Monday, September 26, 2022

நியூமராலஜி பெயர் சரியில்லை என்றாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் வாழ்க்கையை உயர்த்தும் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                             

நியூமராலஜிப்படி மனிதனின் பெயர் அமைப்பு சரியாக அமையாவிட்டாலும்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்து விட்டால் அவரின் வாழ்க்கையை ராஜயோக வாழ்க்கையாக அமையும் . 

நியூமராலஜியையும்  ஹீப்ரு பிரமிடு நியூமராலஜியையும்  தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள ஒரு பாச பிணைப்புக்கு ஒப்பிடலாம் . ஒரு குழந்தை தட்டு தடுமாறி எழுந்து நடக்க ஆரம்பிக்கும்பொழுது பெற்ற தாய் எப்படி கை கொடுத்து தூக்கி நிறுத்தி குழந்தை நடப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறாரோ  அதேபோல் தான் நியூமராலஜிப்படி பெயர் சரியான முறையில் அமையாமல் வாழ்க்கையில் தடுமாறும்பொழுது தாயாகிய நான் இருக்கிறேன் உனக்கு ஆதரவாக என்று ஹீப்ரு பிரமிடு எண் வந்து வாழ்க்கையை பிரகாசமாக்கும் . 

நியூமராலஜிப்படி பெயர் எண் சரியில்லாதவர்கள் கூட வாழ்க்கை ராஜயோகமாக  அமைய காரணம் என்னவென்று பார்த்தால் அவர் பெயரின் ஹீப்ரு எண் பிரமாண்டமான வாழ்க்கையை தரும் எண்களில் அமைந்திருக்கும் .  


உதாரணத்திற்கு நியுமராலஜிபடி பெயரின் மொத்த கூட்டு எண்கள் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணில் அமைந்தும் - ஹீப்ரு பிரமிடு நியுமராலஜிபடி அவர் பெயர் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்ணில் அமைந்து வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு சில பிரபலங்களின் பெயரை இப்பொழுது ஆராய்வோம் . இந்தியாவில் தமிழ் நாட்டில் சினிமா துறையில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் பிரபல நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரை ஆராய்வோம்.

2 1 1 1 5 1 2 1 5 4 5 = 28 
R A J I N I K A N T H

இந்த ரஜினிகாந்த் என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை 28 ம் எண்ணில் வரும். நியுமராலஜிப்படி இந்த 28 ம் மிகவும் துர் அதிர்ஷ்டமான எண்ணாகும் . 2 என்ற சந்திரன் வளர்தலும் - தேய்தலும் தன்மையை தருவதாலும் 8 என்ற சனி மிக பெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலைய பிரதிபலிப்பதால் சமச்சீர் நிலையை இந்த 28 ம் எண் தருவதில்லை . 

கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - இந்த எண்ணுக்கு உண்டாகும் . கடன் கொடுத்தால் பணம் திரும்பாமல் போவதும் இந்த 28 ம் எண்ணுக்கு உண்டாகும். ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் போக செய்துவிடும் இந்த 28 ம் எண் . ஆனால் நியுமராலஜிப்படி இந்த 28 ம் எண்ணை பெயரில் பெற்ற ரஜினிகாந்த் அவர்களின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம்.

6   6      -  எண் என்பது ஹீப்ரு பிரமிடு சூட்சும எண் .
2   4  2
6  5  8  3
9  6  8  9 3
8  1  5 3 6 6
3  5  5 9 3 3 3
9  3  2 3 6 6 6 6
5  4  8 3 9 6 9 6  9
3  2  2 6 6 3 3 6  9 9
2 1  1 1 5 1 2  1  5  4  5
R A J I N I K A N T H = 28 என்பது நியுமராலஜி எண் .

இந்த 66 ம் எண் என்பது குரு பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் மிக அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . இந்த 66 ம் எண்ணை பற்றி எகிப்திய சித்திரங்களில் அரசாட்சி செய்யும் ராணியும் - தன லாபமும் என்ற வாசகத்துடன் சேர்ந்த சித்திரங்கள் காணப்படுகிறது . ஆச்சரியப்படும்படியான அற்புதமான நாவன்மை - பேச்சுத்திறன் - சங்கீத ஞானம் - அரசாங்கம் - அரசியல் துறைகளில் கௌரவத்தை கொடுக்கும் . சுக  சந்தோசம் - போக ஆனந்தம் - ஆடம்பர பொருட்களால் லாபம் போன்றவற்றை கொடுக்கும்.

6 என்ற சுக்கிரனும் 6 என்ற சுக்கிரனும் இணைந்து 66 என்று வந்து " மாளவ்யா யோகம் " ஏற்பட்டு மிகுந்த கலை பித்தர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . வாகனம் - நவ ரத்ன சேர்க்கை - பணம் சம்பந்தப்பட்ட துறைகள் போன்றவற்றில் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 க வந்தாலும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 3 க வந்தாலும் அவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 66 க வந்தால் புகழ் பெறுவார்கள் . இதில் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தேதியும் 3 ம் எண் ஆதிக்கத்தில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது . ஆதலால் இவர் பெயரின் கூட்டு எண் 28 என்று வாழ்க்கையில் முன்னேற்றத்தை தர இயலாத எண்ணில் அமைந்தாலும் இவர் பெயரின் பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்ணில் அமைந்து விட்டது .

உதாரண பெயராக இந்தியாவில் தமிழ் திரை உலகில் -  வெற்றி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரமின் நியூமராலஜி கூட்டு எண் 16. 

V I  K R A M
6  1  2  2 1  4  = 16 இது நியூமராலஜி எண் . 


மோசமான அதிர்ஷ்டமற்ற எண்ணாக இந்த எண் கருதப்பட்டாலும் நடிகர் விக்ரம் வானில் தோன்றும் நட்சத்திரம் போல் என்றும் பிரகாசமாய் மின்னி கொண்டிருப்பதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் . பிரகாசமாய் ஜொலிக்கும் சூரியனுக்கு உரிய சிம்ம ராசி வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் கொண்ட சுக்ரனின் 42 ம் எண் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வந்து அவரின் ராஜ யோகமான வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கிறது . 

4 2    =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5 6
1 7 7 8
7 3 4 3  5
6 1 2 2  1 4
V I K R A M 


நகைச்சுவையில் தனெக்கென்று ஒரு பாணியை வகுத்து கொண்டு தமிழ் திரை உலகில் பிரகாசமாய் வலம் வரும் காமெடி நடிகரும் - வளர்ந்து வரும் கதாநாயகனுமான சந்தானம் ( SANTHANAM ) அவர்களின் பெயரின் நியூமராலஜி எண்  போராட்டத்தையும் எதற்கும் பிரயோஜனப்படாத வாழ்க்கையை கொடுக்கும்  அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்.

S A N T H A N A M
3  1  5  4 5  1 5   1  4  = 29 . நியூமராலஜி எண் . 


இந்த அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்ணில் பெயர் அமைந்தும்  இன்று யாரும் அசைக்க முடியாத தனெக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து நிலைத்து வெற்றி திரை நட்சத்திரமாக வலம் வருவதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்  ஸ்ரீ பராசக்தியின் 15 மந்திர அட்சரங்கள் கொண்ட லட்சுமி கடாட்சம் கொண்ட 15 ம் எண்ணில் அமைந்து அவரின்  பிரகாசமான வளர்ச்சிக்கு வழிகாட்டி இருக்கிறது . 

1  5     =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் . 
7  3  2
7  9  3  8
4  3  6  6 2
7  6  6  9 6  5
1  6  9  6 3  3  2
4  6  9  9 6  6  6  5
3  1  5  4 5  1  5  1  4
S A N T H A N A M


இந்தியாவில் தமிழ் திரை உலகில் வெற்றி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன் ( SIMRAN ) இவர் பெயரின் நியூமராலஜி கூட்டு எண் முன்னேற்றத்தை தர இயலாத ஆபத்துகளை அறிவிக்கற 16 ம் எண்ணில் அமைந்திருந்தாலும்  அவர் நடிப்பு துறையில் வெற்றி பாதையில் வலம் வந்து அவரின் பிரகாசமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது அவர் பெயரின்  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணான லட்சுமி கடாட்சம் கொண்ட 42 ம் எண்ணே காரணம் . 

4  2   =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 
2  2  9
9  2 9  9
4  5 6  3 6
3 1 4  2  1 5
S I M R A N
3 1 4  2  1 5  =  16. நியூமராலஜி எண் . 


இன்னும் பல உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம். . வாழுகின்ற வாழ்க்கை வெற்றி காரமான அதிர்ஷ்ட பாதையில் செல்ல உங்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் -  பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்களில் அமைத்து வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com

Contact Numbers:

91 + 8122733328 


0 comments:

Post a Comment