ஓம் சிவ சக்தி
தற்பொழுது உள்ள உலக சூழ் நிலையில் ஒருவன் தனக்கு வரக்கூடிய மனைவி அழகானவளாகவும் , நல்ல குணமுள்ளவளாகவும் , எந்த விதத்திலும் கணவனுக்கு துரோகம் நினைக்காத மனைவியாக அமைய வேண்டும் என்பது பலருடைய கனவாகும் . எது எப்படி இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகப்படி உள்ள கிரக அமைப்பிற்கு ஏற்ப அவருக்கு அமைய கூடிய மனைவியின் செயல்பாடுகள் இருக்கும்.
ஒருவனுக்கு அமைத்திருக்க கூடிய மனைவி கற்பு ரீதியாக கணவனுக்கு துரோகம் செய்கிறாள் என்றாள் அவனுடைய ஜெனன ஜாதகத்தில் இருக்க கூடிய கெட்ட கிரக அமைப்புகளின் செயல்பாடுகள் அவனுடைய மனைவி தவறு செய்வதற்கு இழுத்து செல்லும் .
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு 7 ம் இடத்து அதிபதி , லக்னத்துக்கு 6 ம் இடத்தில் அமர்ந்து , சுபகிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்து சூரியன் , ராகு , கேது. சனி , செவ்வாய் , போன்ற கிரகங்களுடன் இருந்தால் அவருடைய மனைவி அவருக்கே தெரியாமல் சோரம் போவாள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
தனுசு மீனம் போன்றவை லக்னமாக அமைந்து புதன் பாவிகளோடும் நீசமாகவும் அஸ்தமனமாகவும் இருந்தாலும் லக்னத்துக்கு 7 ம் இடத்தில பாவிகள் இருந்து அந்த 7 க்கு உடைய கிரகம் பகை வீட்டில் இருந்து , 7 ம் இடத்தையோ , 7 ம் வீட்டுக்கு உரிய கிரகத்தை மேலும் பாவ கிரகங்கள் பார்க்கும் கிரக அமைப்பை கொண்டுள்ள சாதகனின் மனைவி கற்பு நெறி தவறுவதால் அந்த சாதகனின் குலம் எவ்வளவு உயர்ந்தது ஆயினும் இவளால் தாழ்ச்சியை அடையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
லக்னத்துக்கு 7 ம் இடத்து அதிபதி குருவாக இருந்து பாவிகளுடன் கூடி தீய கிரகங்களின் வீடுகளான மேஷம் சிம்மம் விருச்சிகம்மகரம் கும்பம் போன்ற வீடுகளில் இருந்து சனியின் பார்வை பெற்று இருந்தால் அந்த சாதகனின் மனைவி நல்லவள் போல் தன்னை காட்டி கொண்டு சாமார்த்தியமாக சோரம் போவாள் . இது மிதுன லக்னகாரர்களுக்கும் கன்னி லக்னகாரர்களுக்கும் பொருந்தும்.
லக்னத்துக்கு 7 குடையவன் குருவாகி பாவ ராசியில் இருந்து பாவிகளால் பார்க்கப்பட்டு , இரண்டாம் இடத்தில் இருக்க அவனுடைய மனைவி கணவனை சார்ந்தவர்களுடன் உறவு கொள்வாள்.
இது இப்படி இருக்க லக்னத்துக்கு 7 ம் அதிபதி சுக்கிரனாகி , பாவிகளுடன் கூடியும் பார்க்கப்பட்டும் , பாவிகள் அல்லது பாவ கிரகங்களின் அங்கிசையில் இருக்கும் கிக அமைப்பை கொண்டுள்ள ஜாதகனின் மனைவி காம வெறி மிகுந்தவளாகி சாமர்த்தியமாக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொண்டு பல ஆண்களுடன் தொடர்பு கொள்வாள்.
இதற்கும் மேலாக லக்னத்துக்கு 7 ம் அதிபதி பாவிகளுடன் 2 ம் இடத்தில் இருந்து அதை செவ்வாய் பார்க்க ஜாதகனின் மனைவி செய்யும் விபசாரத்தினால் பிள்ளைகள் உண்டு. லக்னாதிபதி 6, 8, 12, போன்ற இடங்களில் இருந்து 7 ம் அதிபதி மேற்கூறியவாறு இருந்தால் அவன் மனைவி செய்த விபசாரத்தினால் இரண்டு பிள்ளைகள் இருக்கும்.
இதை கீழ் கண்ட ஜோதிட பாடல் விளக்குகிறது.
ஏழாம் இடத்தான் பாவருடன்
இரண்டில் இருக்க செய் பார்க்க
சூழும் விபசார தொழிலால்
சுதனும் உண்டாம் சொல்வர் .
வாழும் லக்னத்து துடையோனும்
வரவா ரெட்டில் பன்னிரெண்டில்
தாழ்வாய் இருக்க பெண்ணிரண்டு
தானும் கொள்வான் தப்பாதே .
என்று இந்த ஜோதிட பாடல் விளக்குகிறது . ஆதலால் ஒருவனுக்கு கற்புள்ள மனைவிஅமைவதும், அமையாமல் போவதும் அவர்களின் முன் ஜென்ம பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அமைத்திருக்கும் அவர்களின் ஜெனன ஜாதகத்துக்கு ஏற்றாற்போலவே அமையும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment