Showing posts with label குழந்தைக்கு உடல் ஊனம் ?. Show all posts
Showing posts with label குழந்தைக்கு உடல் ஊனம் ?. Show all posts

Thursday, November 10, 2016

குழந்தையின் பெயர் உடலில் ஊனத்தை ஏற்படுத்தும் . அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 comments

                                                 தாயே பூமாதேவி 
                                      

குழந்தை பாக்கியம் கிடைப்பது என்பது கடவுள் கொடுக்கும் வரம் என்பார்கள் . பிறக்கும் குழந்தை எந்த வித நோய்  நொடி இல்லாமலும் - உடல் இருப்பில் எந்த ஒரு குறையும் இல்லாமலும் சகல சௌபக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது அந்த குழந்தையை பெற்றெடுக்கும் பெற்றோர்கள் அனைவரது  விருப்பமும் கூட. 

ஒரு சிசு இந்த பூமியில் ஜெனித்தவுடன் அதனுடைய எதிர்காலத்தை அந்த குழந்தையின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தீர்மானிக்கின்றன . மேலும் அந்த குழந்தையின் பெயரில் உள்ள கூட்டு எண்கள்  எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைகின்றதோ அந்த கிரகத்துக்கு உரிய குணநலன்கள் - செயல்பாடுகள் அனைத்தும் அந்த பிறந்த குழந்தையின் அம்சத்தில் நிலைத்து நிற்கும் . ஒரு மனிதனின் பெயரின் மொத்த கூட்டு எண்களில் நன்மையை தரக்கூடிய எண்களும் இருக்கின்றன . தீமையான பலன்களை வாரி வழங்க கூடிய எண்களும் இருக்கின்றன .

அதே சமயத்தில் உடல் உறுப்பில் ஊனத்தை உண்டு பண்ணகூடிய எண்களும் உள்ளன.  சூரியனை குறிக்ககூடிய 1 ம் எண் - சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண் - குருபகவானை குறிக்ககூடிய 3 ம் - ராகுவை குறிக்ககூடிய 4 ம் எண் - புதனை குறிக்ககூடிய 5 ம் எண் - சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண் - கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண் - சனிபகவானை குறிக்ககூடிய 8 ம் எண் - இந்த கிரகங்கள் அனைத்தும் அந்தந்த எண்களை ஆட்சி செய்கின்றன .

இதில் 8 ம் எண்ணை குறிக்ககூடிய சனிபகவானுக்கு மந்தன்  என்ற பெயரும் உண்டு . சனி பகவானுக்கு இடது கால் ஊனமாகும் . அதனால் இவருக்கு முடவன் என்ற பெயரும் உண்டு .


ஒரு பிறந்த குழந்தைக்கு ஆரம்ப எழுத்தாக எந்த எழுத்திலும் பெயர் அமையுமாறு வைக்கலாம் . அதில் ஒன்றும் தப்பில்லை .  அதே சமயத்தில் பெயரின் மொத்த கூட்டு எண்கள் 8 ம் எண் ஆதிக்கத்தில் அமைய கூடாது .

ஒரு பிறந்த குழந்தைக்கு சூரியனின் ஆதிக்க எழுத்தான  A , I , J  போன்ற ஆரம்ப  எழுத்துகளில்  பெயர் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண்கள் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் முடிந்தால் அந்த குழந்தைக்கு கண் - இருதயம் போன்ற உடல் உறுப்புகளில் ஊனத்தையும் - பிணியையும் ஏற்படுத்தும் . காரணம் A , I , J போன்ற எழுத்துகளில் ஆதிக்கம் கொண்டுள்ள சூரியன் நம் உடல் உறுப்பில் உடல் உறுப்பில் பல் - வலது கண்- இருதயத்தையும் ஆட்சி செய்கிறார் . இப்படி பல்-   - கண் - இருதயம் - போன்றவற்றை ஆட்சி செய்யகூடிய  சூரியனின் A , I , J ஆதிக்க எழுத்தில் ஒரு பிறந்த குழந்தையின்  பெயர்  ஆரம்ப எழுத்தாக அமைந்து - நொண்டி - முடவன் - என்று சொல்ல கூடிய சனிபகவானுக்கு உரிய 8 ம் எண்ணில் அந்த பிறந்த குழந்தை பெயரின் மொத்த கூட்டு எண்கள் அமைந்து விட்டால் நிச்சயம் பல்-   - கண் - இருதயம் - போன்ற உடல் உறுப்பில் ஊனம் என்று சொல்ல கூடிய குறைபாடு அந்த குழந்தைக்கு உண்டாகும் .



அதேபோல் நம்முடைய மனத்தையும் - உடல் உறுப்பில் வலது கண்ணையும் - நம் உடலில் தோல் பகுதியையும் 2 ம் எண்ணுக்கு உரிய சந்திரன் ஆட்சி செய்கிறார் . சந்திரனின் ஆதிக்க  எழுத்தான B , K , R ,  போன்ற எழுத்துகளில் ஆரம்ப எழுத்தாக ஒரு  குழந்தையின் பெயர் ஆரம்பித்து  பெயரின் மொத்த கூட்டு எண்கள்  சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் அமைந்து விட்டால் அந்த குழந்தை வளர வளர அதன் மன வளர்ச்சியில் ஒரு மந்தமான சூழ்நிலை உண்டாகும் . தோல் - கண் போன்ற உடல் உறுப்புகளில் பிணியும் - குறைபாடும் - ஊனமும் உண்டாகும் . 

அடுத்து உடல் உறுப்பில் வலது காதையும் - பொருளாதார வளர்ச்சிக்கு காரண கர்த்தாவும் - ஆரோக்கியமான உடல் அமைப்புக்கு காரகம் வகிக்ககூடிய குரு பகவானின் ஆதிக்க எழுத்தான C, G, L, S போன்ற ஆரம்ப எழுத்துகளில் ஒரு குழந்தையின் பெயர் ஆரம்பித்து - பெயரின் மொத்த கூட்டு எண்கள் சனி பகவானின் 8 ம் எண் ஆதிக்கத்தில் முடிந்தால் அந்த குழந்தைக்கு காது சம்பந்தமான பிணியும் - குழந்தை வளர வளர அதன் இளமை பருவத்தில் காசு பணம் போன்ற பொருளாதார வளத்தில் பற்றா குறையும் - உடல் ஆரோக்கியத்தில் எதற்கு எடுத்தாலும் நோயை பற்றிய ஒரு வித பயமும் அந்த குழந்தைக்கு உண்டாகும் . 


உடல் உறுப்பில் கால் பாதங்களை ஆட்சி செய்கிற ராகுவின் ஆதிக்க எழுத்தான D- M- T - போன்ற எழுத்துகளில் ஒரு குழந்தையின் பெயர் ஆரம்பித்து  பெயரின் மொத்த கூட்டு எண்கள்  சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் அமைந்து விட்டால் அந்த குழந்தையின்  எதிர்காலத்தில் நிச்சயம் காலில் ஊனம் உண்டாகும் . அல்லது கால் சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கும் . 

நம் உடல் உறுப்பில் நரம்பு பகுதியை ஆட்சி செய்கின்ற புதனின் ஆதிக்க எழுத்தான E- H - N -X - போன்ற ஆதிக்க எழுத்தில் ஒரு குழந்தையின் பெயர் ஆரம்பித்துபெயரின் மொத்த கூட்டு எண்கள் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 எண்ணில் அமைந்து விட்டால் அந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் பக்கவாதம் - வலிப்பு நோய் - ஞாபக மறதி - போன்ற நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் - பிணிகள்  உண்டாகும் . 


அதேபோல் நம் உடல் உறுப்பில் ஆண் உறுப்பையும் - பெண் உறுப்பையும் ஆட்சி செய்கிற சுக்ரனின் ஆதிக்க எழுத்தான U - V - போன்ற எழுத்துகளில் ஒரு குழந்தையின் பெயர் ஆரம்ப எழுத்தாக அமைந்து பெயரின் மொத்த கூட்டு எண்கள் 8 ம் எண்ணில் அமைந்து விட்டால் குழந்தையின் எதிர்காலத்தில் அந்த உறுப்பு சம்பந்தப்பட்ட இடங்களில் பிணியும் - பிரச்சனையும் - சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிணியும் உண்டாகும் . 

மேலே சொல்ல பட்ட காரணங்கள் அனைத்தும் ஒரு பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் பொழுது அதனுடைய எதிர்காலம் நோய் நொடி இல்லாமல் - உடல் உறுப்பில் எந்த வித குறைபாடும் இல்லாமல் இருப்பதற்கு படித்து தெரிந்து கொள்ள கூடிய ஒரு பயனுள்ள ஜோதிட விளக்கங்கள் ஆகும். 

இந்த உதாரணங்கள் பிறந்த குழந்தைக்கு மட்டுமல்ல - வயது வந்தவர்களுக்கும் கூட பொருந்தும்.  மேலே சொன்ன அமைப்புகளில் ஒருவரின் பெயர் அமைந்துவிடாமல் பார்த்து கொண்டு வளமான - அனைத்து விதத்திலும் சந்தோஷமான வாழ்க்கையை அமைத்து கொண்டு வளம் காணுங்கள் . 
                                            
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328