Showing posts with label பில்கேட்ஸ் பெயர் அமைப்பு ?. Show all posts
Showing posts with label பில்கேட்ஸ் பெயர் அமைப்பு ?. Show all posts

Friday, February 16, 2018

பில்கேட்ஸ் பெயர் கொண்டவர்கள் எல்லாம் பணக்காரர் ஆக முடியுமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர். இராவணன் BSC

0 comments
                                                           தாயே பூமாதேவி

சாதாரண மனிதனையும் சக்கர வர்த்தியாக்கும் அதிர்ஷ்ட எண்களும் இருக்கிறது . அதே சமயத்தில் சக்கரவர்தியாய் இருக்கும் ஒருவனை ஆண்டியாக்கும் எண்களும் இருக்கிறது . ஆபத்து நிறைந்த எண்களும் இருக்கிறது . அதே சமயத்தில் அழிவை தரும் துரதிர்ஷ்டம் கொண்ட எண்களும் இருக்கிறது 
ஒரு மனிதனின் பெயரில் நியூமராலஜி எண்ணோ  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணோ அதிர்ஷ்டம் அற்ற துரதிஷ்ட மான எண்களில் அமைந்திருந்தாலும் அவரது ஜாதகத்தில் அந்த துரதிர்ஷ்டம் கொண்ட எண்களுக்கு உரிய கிரகம் யோகம் தரக்கூடிய கட்டாய நிலைமையில் இருந்தால் அந்த ஜாதகர் பெயர் அமைப்பு அதிர்ஷ்டம் அற்ற எண்களில் அமைந்திருந்தாலும் அவர் ராஜ யோக அமைப்பை பெற்று அவர் வாழவேண்டும் .


அதே சமயத்தில் பிறந்த தேதிக்குரிய கிரகமும் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகமும் - பிறந்த தேதிக்கு உரிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் அவர்களுடைய ஜாதகத்தில் யோகம் தரக்கூடிய செழுமையான இடத்தில் இருந்தாலும் அவர் ராஜ யோக அமைப்பை பெற்று வாழ்வார் .

உலகின் முதல் பணக்காரர் பில்கேட்ஸ் . இவரின் முழு பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ் (WILLIAM HENRY GATES ) இவர்  பிறந்த தேதி 28 - 10 - 1955.

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வரும் வருகிறார். 1999 ம் ஆண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்கள் . இப்பொழுது 2018 காலகட்டங்களில் அவரின் சொத்து மதிப்பு கணக்கில் அடங்காது .

பிறந்த தேதி 28 - 10 - 1955 .
பிறந்த தேதி 28 என்பது சூரியனின் ஆதிக்க எண்
பிறந்த தேதி மாதம் வருடம் இவைகளின் கூட்டு எண் 22. இது ராகுவின் எண் .

பில்கேட்ஸ் அவர்களின் பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .  

4  6  =  ஹீப்ரு பிரமிடு எண் .
3  1 5
5 7 3  2
2 3 4  8 3
1 1 2 2 6 6
1 9 1 1 1 5  1 
2 8 1 0 1 9 5 5 .

இனி பில்கேட்ஸ் அவர்களின் ஜாதகத்தை காண்போம் . 

https://bhakthiplanet.com/wp-content/uploads/2012/08/Bill-gates.jpg

பில்கேட்ஸ் அவர்களின் பிறந்த தேதி இதில் 22 - 10 - 1955 என்று இருந்தாலும் அவரின் சரியான பிறந்த தேதி 28 - 10 - 1955. இதில் பிறந்த தேதிக்கு உரிய 28 ம் எண்ணுக்குரிய சூரியன் துலாம் ராசியில் நீச்சம் என்ற கெட்ட  பலனை அடைந்து நல்ல பலனை கொடுக்காமல் போனாலும் நீச்சம் அடைந்த துலாம் ராசிக்கு உரிய கிரகமான சுக்ரன் ஆட்சியாய்  இருப்பது  ஒரு வகையான ராஜ யோகத்தை கொடுத்து அவர் உலகின் பணக்காரர் என்ற பெருமைக்கு வழிவகுக்கிறது.

அடுத்து அவர் 28 - 10 - 1955 பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு 46 எண்ணுக்குரிய சூரியன் துலாம் ராசியில் நீச்சம் என்ற கெட்ட  பலனை அடைந்து நல்ல பலனை கொடுக்காமல் போனாலும் நீச்சம் அடைந்த துலாம் ராசிக்கு உரிய கிரகமான சுக்ரன் ஆட்சியாய்  இருப்பது  ஒரு வகையான ராஜ யோகத்தை கொடுத்து அவரின் ராஜ யோக அமைப்பிற்கு மேலும் வலு சேர்க்கிறது . 


அதேபோல் பில்கேட்ஸ் என்ற பெயரின்  எண்ணை காண்போம் . 

B I L L   G A T E S
2 1  3 3   3  1  4  5 3   = 26 . இது நியூமராலஜி எண்

3  5  = ஹீப்ரு பிரமிடு எண் .
6  6  8
2  4 2 6
3  8 5 6  9
8  4 4 1  5  4
7 1 3  1  9  5  8
3 4 6  6  4  5  9  8
2 1 3  3  3  1  4  5 3
B I L L  G A T E S

பில்கேட்ஸ் என்ற பெயரின் நியூமராலஜி எண் 26, இது போராட்டத்தையும் தோல்வியையும் சோதனைகளையும் தரும் எண்ணாகும் .  அப்படி இருந்தும் அவர் உலகின் பெயர் அறியக்கூடிய நபராக இருப்பதற்கு காரணம் அவருடைய ஜாதகத்தில் 26 ம் எண்ணுக்குரிய சனிபகவான் உச்சம் என்ற யோகமான அமைப்பை பெற்று ராஜ யோக அமைப்பை பெற்று இருப்பதால் அவரின் பெயர் உலகம் முழுதும் அறியப்படுவதற்கு ஒரு காரணம் . 

அதேபோல் பில்கேட்ஸ் என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 35.  இதுவும் ஒரு துரதிர்ஷ்டமான எண்ணாகும் . இந்த 35 ம் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பில்கேட்ஸ் பெயரில் வந்தபொழுதும் அவர் ராஜயோக அமைப்பில் கொடி கட்டி பறக்கிறார்  என்றால் அந்த 35 ம் எண்ணுக்குரிய சனிபகவான் அவருடைய ஜாதகத்தில் துலாம் ராசியில் உச்சம் என்ற ஒரு ராஜயோக அமைப்பை பெற்று உலகின் பணக்காரர் என்ற அந்தஸ்தை கொடுத்திருக்கிறது.


இது இத்தனையும் இருக்க ஒருவர் மிகவும் உலகம் முழுதும் அறியப்படும் நபராக புகழ் பெறுவதற்கும் அவர் ராஜ யோக அமைப்பை பெற்று வாழ்வதற்கும் பூர்வ ஜென்ம ஸ்தானாதிபதி என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு 5 ம் இடத்துக்கு அதிபதி கேந்திரம் - திரிகோணம் - ஆட்சி - உச்சம்  நீச பங்க ராஜ யோகம் ஏற்பட்டாலும் அவர் உலகத்தின் பெயர் புகழ் பெற்றவராக  நபராக அறியப்படுவார் .

பில்கேட்ஸ் அவர்களின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு ஐந்தாம் இடத்துக்கு அதிபதியான புதன் அவருடைய சொந்த வீடான கன்னிராசியிலேயே உச்சம் அடைந்து அவரை உலகத்தின் பெரும் பணக்காரர் என்று அறியப்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டார். 

பெயரின் நியூமராலஜி எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்டம் அற்ற எண்களில் அமைந்திருந்தாலும் அந்த அதிர்ஷ்டம் அற்ற எண்ணுக்குரிய கிரகம் அவர்களுடைய ஜாதகத்தில் யோகம் தரக்கூடிய கேந்திரம் - திரிகோணம் - ஆட்சி - உச்சம் - நீச பங்க ராஜ யோகம் ஏற்பட்டாலும் அவருக்கு ராஜயோக அமைப்பு ஏற்படும் . 

அதேபோல் அவர் பிறந்த தேதிக்குரிய கிரகம் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகம் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய கிரகம்
கேந்திரம் - திரிகோணம் - ஆட்சி - உச்சம் - நீச பங்க ராஜ யோகம் ஏற்பட்டாலும் அவருக்கு ராஜயோக அமைப்பு ஏற்படும் . 
உங்களின் பெயர் அமைப்பு சரி இல்லை என்றாலும் உங்களின் பெயர் அமைப்புக்கு உரிய கிரகம் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு உரிய கிரகம் யோகம் தரக்கூடிய நிலைமையில் இருந்தாலும் உங்களுக்கும் ராஜ யோகம்தான் . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328