Monday, January 8, 2018

இன்றைய 9 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் ஆர். இராவணன் BSC

                                                     தாயே பூமாதேவி

இன்று 9 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண் . 83. இது சந்திரனின் ஆதிக்க எண்ணாகும் . 8 என்ற சனிபகவானும் 3 என்ற குருவும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . 

அமைதியான வாழ்வையும் - செல்வ செழிப்பையும் பதவி கெளரவம் ஆகியவற்றை தரக்கூடியது . இந்த எண்ணின் பெருமை பற்றி நம்முடைய புராதான நூல்களும் - மந்திர சாஸ்திர நூல்களும் பிரம்மலோகம் மன்மதனின் பானம் என்றெல்லாம் வருணிக்கின்றன . 

மற்றவர்கள் வியக்கும்படியான மிக உயர்ந்த பதவி - எல்லோரும் கைகூப்பி வணங்கும்படியான அந்தஸ்தும் - சகல சௌபாக்கியங்களும் கூடிய ராஜபோகமான வாழ்க்கையையும் தரும் வலிமை கொண்டது இந்த 83 ம் எண்


எதிலும் வெற்றி வாகை சூடி வெற்றி வீரனாய் வலம் வரும் தன்மையை கொண்டது . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 83 க வந்தால் அரசு உத்தியோகங்களும் அரசாங்கத்தால் ஆதாயமும் அரசியல் துறையில் மேன்மையும் உண்டாகும் . உள்ளத்தில் உறுதியான பலமும் உடல் உறுதியும் கொண்டு திகழ்வார்கள் . ராஜ தந்திர யுக்திகளை கையாண்டு அதிர்ஷ்டத்தை தன்பக்கம் வரவழைத்து கொள்வார்கள். 

கலைசம்பந்தப்பட்ட துறைகளில் வெற்றி வாகை சூடியும் அதன் மூலம் புகழும் ஐஸ்வர்யமும் உண்டாகும் . தனது அந்தஸ்துக்கு மேலான செயல்களில் ஈடுபட்டு அதில் வெற்றிபெற்று மேன்மையான பலனை அனுபவித்து மற்றவர்களை வியக்கச்செய்வார்கள் . நீடித்து நிற்கும் புகழை தன் வசப்படுத்தி கொள்வார்கள் .


மற்றவர்களை மதித்து மரியாதை செய்யும் இவர்களை பலரும் வணங்கி மரியாதை செய்வார்கள் . உயர்ந்த ராஜபோகமான வாழ்க்கை நிச்சயம் உண்டு. பெரும் பதவிகள் தானாகவே தேடிவரும் . நீடித்த செல்வம் - புகழ் - ஆயுள் - என்று இந்த 83 ம் எண்ணுக்கு நிலைத்து நிற்கும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட தரும் கிரகத்தின் ஆதிக்க எண்கள் வருமாறு குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைத்து சூட்டினால் மேலே சொன்ன அதிர்ஷ்ட பலன்கள் மேலும் மேலும் கூடும் . 


                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமானதிசை - வடமேற்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்ட கல் - மூன் ஸ்டோன் என்ற சந்திர காந்தக்கல் - பச்சை 
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் ஞாயிறு வியாழன் 
அதிர்ஷ்டமான தேதி - 7 25 1 10 19 28 3 12 21 30
அதிர்ஷ்டமான உலோகம் - தாமிரம் வெள்ளி 
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - மகமாயி - ஸ்ரீலக்ஷ்மி - துர்கா தேவி - பெண்தேவதைகள் 

குழந்தையின் ஜாதகத்தில்  ஹீப்ரு பிரமிடு 83 ம் எண்ணுக்குரிய சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் திருப்பதி சென்று வழிபடவும் . 

திங்கட்கிழமையில் அரிசி வெள்ளை ஆடை பசுநெய் வெண்மை நிறமான மலர்கள் இனிப்பு பண்டங்கள் தானம் செய்யலாம் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



0 comments:

Post a Comment