Showing posts with label சந்திர கிரகணத்தால் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் ?. Show all posts
Showing posts with label சந்திர கிரகணத்தால் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் ?. Show all posts

Friday, November 19, 2021

சந்திர கிரகணத்தால் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - கார்த்திகை மாதம் 03ம் நாள் - வெள்ளிக்கிழமை - பௌர்ணமி திதி - க்ருத்திகை நக்ஷத்ரத்தில் - சந்திர கிரகணம் நிகழ்கிறது.  
பௌர்ணமி தினமான நவம்பர் 19ஆம் தேதியான இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது.

பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். சுமார் 580 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் - பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும்.

வெள்ளிக்கிழமையான இன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் தமிழ் பஞ்சாங்கப்படி பகல் நேரத்தில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கி மாலை 5.32 மணி வரை நீடிக்கிறது. 6 மணி நேரம் மிகநீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது.

நவ கிரகங்களும் 12 ராசிகளை ஆளுகின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் தவிர நிழல் கிரகங்களான ராகு கேதுவும் மனிதர்களின் வாழ்க்கையில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சூரியன், சந்திரன் உடன் ராகு கேது இணைந்திருக்கும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இன்றைக்கு நிகழும் சந்திர கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இந்த கிரகணம் ஐரோப்பாவின் வட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் நன்றாகத் தெரியும். வட கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா போன்ற பகுதிகளில் மிகவும் தெளிவாக பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும். 

ஜோதிட சாஸ்திரத்தின்படி சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியன மிகவும் முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும். கிரகணம் நிகழும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பரிகாரங்கள் சொல்லப்படுவதுண்டு. இன்றைய தினம் பரிகாரம் செய்யத் தேவையில்லை என்றாலும் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் நிகழும் என்று பார்க்கலாம்.

மேஷம் 

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பானது. பண நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாட்களாக வராத பணம் கைக்கு வந்து சேரும்.

ரிஷபம் 

ராசியில் உள்ள ராகுவால் மன குழப்பம் ஏற்பட்டாலும் சந்திரன் உங்கள் ராசியில் இணைந்திருப்பதால் பணத்தை பத்திரமாக வைத்திருக்கவும். உடல் ரீதியான சில பாதிப்புகள் ஏற்படலாம். 

மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் கிரகண நேரத்தில் வெளியே சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. மகான்கள் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நன்மையை ஏற்படுத்தும். மவுன இருப்பது மன அமைதியை ஏற்படுத்தும். 

கடகம் 

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசி அதிபதி கிரகணத்தின் பிடியில் சிக்கியிருப்பதால் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் கடன் வாங்க நேரிடலாம்.

சிம்மம் 

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். ''

கன்னி 

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே கவனம் அவசியம், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படலாம் கவனம். 

துலாம் 

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உடல் உழைப்பு அதிகரிக்கும் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம். 

விருச்சிகம் 

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. இன்றைய தினம் உங்களின் நிதி நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 

தனுசு 

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்களின் குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 

மகரம் 

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிக்கு திடீர் யோகங்கள் கை கூடி வரும். நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். கும்பம் சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட 

கும்ப ராசிக்காரர்களே, 

இன்றைய தினம் உங்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். அதே நேரத்தில் பண வரவும் அதிகரிக்கும் சேமிப்பும் கூடும். 

மீனம் 

சந்திர கிரகணம் நிகழும் இந்த நாளில் நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வரும். மிகப்பெரிய காரியத்தை சாதிக்கப்போகிறீர்கள். அதற்கான நல்ல நேரம் இன்றே ஆரம்பித்து விட்டது. அனுபவிக்கத் தயாராகுங்கள்.





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328