Wednesday, July 22, 2020

சனி தோஷத்திலிருந்து விடுபட பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

சனிபகவான் அவரவர் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் சரி அல்லது சனி தசை நடந்தாலும் சரி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருந்து காகத்திற்கு உணவு, பிஸ்கெட், நீர் வைக்கலாம். ஏழைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் அன்னதானம்,  வஸ்திரதானம் செய்தால் சனிபகவானின் அருள் கிட்டும்.
 
சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது, அதை தலைக்கடியில் வைத்து படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் என்று இந்த பரிகார முறையை பின்பற்றலாம்.
 
ஒரு முழு தேங்காயை சனி பகவான் சன்னதியில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.
 
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிசேகம் செய்து, எள் சாதம், வடை மாலை செய்து வழிபட்டு, அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்யலாம். சனிபகவானுக்கு நவக்கிரக சாத்தி ஓமங்கள் செய்து வழிபடலாம்.
 
எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம், ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேச பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து  விநியோகம் செய்யலாம்.
 

அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபாகவனின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது நன்மையான பலன்களை தரும்.
 
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, சனி பகவானுக்கு ஒரு சிறு துணியில் எள் முடிந்து, அதை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டு  விளக்கேற்றி கருங்குவளை மலரால் சனி பகவானை அர்சிப்பதோடு, எள் சாதம் நெய்வேத்தியம் செய்வதும் நல்லது. தொடர்ந்து, சனி கவசம் அல்லது காயத்திரி செபம் செய்யலாம். நெய்வேத்தியம் செய்யும் எள் சாதத்தில் சிறிது காக்கைக்கு வைத்து விட்டு, பின் அனைவருக்கும் அளித்து சாப்பிடலாம்.
 

மங்கு சனி, ஏழரை சனி, ஜென்ம சனி என எந்த சனி தோசம் பீடித்திருந்தாலும் மேற்சொன்னவற்றை செய்துவந்தால் நற்பலன்களை பெறலாம்.



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment