Wednesday, September 28, 2022

இன்று செப்டம்பர் 29 - 2022 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 

                                           இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 29 - 9 - 2022 (சந்திரனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 26  (சனியின்   ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 65 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வியாழன் 

இன்று 29 - 2022 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 65.

6 5             =   ஹீப்ரு பிரமிடு எண் 
1 5 9
4 6 8 1
2 2 4 4 6
2 9 2 2 2 4
2 9 9 2 0 2 2  = இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 

இன்று பிறந்த குழந்தைகள் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஹீப்ரு எண்  65 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்துள்ளார்கள் . 

சிறந்த நாவன்மையும் தெய்வ சிந்தனையும் பிரபு போன்ற வாழ்வும் கிடைக்கும் . 

அரசனின் நாணயம் என்பதை போன்ற கருத்துக்கள் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . சத்துருக்கள் ஜெயம் தாம்பூலம் எனவும் மந்திர நூல்களில் உள்ளது .


தெய்வாசம் பொருந்திய எண் என்பதால் தெய்வீக வாழ்வில் மேன்மையான பலனை குறிக்கிறது . 

செல்வந்தர்களது நட்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் . மகிழ்ச்சியான மணவாழ்வும் நல்ல வாழ்க்கை துணையும் உண்டு  பணம் சம்பந்தப்பட்ட வகைகளில் அதிர்ஷ்டம் இந்த எண்ணிற்கு உண்டு .

அனைத்து செயலிலும் வெற்றி வாகை சூடி தாம்பூலம் தரிப்பதை இந்த எண் குறிக்கிறது . 

அடக்கம் மரியாதை தெய்வீக பக்தி அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு . பங்கு மார்க்கெட் பாங்க் சிட்பண்ட்ஸ் வலிமையான தொழில்களால்  அதிர்ஷ்டம் வாய்க்கும் . 

சுவையான பதார்த்தங்களை பருகும் பாக்கியமும் நாவன்மையும் அதிகார பதவியினரின் தரக்கூடிய இவ்வெண் காரர்கள் எதிர்பாராத ஆபத்துகளில் மாட்டிக்கொண்டாலும் தெய்வ பலத்தால் தப்பித்து கொள்வார்கள்.


குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளுக்கு விபத்தினால் உண்டாகும் ரணம் . சில காய தழும்புகள் உடம்பில் ஏற்பட வாய்ப்புண்டு . 

பிறந்த தேதியின் கூட்டு எண் - குழந்தையின் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு பெயரை சூட்டுவதன் மூலம் மேலே சொன்ன சிறு சிறு தீமையான பலன்களில் இருந்து தப்பிக்கலாம் . 

இன்று பிறந்த குழந்தைகளின்  ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 65 ம் எண்ணுக்குரிய சந்திரன் பலன் தரக்கூடிய நிலையில் இருந்தால் குழந்தை பெயரின் ஆரம்ப எழுத்து B K R  போன்ற எழுத்துக்களில் வருமாறு அமைக்கலாம் . 

பெயரின் ஆரம்ப எழுத்து B ன் பலன்கள் 

செல்வ வளம் பெற்று விளங்குவார்கள் . மனோபலமும் நிறைந்திருக்கும் கற்பனை சக்தி கவிதை ஆற்றல் தரும் . 

பெயரின் ஆரம்ப எழுத்து K  ன் பலன்கள் 

இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏற்படும் . வெற்றி தோல்வி மாறி மாறி வரும் . கவிதை கலைகளில் நாட்டம் ஏற்படும் . ஆசைகள் ஏற்படும் . மனம் அலைபாயும் . அதிகமான செலவுகள் ஏற்படும் . 

பெயரின் ஆரம்ப எழுத்து R  ன் பலன்கள் 

தலைமை பதவியை தரக்கூடியது . மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் அதிகாரத்தை ஏற்படுத்தும் . தன்னம்பிக்கை மற்றும் வெற்றி ஏற்படும் . மற்றவர்களை சுலபமாக புரிந்துகொள்ளும் தன்மை ஏற்படும் . எதிரிகளை எதிர்த்து வெற்றி பெறுவார்கள் . 


                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )


இன்று செப்டம்பர் 29 ல் பிறந்தவர்கள் :



குஷ்பூ - இந்திய தமிழ் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி - பிறப்பு 29 - 9 - 1970 


ராஜா அண்ணாமலை செட்டியார் - 
  அண்ணாமலை பல்கலைக்கழகம்  - தமிழிசை இயக்கம் இவற்றின் அமைப்பாளர் ஆவார் .  பிறப்பு 29 - 9 - 1881 



பிரிஜேஷ் மிஸ்ரா - இந்தியாவின் முதல் பாதுகாப்பு ஆலோசகர் - பிறப்பு 29 - 9 - 1928 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
 . 

0 comments:

Post a Comment