Showing posts with label வாகன யோகம் உங்களுக்கு. Show all posts
Showing posts with label வாகன யோகம் உங்களுக்கு. Show all posts

Wednesday, October 7, 2020

வாகன யோகம் உங்களுக்கு இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                          

ஒருவருடைய ஜாதகத்தில்  லக்னத்துக்கு 4 ம் இடத்தில சுப கிரகங்கள் இருந்து அந்த 4 ம் இடத்துக்கு அதிபதி கேந்திர திரிகோணம் என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு 1 -  4 -  7 -   10  - 5 -  9  போன்ற இடங்களில் இடங்களில் இருந்தால் அவன் வாகன சுகமுடையவன் '

வாகனகாரன் என்று சொல்லக்கூடிய சுக்கிரனுடன் லக்னத்துக்கு 4 ம் வீட்டுக்கு உடைய கிரகம் மேலே சொன்ன இடங்களில் இருந்தாலும் அவனுக்கு வாகன யோகம் உண்டாகும் . 


யானையை போன்ற வாகனமும் செல்வமும் :

லக்னத்துக்கு 4 ம் வீட்டுக்கு உடைய கிரகம் 9 ம் இடத்திலும் 9 ம் வீட்டுக்கு அதிபதி 1 - 4 - 7 - 10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் இருந்து அந்த இடம் சுப கிரகங்களின் வீடாய் இருந்தால் பல்லக்கு மிகுந்த செல்வமும் யானை வாகனம் உடையவன்  என்று ஜோதிடம் கூறுகிறது 

யானை வாகனம் என்று சொல்லும்பொழுது இந்த காலகட்டத்தில் லாரி - பஸ் - போன்ற பெரிய வாகனங்களை எடுத்துக்கொள்ளவேண்டும் . 

லக்னத்துக்கு 4 ம் வீட்டுக்கு அதிபதியுடன் சுக்ரன் கூடி இருந்தாலும் அல்லது 4 ம் வீட்டுக்கு அதிபதி - சுக்ரன்  இவர்கள் 1 - 4 - 7 - 10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் அந்த ஜாதகனிடம் பலவகையான வாகனங்கள் இருக்கும் . 


                         அனைவரும் போற்றத்தக்க வாகன யோகம்  :

4 ம் வீட்டுக்கு உரிய கிரகமும் சுக்ரனும் ஆட்சி நட்பு உச்சம் போன்ற நிலைகளில் இருந்தாலும் அல்லது 1 - 4 - 7 - 10 - 5 - 9 - போன்ற கேந்திர  திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அந்த ஜாதகன்  அனைவரும் போற்றத்தக்க வாகனத்தை பெறுவான் . 

வாகன விருத்தி உடையவன் :

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு 3 ல் சுக்ரன் அல்லது சுக்ரனுக்கு 3 ல் சந்திரன் இருந்தாலும்  அல்லது சுக்ரனும் சந்திரனும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டாலும் அந்த ஜாதகனுக்கு பலவகையான வாகன யோகங்கள் உண்டாகும் மேலும் அந்த ஜாதகனுக்கு வாகன யோக விருத்தியும் உண்டாகும் . 

பலரும் புகழும்படியான வாகன யோகம் :

4 ம் வீட்டுக்கு 9 ம் வீட்டுக்கு உரிய கிரகங்கள் 1 - 4 - 7 - 10 - 5 - போன்று கேந்திர திரிகோணங்களில் இருந்து நல்ல கோள்கள் பார்த்தாலும் அல்லது நல்ல கோள்கள் சேர்ந்தாலும் பலரும் புகழும் படியான வாகன யோகத்தை பெறுவான் என்று ஜம்பு மகரிஷி கூறுகிறார் . 


                                      வாகன யோகத்துடன் நீண்ட ஆயுள் :

சுக்ரனுக்கு 3 அல்லது  7 ல் சந்திரனும் அலல்து சந்திரனுக்கு 3 அல்லது 7 ல் சுக்ரனும் இருந்தால் அந்த ஜாதகம் மேன்மை பொருந்திய வாகனத்தை அடைவான் . 

4 வீட்டுக்கு அதிபதி சுபகிரகங்களுடன் கூடி சந்திரனுக்கு 1 - 4- 7 - 10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு வாகன யோகமும் பெற்று செல்வமும் அறிவாற்றலும் பெற்று இந்த உலகில் அரசனை போன்று வாழ்வான் என்று ஜோதிடம் கூறுகிறது . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328