Monday, September 12, 2022

செய்வினை பில்லி சூனியம் ஏவல் உங்கள் வீட்டில் இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர்.இராவணன் BSC

                                  

நம் வீட்டில் செய்வினைக் கொளாறு, ஏவல், பில்லி, சூனியம் போன்ற பிராச்சனைகள் இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் எல்லா வழிகளிலும் கெட்டு, அழிந்து போகவேண்டும் என்பதற்காக வேறு நபர்களால் செய்வினை, பில்லி, சூனியம் போன்றவைகள் செய்யப்படுகின்றன

இதுபோன்ற செய்வினைகள் செய்யப்பட்டால், அந்த குறிப்பிட்ட நபருக்கோ, அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ சிறியது முதல் பெரிய தீங்கு வரை ஏற்படக்கூடும்.

நம் வீட்டில் எந்த வகை செய்வினைக் கோளாறுகள் இருக்கின்றன என்பதை சில அறிகுறிகள் மூலமே உணர முடியும்

நிலை வாசல் நிலை வாசல் கதவில், வீட்டின் குடும்பத் தலைவருக்கு கட்டை விரல் அடிக்கடி அடிபட நேர்ந்தால், அதன் மூலம் குல தெய்வம் உங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல முற்படுகிறது என்கிறார்கள் ஜோதிடர்கள். குல தெய்வத்தின் அனுக்கிரகம் உள்ள இடம் நிலை வாசல். நிலை வாசல் அமையும் இடம் நமக்கு கெடுதல் எதுவும் நிகழாத வகையில் வாஸ்து முறைப்படி அமைக்கப்படுவதே வழக்கம்.



குலதெய்வம் தரும் சமிக்ஞை நிலை வாசல் படி, கதவில் குடும்பத் தலைவருக்கு கட்டை விரலில் காயம் பட நேர்ந்தால், அதன் மூலம் நமக்கு ஏற்படும் கெடுதலில் இருந்து காத்துக்கொள்ள குல தெய்வம் தரும் சமிக்ஞை என்கிறார்கள் ஜோதிடர்கள். அடிக்கடி ஏற்பட்டால், செய்வினைகளுக்கு எதிராக குல தெய்வம் வீட்டைக் காத்துக் கொண்டிருக்கிறது என அர்த்தமாம். ஜோதிடர்களை அணுகி உரிய முறையில் பரிகாரம் செய்து செய்வினையை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பல்லி, காகம் முன்னோர்களின் நம்பிக்கையின்படி பல்லி, காகம் இரண்டுமே இறை சக்தி மிக்கவை. பல்லிகளின் சத்தம், காகம் கரைவது ஆகியவையும் ஜோதிடத்தில் முக்கியமான அறிகுறிகளாக கருதப்படுகின்றன. நம் வீட்டில் பல்லி நடமாட்டமே இல்லை என்றால் அந்த வீட்டில் கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்தி இருப்பதாக அர்த்தமாம். அதேபோல, வீட்டுப் பக்கம் காகமே வராமல் இருப்பதும் சில அபசகுணம் எனக் கூறப்படுகிறது.

செடி பட்டுப்போகும் 

வீடுகளில் அதுவரை செழிப்பாக வளர்ந்து வந்த துளசிச்செடி, வேப்பஞ்செடி திடீரென பட்டுப்போகுதலும், தீய சகுனங்களுக்கான அறிகுறி என்கிறார்கள். நீங்கள் கவனித்துப் பார்த்தால், அந்தச் செடி பட்டுப்போனதில் இருந்து, வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்கத் தொடங்கியிருக்கும். ஆசையாக வளர்க்கும் செடி திடீரென பட்டுப்போவது இதுபோன்ற ஏவல், பில்லி, சூனியத்தின் அறிகுறி என்கிறார்கள்.

செல்லப் பிராணிகள் 

திடீரென நம் வீட்டில் பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உயிரிழக்கும். சில நேரங்களில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம். நமக்கு இருக்கும் செய்வினைக் கோளாறுகள், வளர்ப்புப் பிராணிகளை தாக்கும் என்ற நம்பிக்கை ஜோதிடத்தில் உண்டு. குடும்ப உறுப்பினர் பெரிய விபத்தில் இருந்து தப்பி, வளர்ப்புப் பிராணி பலியாகும் சூழல்களும் ஏற்படும். வளர்ப்புப் பிராணி உயிரிழப்பது கெட்ட சகுனம் தான், செய்வினைக் கோளாறு இருக்கிறதா எனச் சோதிக்க வேண்டும்


கோவிலுக்கு செல்ல தடை 

சில நேரங்களில், நாம் மாதக் கணக்காக குல தெய்வம் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டு வந்து வந்தும், சில தடங்கல்களால் போக முடியாத நிலை ஏற்படும். திட்டமிட்டிருக்கும் நேரத்தில் வேறு ஏதாவது தடை வந்து செல்ல முடியாமல் போகும். இப்படி அடிக்கடி ஏற்பட்டு குல தெய்வம் கோவிலுக்குச் செல்வது தாமதமாவதற்கு செய்வினைக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

தீய சக்தி ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு திடீரென கடும் உடல் சோர்வு ஏற்படும். முகம் பொலிவிழந்து பசி ஏற்படாமல் உடல் நலம் குன்றிப்போகும். மாத்திரை, மருந்துகள் எடுத்தாலும் முன்னேற்றம் இருக்காது. இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் அவர்களின் உடலில் கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருப்பதாக அர்த்தமாம்.

கனவு கனவில் வரும் நிகழ்வுகளும் நம் வீட்டில் செய்வினைக் கோளாறு இருக்கிறதா என்பதை உணர்த்தும். உங்கள் கனவில் வீட்டு நிலை வாசலிலோ, வீட்டிற்குள்ளோ காளை மாடு வருவது போல கனவு வந்தாலும் செய்வினைக் கோளாறு இருப்பதாக அர்த்தம். சாம்பிராணி வாசமற்றுப் போவதும் நம் வீட்டில் ஏதோ தீய சதியின் ஆதிக்கம் இருப்பதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது.

என்ன செய்யவேண்டும் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனமுருகி வேண்டி பிரார்த்தனைகள் செய்வது பலன் தரும். கோவிலில் எலுமிச்சை வைத்து அபிஷேகம் செய்து அதனை வீட்டு நிலை வாசலுக்கு மேலே கட்டித் தொங்கவிடலாம். இதன்மூலம், தீய சக்திகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும் 

பரிகாரம் அப்படியும் பிரச்சனை தீரவில்லை என்றால், யோசிக்கலாமல் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குல தெய்வம் கோவிலுக்குச் சென்று, அந்த முறைப்படி பொங்கல் வைத்தோ, பூஜை செய்தோ வேண்டி வந்தால் தீய சக்திகள் ஆவியாகப் பறந்து நிம்மதி கிடைக்கும், நம்பிக்கைக்குரிய ஜோதிடர்களை நாடி பரிகாரம் செய்தாலும் உடனடி பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment