற வகையில் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அதில் இறங்கி தொழில் நிறுவனத்தின் பெயரின் எண்களும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து விட்டால் அதில் லாபம் காணலாம் என்பது உண்மை . 


சூரியனின் ஆதிக்க தேதியில் தேதியில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம் . 

சூரியனின் ஆதிக்க தேதிகள் : 1 - 10 - 19 - 28 -

இந்த தேதிகளைதேதிகளை  ஆதிபத்தியம் வகிக்கக்கூடிய சூரியன் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அரசாங்கத்தில் உயர்ந்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு.  மிகுந்த தன்னம்பிக்கையும் உண்டு . தங்க வியாபாரம் வைர வியாபாரம் - பளபளப்பான ஓளி தரும் பேப்பர் வியாபாரம் ஓட்டு வியாபாரம் அக்கினியை மையமாக கொண்ட மர வியாபாரம் மூங்கில் கடை நடத்தலாம் . பணம் வட்டிக்கு விடுவது மருத்துவராகி மருத்துவ தொழில் செய்வது போன்றவை லாபம் தரும் . 

சூரியனின் ஆதிக்க எண்களில் 1- 10 - 19 - 28 - 37 - 46 - 55 - 64 - 73 - 82 - 91 - 100 என உண்டு . இவற்றில் 10 - 19 - 37 - 46 - 73 - 82 என்ற எண்களில் நிறுவனத்தின் பெயர் அமைந்தால் அதிக நற்பலன்களை தரும் வலிமை கொண்டது . எண் 25 - 55 - இந்த எண்களில் வியாபார நிறுவனத்தின் பெயர் அமைந்தால் பிரமாதமாக ஆரம்பித்து பின் நஷ்டத்தில் முடிய வாய்ப்புகள் அதிகம் . 
பிறந்த தேதியின் கூட்டு எண் 6 க இருந்தால் தங்கம் வெள்ளி வியாபாரமே சிறந்தது . கூட்டு எண் 3 க இருந்தால் புத்தக கடை நல்ல லாபம் தரும் . கூட்டு எண் 4 என்றால் அரசாங்கம் மூலமாகவோ - அல்லது அரசு பணியில் உயர்ந்த ஸ்தானத்தை அடையலாம். கூட்டு எண் 2 என்றால் ஐஸ்க்ரீம் - பால் வியாபாரம் மிக சிறந்த லாபத்தை கொடுக்கும் . கூட்டு எண் 8 க அமைந்தால் இரும்பு வியாபாரம் எண்ணெய் வியாபாரம் சோப்பு வியாபாரம் லாபத்தை தரும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328