Showing posts with label கடன் பிரச்சனை தீர. Show all posts
Showing posts with label கடன் பிரச்சனை தீர. Show all posts

Thursday, June 16, 2016

கடன் பிரச்சனை தீர நியுமராலஜிபடி அதிர்ஷ்ட பெயர் திருத்தம் முறை பலன் தருமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC .

0 comments
                                   தாயே பூமாதேவி 

ஜோதிட ரீதியாக ஒருவனை கடன் காரனாக ஆக்கக்கூடிய சூழ்நிலையை அவனுடைய ஜாதக கிரக அமைப்புகள் ஏற்படுத்தி கொடுக்கின்றன . ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாம் இடத்தை கொண்டு கடன் பிரச்சனையை பற்றி அறியலாம் . பொதுவாக  பொருளாதார ரீதியாக கடன் படும் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும்  உண்டு . அந்த கடன் படும் சூழ்நிலை மேலும் - மேலும் - உயர்ந்து கொண்டே போவதற்கு காரணம் மனிதனின் பெயர் அமைப்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம் . 

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும்  கடன் பிரச்சனை இருந்தாலும் அந்த கடன் பிரச்சனை தீரும் சூழ்நிலை ஒரு கால கட்டத்தில் உருவாகி அதிலிருந்து விடுபட்டு அவன் நிம்மதியாக இருப்பான் . ஆனால் அந்த கடன் பிரச்சனை தீராமல் மேலும் - மேலும் - கடன் வாங்கி - அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஒருவனுக்கு உருவாகிறது என்றால் - அதற்க்கு காரணம் அவர்களுடைய பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் - இவற்றிக்கு நன்மை தரக்கூடிய வகையில் அவருடைய பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும் . 

ஒருவருடைய ஜாதகத்தில் அவருக்கு கடன் பிரச்சனை இருக்கும் என்ற கிரக அமைப்புகள் இருந்தாலும் அந்த கடன் சுமையை அதிகரிக்க செய்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுப்பது அவனுடைய பெயரின் கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ஒரு காரணமாக அமையலாம் .   

இந்தியாவின் பிரபல தொழில் அதிபரும் உலகம் போற்றும்  யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவரும் . - கோவா மாநிலத்தின்  பிரபல தொழில் அதிபரும்- ராஜ்ய சபா எம் . பி . யுமான விஜய் மல்லையா   (VIJAIY MALLYA  ) 6 - 5 - 2016 இன்றைய கால கட்டத்தில் தன்னுடைய பல்வேறு தொழில் நிறுவனங்களுக்காக வங்கிகளில் 9000 ஆயிரம் கோடி (ஒன்பதாயிரம் கோடி ) கடன் பெற்று சிக்கலில் தவிக்கிறார் என்றால் அவருடைய பெயர் அமைப்பும் ஒரு காரணம் என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை . 

பொதுவாக ஒருவருக்கு கடன் பிரச்சினை அவருடைய ஜாதகப்படி அமைந்திருந்தாலும் அந்த கடன் சுமையை அதிகரித்து அதன் மூலம் அவருக்கு அளவுக்கு அதிகமான பிரச்சனையை உண்டு பண்ணகூடியது அவருடைய பெயர் அமைப்பு என்று ஏற்கனவே நான் சொன்னதை நினைவு கூற வேண்டும் . 
இங்கே விஜய் மல்லையா  (VIJAY MALLYA ) பிறந்த தேதியின் விவரங்களை காண்போம் . 


பெயர் : VIJAY MALLYA (விஜய் மல்லையா  ) 
பிறந்த தேதி : 18 - 12 - 1955
பிறந்த தேதியின் கூட்டு எண் : 18 (1 +8 = 9) =  9 ம் எண் 
பிறந்த தேதியின் கூட்டு எண் : 1 + 8 + 1 + 2 +  1+ 9 +5 + 5 = 32 = 3 + 2 = 5 ம் எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . 

7     9   =  16
4     3   6
3    1   2  4
3   9   1  1  3
9  3   6  4  6  6
9  9  3  3  1  5 1
1  8  1  2  1  9 5 5

விஜய் மல்லையா(VIJAY MALLYA) பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 79.
விஜய் மல்லையா (VIJAY MALLYA) என்ற பெயரின் நியுமாராலஜி கூட்டு எண் 23.

4 5  =   இது ஹீப்ரு பிரமிடு எண்ணாகும் .

6 7 7
9 6 16
6 3 3  7   8
4 2  1 2 5 3
3 1 1  9  2  3  9
4  8  2 8 1 1 2 7
9  4 4 7 1 9  1 1 6
7 2 2 2 5 5  4  6 4 2
6 1 1 1 1 4   1  3 3  1 1
V I J A I  M A L L Y A

விஜய் மல்லையா (VIJAY MALLYA) என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 45.


இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு 79 எண்ணிற்க்கான பலனை காண்போம் . இந்த 79ம் எண்ணிற்க்கான பலன்களை ஏற்கனவே எனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளேன் .

இந்திர ஜால வித்தை ஸர் ச மோஹனம் - ஞானம் என்றெல்லாம் இந்த எண் பற்றி மந்திர நூல்களில் விளக்கப்பட்டுள்ளது . ஆனால் இந்த எண்ணில் பெயர் வைத்து கொண்டால்  ஆரம்ப நிலை ஷீணமடையும் (மங்கும் ) . இந்த எண் ஆதிக்க நேயர்களுக்கு சாமார்த்தியமும் அதிகப்படியான வீரதீரமும் , தளராத முயற்சியும் தொடர்ந்த வைராக்கியமும் - வெற்றியையும் - மேன்மையையும் தரும் . ஜன வசியம் , ஸர்வ ஜன மோகனம் பல தரப்பட்ட மனிதர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும் . நிலையான அதிர்ஷ்டமும் ஷேமமான நிலையும் , திடமான வெற்றியும் , அற்புதமான மனிதர் என்ற வித்யா - விந்தைகளும் உண்டாகும் . பெரும் பதவியில் உள்ளவர்களும் ஆரம்பத்தில் கீழிறங்கி பிறகு மேன்மையான நிலையை பெறுவர் . குடும்ப வாழ்க்கையில் குழப்பமும் சரியாக அமையாமல் போவதும் உண்டு . அபிராமி பட்டர் 79 பாடல் பாடியவுடன் பராசக்தியின் தரிசனம் பெற்றது போல தொடர்ந்த சரியான முயற்சியாலும் தீவிர வழிபாட்டாலும் பரம்பொருளின் அருளை பெறுவார் .

2 , 6, ம் எண் நேயர்கள் அதாவது 2, 11 , 20, 29, 6, 15 , 24, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் 2 . 6 , க வருபவர்களுக்கு மட்டுமே இந்த 79 ம் மேன்மையும் - மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு சிரமமும் உண்டாகும் .

இங்கே விஜய் மல்லையா VIJAY MALLYA ) பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 79.  இது ஒரு துரதிர்ஷ்டமான எண் .

இவர் பெயரின் நியுமராலஜி கூட்டு எண் 23.

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 45.

இவை இரண்டுமே அதிர்ஷ்டகரமான ராஜ யோகமான எண்ணில் அமைத்திருந்தாலும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்க்கு நன்மை தரக்கூடிய வகையில் அமையவில்லை .



கடன் பிரச்சனை என்பது மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சகஜமான விஷயமாகும். இதை நீங்கள் ஜோதிட ரீதியாக எடுத்து கொண்டு பணம் சம்பாதிக்க பார்க்கிறீர்களா ? என்று என்னை நீங்கள் கேட்டு விடாதீர்கள் .

கடன் என்ற சொல்லை ஆங்கிலத்தில்  LOAN என்று சொல்வார்கள் . இந்த LOAN என்ற சொல்லின் நியுமராலஜி கூட்டு எண் ( L =3 )( O = 7 )( A = 1) ( N = 5 ) இந்த எண்களின் மொத்த கூட்டு தொகை 3+ 7 + 1+ 5 = 16. என்று வரும் . விஜய் மல்லையா பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 79 என்று வந்து இதன் கூட்டு தொகை 16 என்று வருவதால் அவர் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார் என்றே சொல்ல வேண்டும்

எந்த ஒரு தேதியில் பிறந்திருந்தாலும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  துர்அதிர்ஷ்டமான எண்ணில் அமைந்து விடுவது விதி பலன் , இதை யாராலும் மாற்ற முடியாது , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் மோசமான பலனை தரக்கூடியதாக  அமைந்து விட்டாலும் கூட ஒருவருக்கு அமைய கூடிய பெயரை பெயரை பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு சாதகமான முறையில் பெயரை அமைத்து கடன் இல்லாத மகிழ்சிகரமான சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துகொள்ளுங்கள் 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா?பதவி உயர்வு கிடைக்கவில்லையா? காதல் திருமணம் கைகூடவேண்டுமாவெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328