Sunday, July 26, 2020

விளையாட்டு துறையில் பிரகாசிக்கக்கூடிய கிரகநிலைகள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 பாவம் விளையாட்டு துறையையும் மிதுன ராசி விளையாட்டை குறிக்கும் ராசியாகும் . 

ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கு சக்தி செயலாற்றும் திறன் உடனுக்குடன் முடிவெடுக்கும் தன்மை உடல் உறுதி மனபலம் தைரியம் விடாமுயற்சி தோல்விகளை கண்டு துவளாத மனப்பாங்கு இவை அனைத்தும் தேவையே . 

செவ்வாய் பகவான் பலம் பெற்று உபஜெய ஸ்தானமான 3 - 6 - 10 - 11 போன்ற இடங்களில் அமைவது சிறப்பாகும் . ராகு பலமுடன் 3 - 6 - 10 - 11 ல் இருப்பது உடல் வலிமையை தரும் . மேலும் செவ்வாய் , புதன் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுவது விளையாட்டு துறையில் பிரகாசிப்பதற்கு ஒரு சிறப்பு அம்சமாகும் . 


புதன் கிரகம் உடனுக்குடன் முடிவெடுக்கும் திறமையை தருபவர் அதனால் அவரின் துணை அவசியம் தேவை . 

போட்டியில் வெற்றி பெறுவதே விளையாட்டு துறைக்கு ஏற்ற சிறப்பாகும் . அதனால் லக்கினத்திற்கு 6 ம் பாவகம் , 6 ம் இடத்துக்கு அதிபதியான  கிரகம் 6 ல் உள்ள கிரகம் பலம் பெரும் அமைப்பு விளையாட்டு துறையில் சாதனை பெறுவதற்கான கிரக அமைப்பாகும் . 

விளையாட்டு துறைக்கான ராஜ யோகங்கள் :                                                                                                                                                
                                                                                                       
                                                     

                                                     வசுமதி யோகம் :

சுப கிரகங்கள் லக்னத்திற்கு 3 - 6 - 11 ல் இருப்பது . மேலும் இது சந்திரனுக்கு 3 - 6 - 11 ல் அமைவது ஒரு படி மேலான சிறப்பான கிரக அமைப்பாகும் . 
                
                                                       

                                                   அமலா யோகம் :

லக்கினம் அல்லது சந்திரனுக்கு 10 ம் இடத்தில சுப கிரகங்கள் இருப்பது விளையாட்டு துறையில் ராஜயோகத்திற்க்கான கிரக அமைப்பாகும் . 

                                           
                                              

                                              பாரிஜாத யோகம் : 

லக்கினாதிபதி இருக்கும் ராசிக்கு அதிபதி ஆட்சி உச்சம் பெரும் அமைப்பு விளையாட்டு துறையில் பிரகாசிப்பதற்கு மற்றும் ஓர் கிரக அமைப்பாகும் . இந்த பாரிஜாத யோகம் ஒரு புகழ் பெரும் அமைப்பாகும் . அரசாங்கத்தால் பாராட்டை பெரும் ஒரு அமைப்பாகும் . 

உதாரணமாக மீன லக்னம் . இதன் லக்கினாதிபதி குரு கன்னி ராசியில் இருக்கிறார் . கன்னி ராசிக்கு அதிபதி புதன் பலம் பெற்று மிதுனத்தில் ஆட்சி பெற்று லக்கினத்திற்கு கேந்திர அமைப்பை பெறுவது பாரிஜாத  யோகம் பெரும் அமைப்பாகும் .  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328










0 comments:

Post a Comment