Showing posts with label மேஷ லக்கினத்தில் ருதுவான பெண் ?. Show all posts
Showing posts with label மேஷ லக்கினத்தில் ருதுவான பெண் ?. Show all posts

Friday, July 10, 2020

மேஷ லக்கினத்தில் ருதுவான பெண்ணின் திருமண வாழ்க்கை எப்படி அமையும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - - ஆர். இராவணன் BSC

0 comments
                      பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

மேஷ லக்கினத்தில் ருதுவான பெண்ணிற்கு ஏழாவது இடமாகிய கணவன்  ஸ்தானம்  துலாம் . இந்த துலாம் லக்கினத்திற்கு அதிபதி சுக்ரன் . இந்த சுக்ரன் லக்னமாகிய மேஷத்தில் இருந்தால் அலங்காரத்தில் பிரியமுள்ளவளாகவும் நடன மங்கையாகவும் நாடக சினிமா சம்பந்தப்பட்ட துறைகளில்  வருமானம் கொண்டு வாழ்பவளாகவும் , தனது நடுவயதில் திருமணம் செய்து கொண்டு வாழ்வாள் .

இந்த மேஷ லக்கினத்திற்கு அதிபதியான செவ்வாய் லக்கினத்தில் சுக்கிரனுடன் சேர்நது இருந்தால்  இந்த பெண்ணின் அந்தரங்க வாழ்க்கை முறையற்றதாக இருக்கும் . 

இந்த மேஷ லக்கினத்தின் ஏழாம் அதிபதியான சுக்ரன் மேஷ லக்கினத்தின் இரண்டாவது ஸ்தானத்தில் இருந்தால் இந்த பெண்ணிற்கு குடும்ப வாழ்க்கை அமையும் - குழந்தை பாக்கியம் என்பது சந்தேகமே . 

சுக்ரன் மேஷ லக்கினத்திற்கு மூன்றாவது இடமான மிதுனத்தில் இருந்தால் இந்த பெண்ணிற்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாது . தான் விரும்பும் ஒருவனை மணந்துகொண்டு துன்பத்தை அடைவாள் . 

சுக்ரன் மேஷ லக்கினத்திற்கு நான்காவது இடமாகிய கடகத்தில் இருந்தால் இந்த பெண் தன்னை விட சற்று வயது இளையவனை மணந்து கொள்வாள் .

சுக்ரன் மேஷ லக்கினத்திற்கு ஐந்தாவது இடமான சிம்ம ராசியில் இருக்கும் பெண் பூர்வ புண்ணிய பலனை இழந்து பெற்றோரையும் உற்றாரையும் விட்டு தனக்கு பிரியமானவனோடு வாழ்ந்து பல துன்பங்களை அனுபவிப்பாள் . 


சுக்ரன் மேஷ லக்கினத்திற்கு ஆறாம் இடமாகிய கன்னியில் இருக்க பிறந்த பெண் தனது இனத்தை விட்டு பல பெண்களிடம் தொடர்புள்ள ஒருவனிடம் சேர்ந்து அவனோடு துன்பங்களை அனுபவித்த பிறகு மற்றொருவனை மணந்து வாழ நேரிடலாம் . 

சுக்ரன் மேஷ லக்கினத்திற்கு ஏழாம் இடமாகிய துலாத்தில் தனது வீட்டிலேயே இருந்தால் இந்த பெண் கலை பித்தினால்  தன் நிலையை இழந்து நடுவயதில் ஒருவனை மணந்து வாழ்வாள் . 

சுக்ரன் எட்டாம் இடமாகிய விருச்சிகத்தில் இருக்க பிறந்த பெண் கணவனிடம் எப்பொழுதும் சண்டை போடுவாள் .ஆனால் சேர்த்து கொள்வாள் . குழந்தைகளை பெறுவாள் . ஆனால் மன வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் அமையாது . 

சுக்ரன் ஒன்பதாம் இடமாகிய தனுசு ராசியில் இருக்க பிறந்த பெண் ஒருவனை மணந்து குழந்தை பெற்ற பிறகு விதைவையாகி மற்றொவனை மணந்து கொள்ள நேரிடலாம்  . 

சுக்ரன் பத்தாவது இடமாகிய மகர ராசியில் சனியின் வீட்டில் இருக்க பிறந்த பெண் பல தாரங்களை உள்ள ஒருவனை பொருளுக்காக மணக்க நேரிடலாம் . இல்லற சுகம் கிடைக்காமல் ஏங்குவாள் . இல்லற சுகத்திற்காக இன்னொருவனை நாட நேர்ந்து அவமானத்தை அடையவும் நேரிடும் . 

சுக்ரன் பதினோராவது இடமான கும்ப ராசியில் சனியின் வீட்டில் இருந்தால் இந்த பெண் முதியவனை மணக்க நேரிடலாம் . ஆனால் வசதி வாய்ப்புகளோடு வாழ்வாள் . இல்லற வாழ்க்கை சுகம் இராது . குழந்தை பேரு பெறுவது அபூர்வம் . 

சுக்ரன் பன்னிரெண்டாம் இடமான மீனத்தில் இருக்க பிறந்த பெண் அலங்கார பொருள்களும் வசதிகளும் ஏராளமாக இருக்கும் . பாவ கிரகங்கள் பார்வை சுக்ரனுக்கு இருந்தால் தனது அழகினால் பகைவரை தேடிக்கொள்வாள் . 


இந்த மேஷ லக்கின அதிபதி கடகத்தில் நீசமாகி சந்திரன் ரிஷபத்தில் சுக்ரன் மீனத்திலும் இருந்தால் இந்த பெண் மணவாழ்க்கை மகிழ்ச்சியும் மகபேறும் மாங்கல்ய பாக்கியமும் பெறுவாள் . 

இந்த பெண்ணின் மேஷ லக்கினத்தையோ ஏழாம் பாவமான துலாம் ராசியை குரு பார்த்தாலும் - இந்த ராசியில் குரு இருந்தாலும் இந்த பெண் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையும் - மகப்பேறும் பெற்று மகிழ்ச்சியோடு மாங்கல்ய பாக்கியதோடு வாழ்வாள் . 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328