Showing posts with label அசுவினி - மகம் - மூலம் நட்சத்திர படிப்பு ?. Show all posts
Showing posts with label அசுவினி - மகம் - மூலம் நட்சத்திர படிப்பு ?. Show all posts

Friday, November 2, 2018

அசுவினி - மகம் - மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம் ? ஆன்மீக ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                      
college students க்கான பட முடிவு 
அசுவினி மகம் மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஏழு வருடங்கள் கேது தசை நடைபெறும் . அதுவும் மேற்கூறிய நட்சத்திரங்களின் முதல் பாதத்தில் பிறந்தால் ஏறக்குறைய ஏழு வயது வரை கேது தசையும் இரண்டாவது பாதமானால் ஐந்தேகால் வயது வரை கேது தசையும் மூன்றாவது பாதமானால் மூன்றரை வயதுவரை கேது தசையும் நான்காவது பாதமானால்  ஏறக்குறைய ஒன்றே முக்கால் வயது வரை கேது தசை நடந்து அடுத்து இருபது வருட சுக்கிர தசை ஆரம்பித்து விடும் . 
 
எப்படி இருப்பின் கேதுவின் நட்சத்திரமான அசுவினி மகம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் தங்கள் பள்ளி கல்லூரி வாழ்க்கையை சுக்கிர தசையில்தான் கழிப்பர் . எனவே இவர்களுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருந்தால் கல்லூரிகளில் இவர்கள் சுக்கிரன் சம்பந்தமான பாடங்களை எடுப்பார்கள் . இவர்களின் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால் கல்விக்கு அரசாங்க உதவி கிடைக்கும் . ராகு . 12 அதிபதி சுப பலம் பெற்றால் வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பார்கள் . 
 தொடர்புடைய படம்
இதே சுக்கிரன்  பலமிழந்து காணப்பட்டால் இந்த மாணவர்கள் படுத்தும் பாடு  சொல்லி முடியாது . பள்ளி கல்லூரி செல்வதாக சொல்லிவிட்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவர் . சுக்கிரன் 5 ம் அதிபதி 7 ம் அதிபதியின் சம்பந்தம் பெற்றிருந்தாலும் ஜாதகத்தில் புதன் கேது சம்பந்தம் பெற்றிந்தாலும் காதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி கொள்வர் . ஏனெனில் சுக்கிரன் காலத்திரக்காரன்  ஆதலால் அவர் கெட்டு இருந்து தசை நடந்தால் அது சம்பந்தமான குறைகளை ஏற்படுத்துவார் . 

சுக்கிர தசை நடக்கும் மாணவர்களோ மாணவிகளோ சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் நன்மை செய்யும் விதத்தில் பலமாக இருந்தால் தங்கள் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் நாடகம் இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசை வெல்வார்கள் . எப்பொழுதும் தங்களை அழகுபடுத்தி கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள் . 
college students க்கான பட முடிவு

அதே சமயத்தில் சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய நிலையில் இருந்து சுக்கிர தசை நடக்கும்பொழுது மாணவர்களுக்கு இசை நாடகம் திரைப்பட கல்லூரிகளில் கல்வி விவசாய கல்வி பேஷன் டிசைனிங் ட்ராவல்ஸ் சம்பந்தமான கல்வி தகவல் தொடர்பு சம்பந்தமான கல்வி மது சம்பந்தமான கல்வி பல்பொருள் அங்காடி படிப்பு அலங்கார பொருள்கள் சம்பந்தமான கல்வி  ரத்தினம் நகைகள் பற்றி ஆய்வு செய்யும்  படிப்பு வாகனம் சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் கல்வி  உணவு சம்பந்தமான படிப்பு  அணைக்கட்டு சம்பந்தமான அணைக்கட்டு படிப்பு  பிளாஸ்டிக் போன்ற பொருள்களை பற்றிய கல்வி  உள்ளிட்ட துறைகளில்  நன்கு படித்து பட்டம் பெறுவர் . 

எப்படி இருந்தாலும் குட்டி சுக்கிர தசை என்று சொல்லக்கூடிய ஆரம்ப சுக்கிர தசையில் தங்கள் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்வது நல்லது .



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328