Saturday, July 11, 2020

ரிஷப லக்கினத்தில் ருதுவான பெண்ணின் திருமண வாழ்க்கை எப்படி அமையும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர்.இராவணன் BSC

                          தாயே பூமாதேவி பெரியாண்டவர் சாமி
ரிஷப லக்கினத்தில் ருதுவான பெண்ணின் ஏழாம் இடமான விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் இருக்கும் நிலையை வைத்து இந்த பலன்கள் சொல்லப்பட்டுள்ளது . 

ரிஷப லக்கினத்தில் ருதுவான பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7 ம் வீடு விருச்சிக ராசியாகும் . இது கணவனை குறிக்கும் இடமாகும் . இந்த விருச்சிக ராசிக்குரிய செவ்வாய்தான் பெண்ணின்  மண வாழ்க்கைக்கு பிரச்சனைகளை தரும் வில்லன் .

செவ்வாய் தோஷம் பற்றி பல ஜோதிட நூல்கள் பல்வேறு கோணங்களில் கருத்துக்களை கூறி உள்ளன .

ஒரு ஜெனன ஜாதகத்திலோ அல்லது ருதுவான ஜாதகத்திலிலோ 2- 4 - 7 - 8  12 - போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் .

ஜோதிட கிரக சிந்தாமணி பலதீபிகை ஜாதக அலங்காரம் கிரக சாஸ்திர மாலிகா ஆகிய நூல்களில் செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி பெற்றால் மகரத்தில் உச்சம் பெற்றால் கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றால் அது செவ்வாய் தோஷம் இல்லை என கூறப்பட்டிருக்கிறது


ஆண்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமண ப பொருத்தம் ஏற்படுகிறது என்கின்றன மற்ற ஜோதிட நூல்கள் . 

ஆனால் கிரக சிந்தாமணி என்ற ஜோதிட நூலில் இரண்டு பேருக்கும் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷத்திற்க்கான பரிகாரத்தை முதலில் செய்த பிறகே இரண்டு ஜாதகத்தையும் இணைக்கவேண்டும் என்கிறது .

அடிக்கடி சண்டை போட்டு கொள்ளும் தம்பதியர்கள் செவ்வாய் தோஷம் உள்ளவர்களே . எனவே செவ்வாய் தோஷம் உள்ள இரண்டு ஜாதகங்களை சேர்த்து வைப்பது மட்டுமல்லாமல் செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்களை செய்து தோஷத்தை விலக்கிக்கொண்டு திரும்ப திருமண வாழ்க்கையை அமைத்து கொள்வது நல்லது என்கிறது இந்நூல் .


ரிஷப லக்கினத்தில் ருதுவான ஒரு பெண்ணின் ஏழாமிடத்துக்கு அதிபதியான செவ்வாய் ரிஷப லக்கினத்தில் இருந்தால் என்ன பலன் ? ரிஷப லக்கினத்திற்கு பன்னிரெண்டாம் வீடான மேஷத்திற்கும் ரிஷப லக்கினத்திற்கு ஏழாம் வீடான விருச்சிகத்திற்கும் அதிபதியான செவ்வாய் ரிஷப லக்னத்திலிருந்து தனது விருச்சிக லக்கினத்தை ஏழாம் பார்வையாக பெண்ணின் மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்க்கிறார் .

இப்படி கிரக நிலைகளை அமைய பெற்ற பெண் முன் கோபத்தில் முதலிடம் வகிப்பாள் . சிவக்க சிவக்க கண்களை உடையவள் .எதையும் உடனுக்குடன் தான் பெற்று விடவேண்டும் என்ற ஆசை உள்ளவள் . இப்படிப்பட்ட இவளுக்கு திருமணம் நடந்தால் இவளது தலையில் அலங்கரிக்கப்பட்ட மலர்கள் வாடுவதற்கு முன்பே கணவன் ஆபத்தில் சிக்கி கொள்வான் என்கின்றன ஜோதிட நூல்கள்

ரிஷப லக்கினத்தில் ருதுவான பெண்களுக்கு செவ்வாய் மிதுனத்தில் அமைந்து  ஏழாம் பார்வையாக மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தை தனுசு ராசியை பார்ப்பதால் இந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகும் . திருமணம் நிச்சயிக்கப்பட்ட கணவனுக்கு ஆபத்துகள் ஆரம்பமாகும் . வேலை செய்பவனாக இருந்தால் வேலைக்கு ஆபத்துகள் வரும் . வியாபாரியாக இருந்தால் பெருத்த நஷ்டம் வரும் . நோயாளியாக இருந்தால் நோய் அதிகமாகி ஆபத்து வரும் . இவ்வளவுக்கு பிறகும் திருமணம் நடந்தால் மணப்பெண் விதவையாக கூடும் .


இந்த தீய பலன் நடக்காமல் இருக்க வேண்டுமானால் குரு விருச்சிக ராசியில் இருந்து ரிஷப லக்கினத்தை பார்க்கவேண்டும் . அல்லது மீன ராசியில் இருந்து ஒன்பதாம் பார்வையாக விருச்சிக ராசியை பார்க்க வேண்டும் . இப்படி பார்த்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சி பெரும் மகப்பேறு கிடைக்கும் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் .

ரிஷப லக்கனத்தில் ருதுவான பெண்ணிற்கும் ரிஷப லக்கினத்திற்கு நான்காவது இடமான கடகத்தில் செவ்வாய் இருந்தால் இவள் யோகமுள்ளவள் , ஏனெனில் கடகத்தில் செவ்வாய் நீச்சம் . இந்த கடக லக்கினத்திற்கு அதிபதி சந்திரன் ரிஷபத்தில் இருந்துவிட்டால் நீச பங்க ராஜயோகம் ஏற்பட்டுவிடும் . இப்படி அமைந்த பெண் ஏழ்மையில் பிறந்திருந்தாலும் செல்வ வசதியுள்ள குடும்பத்தில் மணவாழ்க்கை பெற்று மகப்பேறும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வாள் .

ரிஷப லக்கினத்தில் ருதுவான பெண்ணுக்கு ஐந்தாவது இடமான சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் சிம்மத்திலிருந்து நான்காம் பார்வையாக விருச்சிகத்தை பார்க்கும் செவ்வாய் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரமாட்டார் . 

சிம்மத்துக்கு அதிபதி சூரியன் . சூரியன் செவ்வாயின் நட்பு கிரகம் எனவே இந்த அமைப்புள்ள பெண் மண வாழ்க்கை பெறுவது கடினம் . மணவாழ்க்கை பெற்றாலும் மகிழ்ச்சிகரமாக அமையுமா என்பது சந்தேகம் .

ஐந்தாவது ஸ்தானம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் , பூர்வ புண்ய ஸ்தானத்தில் இருந்து பூர்வ ஜென்ம பாவங்களுக்கு உரிய தண்டனைகளை வழங்கும் அதிகாரம் பெறும் செவ்வாய் இந்த பெண்ணை மண வாழ்க்கைக்கு முன்பே அவமானமடைய செய்வார் .


மணம் நிச்சயமானால் மணமகனுக்கு ஆபத்து ஏற்படலாம் . இரத்த சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் . உயிருக்கு ஆபத்தான நிகழ்ச்சிகள் கூட ஏற்படலாம் . மணமகன் ஜாதகத்தில் ஆயுள் பாவகம் பலம் பெற்றிருந்தால் மணமகள் உயிருக்கும் ஆபத்து வர வாய்ப்பிருக்கிறது .

இந்த தோஷத்தை போக்குவதற்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்தால் செவ்வாய் பார்வையினால் குரு மங்கள யோகம் ஏற்பட்டு அதனால் மணவாழ்க்கை அடைந்து மாங்கல்ய பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு .

ரிஷப லக்கினத்தில் ருதுவான பெண்ணிற்கு ரிஷப லக்கினத்தின் ஆறாவது இடமான கன்னியா லக்கினத்தில்  செவ்வாய் இருந்தால் அந்த செவ்வாய் அங்கிருந்து நான்காம் பார்வையாக விருச்சிக ராசியின் இரண்டாவது இடமான - ரிஷப லக்கினத்தின் எட்டாவது இடமான தனுசு ராசியை பார்ப்பார் . 

இதனால் எட்டாவது இடம் மாங்கல்ய பலத்தை இழக்கிறது . மேலும் கன்னியாராசி செவ்வாயின் பகை வீடு . பகை வீட்டிலிருக்கும் கிரகம் எதுவாக இருந்தாலும் நன்மைகள் செய்ய வாய்ப்பு அரிது . எனவே இத்தகைய அமைப்புள்ள பெண் திருமணம் நிச்சயமாகி திருமணம் நடக்கும் முன்பே நிச்சயம் செய்யப்பட்ட மணமகனை விபத்தில் இழக்க நேரிடலாம்  . 


ரிஷப லக்கினத்தின் ஏழாவது இடமான விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் முருக பெருமானின் அருளும் அம்பிகையின் அருளும் ஆசியும் பெற்று நல்ல மணவாழ்க்கை அமையும் . மகப்பேறு கிட்டும் மாங்கல்ய பாக்கியமும் கிட்டும் . 

ரிஷப லக்கினத்தில் ருதுவான பெண்ணிற்கு எட்டாவது இடமான தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை மிக போராட்டம் நிறைந்ததாக  இருக்கும் . திருமண வாழ்க்கை அமைய வாய்ப்பு இல்லை என சொல்லலாம் . அப்படி ஏதோ ஒரு கிரக செய்கையால் விதி முடிந்த ஒருவனுக்கு வாழ்க்கை பட நேரிடலாம் . 

இத்தைகைய ஜாதக அமைப்புள்ள பெண்களுள் சிலர் மேலும் ஒரு சில முறை மணந்து விதவையார் என்கிறது ஜோதிட கிரக சிந்தாமணி . 

ரிஷப லக்கினத்தில் ருதுவான பெண்ணின் ஒன்பதாவது இடமான மகர ராசியில் செவ்வாய் இருந்து உச்சம் பெற்றால் மகர ராசி சனிபகவானின் ராசி , ஒன்பதாவது இடம் பாக்ய ஸ்தானம் இந்த ஸ்தானத்தை ரிஷபத்தில் அமர்ந்திருக்கும் குரு ஒன்பதாம் பார்வையாக பார்த்தால் சகல யோகமும் கிடைக்கும் . 

ரிஷப லக்கினத்தின் பத்தாவது இடமான கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் அங்கிருந்து நான்காம் பார்வையாக ரிஷப லக்கினத்தை பார்க்கிறார் . செவ்வாய் சற்று கொடூரமான பார்வையை கொண்டிருக்கிறது . பகை கிரகமான சனியின் வீடு கும்பமாகும் . 


இந்த கும்ப ராசிக்கு சொந்தமான சனி துலாத்தில் உச்சமாக இருந்தாலும் சரி சனி விருச்சிகத்தில் இருந்து பரிவர்த்தனை பெற்றாலும் சரி இந்த அமைப்புள்ள பெண்களுள் சிலர் சேவா வசதியுள்ள வேறு இனத்தை சார்ந்தவனுமான ஒரு வயதானவனை மணந்து கணவனை இழந்து ஏகப்பட்ட செல்வங்களுடன் இன்னொருவனின் மனைவியாக இருக்க நேரிடும் . 

ரிஷப லக்கினத்தின் பதினோராவது இடமான மீனத்தில் செவ்வாய் இருக்க பெற்ற பெண்ணின் திருமண வாழ்க்கை இவ்வாறு அமையும் . மீன ராசிக்கு சொந்தமான கிரகம் குரு , மீன ராசியில் உச்சம் பெறுபவர் சுக்ரன் , இத்தனை சிறப்புகள் இருந்தும் செவ்வாய் அங்கிருப்பதால் இத்தகைய அமைப்புள்ள பெண்ணிற்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவது அபூர்வம் . அப்படி மகிழ்ச்சிகரமாக அமையவேண்டுமானால் இந்த ராசியில் குருவோ அல்லது சுக்ரனோ இருக்கவேண்டும் . 

ரிஷப லக்கினத்தில் ருதுவான பனிரெண்டாம் வீடாகிய மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் அங்கிருந்து எட்டாம் பார்வையால் விருச்சிகத்தை பார்ப்பார். செவ்வாய் மேஷத்தில் இருப்பதும் விருச்சிகத்தை பார்ப்பதும் தோஷமில்லை . 

எனவே இந்த அமைப்புள்ள பெண் ஓரளவு முரட்டு தனமான கணவனை மணக்க நேரிட்டு அவனிடம் அடி உதை பட்டு ஒரு நாள் சுமங்கலியாய் இறப்பாள் என்கிறது ஜோதிட நூலான பல தீபிகை எனும் நூல் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment