வாஸ்து முறையில் வீட்டை கட்டும் நாம் செப்டிக் டேங்க் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் விடுகிறோம் . செப்டிக் டேங்க் எங்கே இருந்தால் என்ன என்கிற பலரது எண்ணம்தான் அதற்க்கு காரணம் .
செப்டிக் டேங்கை மனையின் வடமேற்கு அதாவது வாயு மூலையில் வடக்கு பகுதியில் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் இருந்து தகுந்த இடைவெளி விட்டு காப்பு சுவரையோ கட்டடத்தின் சுவரையோ தொடாமல் அமைக்க வேண்டும் .
வீடு அமைந்துள்ள காலி மனையின் வடக்கு பகுதியை மேற்கிலிருந்து கிழக்காக 45 அடி என்று வைத்துக்கொண்டோம் என்றால் இதனை 9 சம பிரிவுகளாக பிரித்துக்கொள்ளவேண்டும் .
இப்படி பிரித்தபின்பு 2 வது பகுதியில் தொடங்கி 3 வது பகுதி வரையிலான இடத்தில செப்டிக் டேங்க் வரலாம் . இதுவே வாஸ்து சாஸ்திர முறைப்படி செப்டிக் டேங்க் அமைப்பதற்கு மிகவும் சிறப்பான முறை .
செப்டிக் டேங்கை எக்காரணம் கொண்டும் சரியான வடகிழக்கு அதாவது ஈசானிய மூலையிலோ தென்கிழக்கு அதாவது அக்னி மூலையிலோ தென்மேற்கு அதாவது கன்னி மூலையிலோ அமைத்துவிடக்கூடாது . அவ்வாறு அமைப்பது தீய பலன்களை அதிகரிக்கும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment