Sunday, May 10, 2020

வரலாற்று நிகழ்வுகளில் ஹீப்ரு பிரமிடு எண் 72 ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


                                    மார்டீனிக் தீவின் பெலே எரிமலை படம் :

ஹீப்ரு பிரமிடு எண்களில் ராஜயோகத்தை தரும் எண்களும் இருக்கிறது . அதே சமயத்தில்  எவ்வளவு பெரிய ராஜ யோகத்தை தரும் எண்களாக இருந்தாலும் சரி பொருந்தாத பட்சத்தில் உயிருக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய எண்களும் இருக்கிறது .  

செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தை குறிக்கும் எண்களில் 9 - 18 - 27 - 36 - 45 - 54 - 63 - 72 - 81- போன்ற எண்கள் இருந்தாலும் செவ்வாயின் முழு குணமான ஆக்ரோஷம் -  செவ்வாயின் ஒற்றை எண்ணான 9 ம் எண்ணுக்கும்  செவ்வாயின் இரட்டை எண்ணான 72 ம் எண்ணுக்கும் உண்டு .

காரணம் 9 ம் எண் செவ்வாய் வீடான மேஷத்திலும்  72 ம் எண் செவ்வாயின் மற்றொரு வீடான விருச்சிக ராசியில் ஆட்சியை பெற்றிருப்பதால் இந்த இரண்டு எண்களுக்கும் ஆக்ரோஷம் அதிகம் .

இதில் செவ்வாயின் ஆதிக்க எண்ணான 72 ம் எண் எந்த ஒரு தேதியின் ஹீப்ரு எண்ணாக வந்தாலும் சரி - எந்த ஒரு நிறுவனத்தின் ஹீப்ரு எண்ணாக வந்தாலும் சரி - எந்த ஒரு மனிதனின் பெயரின் ஹீப்ரு எண்ணாக வந்தாலும் சரி - எந்த ஒரு நாட்டின் ஹீப்ரு எண்ணாக வந்தாலும் சரி - எந்த ஒரு இடத்தின் ஹீப்ரு எண்ணாக வந்தாலும் சரி இந்த 72 ம் எண்ணுக்கு விரோதமான  நிகழ்வுகள் அங்கே ஆதிக்கம் செலுத்தினால் உயிர் பலிகள் அங்கே நிச்சயம் .

உதாரணத்துக்கு ஒரு தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  72 ம் வந்து ஒரு நாட்டின் பெயர் எண்  அல்லது அந்த நாட்டின் ஒரு பகுதியின் பெயர் எண்  - 2 - 11 - 20 - 29 என்று வந்தால் அந்த நாட்டில் உலகமே பார்த்து  வேதனைபடும் அளவிற்கு ஒரு அசம்பாவிதம் நிகழ போகிறது என்று அர்த்தம் . அது  பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கும் ஒரு சோகமான சம்பவமாக கூட அமையலாம் .


இதற்க்கு உதாரணமாக 8 - 5 - 1902 ல் கரிபியன் கடலில் அமைந்துள்ள MARTEENIK (மார்டீனிக் ) தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30, 000 பேர் உயிரிழந்தனர் .

இந்த தேதியின் ஹீப்ரு எண்ணை காண்போம் .  8 - 5 - 1902

7 2 = ஹீப்ரு எண்  (செவ்வாயின் முழு பலமும் கொண்ட எண் )
8 8 3
1 7 1 2
4 6 1 9 2
8 5 1 9 0 2

இனி எரிமலை வெடித்த MARTEENIK  (மார்டீனிக் தீவின் பெயர் எண்ணை காண்போம் . )

M = 4
A  = 1
R  = 2
T  = 4
E  = 5
E  = 5
N  = 5
I  =  1
K = 2
 ----------------
      29 = 2 = சந்திரனின் ஆதிக்க எண்
---------------------

ஹீப்ரு எண் 72 எந்த ஒரு தேதியில் இருந்தாலும் அது ஒரு மனிதனின் பெயராக இருந்தாலும் சரி  அல்லது ஒரு இடத்தின் பெயராக இருந்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனத்தின் பெயராக இருந்தாலும் சரி அந்த இடங்களில் சந்திரனின் ஆதிக்கத்தை கொண்ட 2 எண் சம்பந்தப்படும்பொழுது அது பேராபத்தை ஏற்படுத்தும் . 

இங்கே 8 - 5 - 1902 ம் தேதியில் ஹீப்ரு எண் செவ்வாயின் ஆதிக்க எண்  72 = 9 .
கரிபியன் கடலில் MARTEENIK (மார்டீனிக் தீவின் ) பெயர் எண் 29 = 2 . 

செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணிற்கும் சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 ம் எண்ணிற்கும் பரம பகையாகும் . இங்கே 8- 5 - 1902 ம் தேதியில் ஹீப்ரு எண் 72 வந்து MARTEENIK (மார்டீனிக் தீவின் ) பெயர் எண் 29 = 2 ம் எண் சம்பந்தப்படுவதால் பேரழிவு உயிர் பலியை ஏற்படுத்தியுள்ளது . 

இந்த பேரழிவு உயிர் பலி நிகழ்வுகள் எரிமலைக்கு மட்டுமல்ல . மனிதனுக்கும் பொருந்தும் . 

பிறந்த தேதியையும் பாருங்கள் - பிறந்த தேதியின் கூட்டு எண்ணையும் பாருங்கள் - முக்கியமாக பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணையும் பாருங்கள் . 

இவைகளுக்கு நன்மை செய்ய கூடிய எண்களின் ஆதிக்கத்தில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்து கொண்டு வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களையும் காணுங்கள் . 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment