Sunday, December 30, 2018

கன்னி ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                   தாயே பூமாதேவி 
மகா விஷ்ணுவை அதி கடவுளாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே உங்கள் உங்களின் ராசிக்கு 2-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் நிலையில் வருடம் பிறப்பதால், பணவரவுக்குக் குறைவிருக்காது. தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். உற்சாகமாக வலம் வருவீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். 

உங்களின் ராசிக்கு அதிபதியான ராசிநாதன் புதன் சாதகமான வீட்டில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால்,நண்பர்களின் உதவி கிடைக்கும். நல்ல வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வீட்டில் ஏற்பட்டிருந்த பழுதுகள் நீங்கும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று மொழி பேசுபவரின் ஆதரவு கிடைக்கும். 

உங்களுக்கு அனுகூலமாக இருக்கும் குலதெய்வக் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வீர்கள். புது வேலை கிடைக்கும். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

யோககாரகன் ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். இந்த வருடம் முதல் 12.2.19 வரை ராசிக்கு 5-ல் கேது இருப்பதால், பிள்ளைகள் அடிக்கடி கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்கவேண்டாம். பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவீர்கள். 

மற்றவர்கள் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 4-லும் ராகு 10-லும் இருப்பதால் சுற்றியிருப்பவர்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

ஆண்டின் தொடக்கம் முதல் முடியும் வரை சனி சாதகமாக இல்லாத காரணத்தால் மனத்தாங்கல் காரணமாக தாயாரைப் பிரிய நேரிடும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டில் களவு போக வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளால் மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.

நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு ராசிக்கு 3-ல் நிற்பதால்,  ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேளைகள் பார்க்க நேரிடும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குரு அதிசாரத்திலும் மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ல் அமர்வதால், இழுபறியாக இருக்கும் வேலைகள் முடியும். 

ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் செய்ய நேரிடும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. தாயாருடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது. உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.

வியாபாரம் செய்யும் வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். தேங்கிக் கிடக்கும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகைகளை அறிவித்து விற்பனையை அதிகரிப்பீர்கள். பங்குதாரர்கள் வழக்கம்போல் முணுமுணுப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வேலையாள் களால் நிம்மதி கிடைக்கும். 

உங்களின் நிறுவனத்தில் லாபம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி - இறக்குமதி, கன்ஸ்ட்ரக்‌ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.பெரிய வியாபாரிகளின் அறிமுகம் கிடைக்கும். 

பணிபுரியும் அலுவலகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும்.  உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. ஆனால்,  உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உரிய சலுகைகளைப் பெற்றுத் தருவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். 

கல்வி பயிலும் செல்வங்களே ! கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கலைப்போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பெற்றோர் அரவணைத்துச் செல்வார்கள்.

இந்த வருடம் மனநிம்மதியையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம் : நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடவும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

சிம்ம ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                    தாயே பூமாதேவி
சிவபெருமானை ராசியின் அதி கடவுளாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே உங்களின் ராசிக்கு 3-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். ராசிக்கு 5-ல் புதன் இருக்கும்போது வருடம் பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு பயனுள்ளதாக அமையும்.  

வேண்டாம் என்று விலகி சென்ற சொந்த பந்தங்களும் நண்பர்களும் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதப் போக்கு மாறும். விலையுயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.

ஞானகாரகன் என்று சொல்லக்கூடிய கேது பகவான் உங்களின்  ராசிக்கு 6-ல்  இருப்பதால், உங்களுடன் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உண்மையான மனநிலையைப் புரிந்துகொள்வீர்கள். மகான்கள், ஆன்மிக அறிஞர்களின் சந்திப்பும் அவர்களுடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 

இருந்தாலும் யோககாரகன் ராகு உங்களின் , ராசிக்கு 12-ல்  இருப்பதால், மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காதீர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட ஏமாற்றங்களை எண்ணி அடிக்கடி வருந்துவீர்கள். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ல் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உற்சாகமூட்ட முயற்சி செய்யவும். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சற்று தாமதமாக முடியும். 

காலம் காலமாக காத்து வந்த உங்களின் பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால், ராகு 11-ல் இருப்பதால், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் வளரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வீர்கள்.

பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில வருடம் முழுவதும் சனி 5-ல் இருப்பதால், அடிக்கடி மனக்குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் தாமதமாகும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் ஏற்பட்டு நீங்கும்.

மறைவு ஸ்தானமான உங்களின் ராசிக்கு  8-ல் செவ்வாய் நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால், உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது.

தன காரகன் - புத்திர காரகன் என்று சொல்ல கூடிய குரு வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 4-ல் இருப்பதால், வேலைச்சுமையின் காரணமாக எப்போதும் பதற்றத்துடன் காணப்படுவீர்கள். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ல் குரு இருப்பதால், மன இறுக்கங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 

வெகு நாளைய ஆசையுடன் புது வீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு ஏற்படும். வருமானத்தை உயர்த்திக்கொள்ள புதுப் புது வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கு திரும்பக் கிடைக்கும்.

வாகன உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையாள்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வாங்கவும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அரிசி, மலர்கள், எலெக்ட்ரிகல்ஸ்,

பணி புரியும உத்தியோகஸ்தர்களே! பிப்ரவரி 13-ம் தேதி முதல் ராகு சாதகமாக இருப்பதால், அலுவலகத்தில் மரியாதை கூடும். ஆனால், பணிச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதல் பணிகளை ஒப்படைப்பார்கள். சலித்துக்கொள்ளாமல் முடித்துக்கொடுப்பது நல்லது. உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. 

உத்தியோகத்தில் பதவி உயர்வு தள்ளிப் போகும். சக ஊழியர்களால் மன உளைச்சல் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

கல்வி பயிலும்  செல்வங்களே ! படிப்பில் முழுமையான கவனம் செலுத்தவேண்டியது அவசியம். பொறுப்பு உணர்ந்து படித்தால்தான் நல்லமுறையில் தேர்ச்சி பெறமுடியும். விளையாடும்போது கவனமாக இருக்கவும். வருடத் தொடக்கம் அலைச்சலையும் வருடத்தின் மத்திய பகுதியிலிருந்து முன்னேற்றத்துடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

பரிகாரம் : கிருத்திகை - உத்திரம் - உத்திராடம் - இவைகள் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள் - இந்த நட்சத்திர கால நேரங்களில் சூரியனின் அதி தேவதையான சிவபெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கடக ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                    தாயே பூமாதேவி
சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கடக ராசி அன்பர்களே : உங்களின் ராசிக்கு 4-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கியப் பிரமுகர்களின் வரிசையில் இடம் பிடிக்கும் அளவுக்கு சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரைகுறையாக நின்றுவிட்ட கட்டடப் பணியை மறுபடியும் கட்டி முடிக்கத் தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாய்மாமன், அத்தை வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

பூமிக்காரன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் இந்த வருடம் பிறக்கும்பொழுது 9-ல் இருப்பதால் தொட்ட காரியம் வெற்றியடையும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிப் பணம் தந்து முடிக்காமல் பத்திரப் பதிவு செய்யாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். நவீன ரக மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். 

கடக ராசியான உங்களின் ராசிக்கு ராசிக்கு 12.2.19 வரை 7-ல் கேது நிற்பதால், மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. முன்கோபத்தைத் தவிர்ப்பது அவசியம். 

காதல் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 12-லும் கேது 6-லும் இருப்பதால், மனப் போராட்டங்கள் ஓயும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விலகிச் சென்ற உ றவினர்கள் விரும்பி வருவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களை சரியாகப் புரிந்துகொள்வீர்கள்.

மறைவு ஸ்தானமான ராசிக்கு 6-ல் புதன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், உறவினர்கள், நண்பர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

ஆண்டின் தொடக்கம் முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.20.19 வரை குரு ராசிக்கு 5-ல் இருப்பதால், நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர் கல்வி, உத்தியோகம் சிறப்பான முறையில் அமையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் , 13.3.19 முதல் 18.5.19 வரை மற்றும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், சின்னச் சின்ன வேலைகளைக் கூட ஒருமுறைக்கு இரண்டுமுறை போராடித்தான் முடிக்கவேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் பகை ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். சிலர் தங்களுடைய ஆதாயத்துக்காக உங்களைப் பற்றி வீண் வதந்திகளைப் பரப்புவார்கள் என்பதால் கவனம் தேவை. 

வெளிநாட்டில் இருப்பவர்களால் நல்ல திருப்பம் ஏற்படும்.  வருடம் முழுவதும் ராசிக்கு 6-ல் சனி இருப்பதால், எதிரிகளும் நட்பு பாராட்டி வருவார்கள். பாதியில் நின்ற கட்டடப் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். புது வேலை கிடைக்கும்.

லாபத்தைக் குறைத்து விற்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். வேலையாள்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்கள் சற்று முரண்டு பிடிப்பார்கள்.  கமிஷன், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களே! பணிச்சுமை அதிகரிக்கும். 

ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். பிப்ரவரி 13-ம் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய அதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரி அனுசரணையாக நடந்துகொள்வார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

கல்வி பயிலும் மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

புது வருடம் கலைத்துறையினருக்குயோகமாக அமையும்   புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள்.

ஆண்டின்  முற்பகுதி அலைச்சலையும் ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களைத் தருவதாக அமையும். 

பரிகாரம்: தஞ்சாவூர் நாதன் கோயில் நந்திபுர விண்ணகர பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளையும் தாயாரையும் தரிசித்து விட்டு வெண்பொங்கல் சாதம் விநியோகம் செய்துவிட்டு வருவது நல்லது . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

மிதுன ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                     தாயே பூமாதேவி
புதன் பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மிதுன ராசி அன்பர்களே . வருடம் பிறக்கும்போது ராசிக்கு 5-ல் சந்திரனும் சுக்கிரனும் இருப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கடனாக வாங்கிய பணத்தைத் தந்து முடிப்பீர்கள். 

பாசமிகு உங்களின் பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் சேரவேண்டிய பங்கு கிடைக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குக் கிடைக்கும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும்.வருடம் பிறக்கும்போது செவ்வாய் 10-ல் இருப்பதால் புதுப் பொறுப்பும் பதவியும் தேடி வரும். 

அந்தஸ்து மிக்க வேலை வாய்ப்புகள் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு  கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாய்வழி உறவுகள் மத்தியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

முதன்மை கிரகமான சூரியனும் ராசிநாதன் புதனும் 7-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், புதிய சிந்தனைகள் பிறக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். 

இந்த வருடத்தில் 12.2.19 வரை ராசிக்கு 20ல் ராகு மற்றும் 8-ல் கேது இருப்பதால், எதிலும் பிடிப்பற்ற போக்கு காணப்படும். பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். நீங்கள் சாதாரணமாகப் பேசினாலே மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். வழக்குகளில் தீர்ப்பு தாமதமாகும். பழைய கடன் பிரச்னைகளை நினைத்து அடிக்கடி வருத்தப்படுவீர்கள். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால், எதிலும் ஒருவித அச்ச உணர்வு, படபடப்பு, செரிமானக் கோளாறு ஏற்பட்டு நீங்கும். 

மனதிற்கு பிடிக்காதவர்களிடம் இருந்து அவநம்பிக்கை ஏற்படக்கூடும். சின்னச் சின்னப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தி உங்களை நீங்களே வருத்திக்கொள்வீர்கள். 

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை பிறகு 19.5.19 முதல் 27.10.19 வரை ராசிக்கு 6-ல் குரு இருப்பதால், வேலைச்சுமை இருந்தபடி இருக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதலாக உழைப்பீர்கள். 

ரகசியமான முக்கிய ஃபைல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்க இருப்பதால், உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும். தள்ளிப் போன திருமணம் கூடிவரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 

குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். விலை உயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வக்கிக் கடனுதவி கிடைக்கும். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள். 

ராசிக்கு  7-ல் சனி கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் - மனைவிக்கிடையே வீண் சந்தேகத்தின் காரணமாக பிரிவு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பொருள்கள் களவு போக நேரிடும் என்பதால் கவனம் தேவை. பணப் பற்றாக்குறை இருந்தபடி இருக்கும். 

மூலதனத்தை போட்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகளே! வியாபாரம் செழிக்கும். வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியுடன் சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். ஏற்றுமதி - இறக்குமதி, காய்கறி, ஹார்ட்வேர்ஸ் வகைகளால் ஆதாயம் கிடைக்கும். 

பணிசெய்யும் உத்தியோகஸ்தர்களே! உங்கள் தொலைநோக்குச் சிந்தனைகள் பலராலும் பாராட்டப்படும். 

உங்களின் உயர் அதிகாரிகளுடன் சின்னச் சின்ன மனக் கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களும் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்துக்கே மாறுதல் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். 

கல்வி பயிலும் மாணவர்களே! படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கலை, இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
கலைத்துறையினரே! உங்கள் கலைத்திறன் வளரும். பாராட்டுகளுடன் பரிசுகளும் கிடைக்கும்.

இந்த வருடம் நீண்ட கால விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் மன அமைதியைத் தருவதாகவும் இருக்கும்.

பரிகாரம் : பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள் . பக்தர்களுக்கு பச்சை பருப்பு பாயசத்தை பிரசாதமாக தானம் செய்யுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ரிஷப ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர்- அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                தாயே பூமாதேவி 

                    ரிஷப ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் :

நவ கிரகங்களில் சுக்ரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ரிஷப ராசி அன்பர்களே: உங்களின் ராசிக்கு 6-ல் சந்திரன் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் நழுவவிடாமல் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வலிமை ஏற்படும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

லாப ஸ்தானமான ராசிக்கு 11-ல் செவ்வாய் இருப்பதால்,செல்வம், செல்வாக்கு உயரும். அனுபவப்பூர்வமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். சகோதரர்கள் அன்புடன் இருப்பார்கள்.

இந்த புது வருட தொடக்கத்திலிருந்து 12.2.19 வரை கேது 9-ல் இருப்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் மனவருத்தங்களும் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடும். ஆனால், 3-ல் ராகு இருப்பதால் துணிச்சல் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை வேண்டாம். யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடவேண்டாம்.

சுகபோக வாழ்க்கைக்கு வழிகாட்டும் சுக்கிரன் 6-ல் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.

உங்களின் ராசியை இந்த வருடம் தொடக்கம் முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 7-ல் இருந்துகொண்டு  பார்ப்பதால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ல் மறைவதால், உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் ஏற்படும். திடீர்ப் பயணங்களால் உடல் அசதி உண்டாகும். 

அவசியமான செலவுகள் அதிகரித்தபடி இருக்கும். முக்கிய ஆவணங்களைக் கையாள்வதில் கவனம் தேவை. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். யாருக்கும் எதற்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். 

இந்த வருடம் முழுவதும் அஷ்டமச் சனி தொடர்வதால், அடிக்கடி கோபம் ஏற்படும். கடந்த கால ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள்.  அடிக்கடி தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். பெரிய நோய்கள் இருப்பதைப் போன்ற மனபிரமை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். 

லாபம் பார்க்கும் வியாபாரிகளுக்கு  வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி முதலீடு செய்யவேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். வேலையாள்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களுடன் பிரிவு ஏற்படக்கூடும்.

பணிபுரியும் உத்தியோகஸ்தலர்களே அலுவலகத்தில் நிலையற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதே நல்லது. அதிகாரிகள் குறை கூறினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். அவதூறு வழக்குகளும் ஏற்படக்கூடும்.

மாணவர்களே படிப்புகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

முன்னேற முயற்சிக்கும் கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் ஏற்படக்கூடும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.இந்த வருடம் சுற்றியிருப்பவர்களின் சுயநலப் போக்கை உணர வைப்பதுடன் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும். 

பரிகாரம்:பெருமாள் கோயிலில் தாயாரை - மல்லிகை - தாமரை மலர் கொண்டு வழிபடுங்கள் . பசுமாட்டிற்கு தயிர் சாதம் - பச்சரிசி வெல்லம் கலந்து சமைத்து தரவும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, December 29, 2018

மேஷ ராசி - 2019 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர்- ஆர். இராவணன் BSC

0 comments
 
                                 மேஷ ராசி - 2019 -  ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 

எந்த ஒரு சூழ்நிலையிலும் தான் முன்னே நின்று வெற்றி வாகை சூடும் மேஷ ராசி அன்பர்களே ,உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் ஏற்படும். 

என்றும் இளமை மாறாத பொலிவுடன் உள்ள உங்களின் அழகு, ஆரோக்கியம் கூடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால், வருடம் பிறக்கும்போது ராசிநாதன் செவ்வாய் - 12-ல் இருப்பதால், திடீர் பயணங்களும், அலைச்சலும் ஏற்படும்.சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சகோதர வகையில் மனக் கசப்புகள் அதிகரிக்கும்.

கோச்சாரப்படி வருகின்ற 12.2.19 வரை ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் இருப்பதால், மறைமுக நெருக்கடிகள், தாயாருக்கு முதுகுத் தண்டவடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ல் கேது அமர்வதால், பிதுர்வழிச் சொத்தில் பிரச்னைகள் ஏற்படும். 

பாசமிகு தந்தையின் உடல் நலனில் கவனம் தேவைப்படும். அவருடன் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆனால், ராகு 3-ல் இருப்பதால், மனதில் தைரியம் அதிகரிக்கும். தடைப்பட்ட விஷயங்கள் அனுகூலமாக முடியும். இளைய சகோதர வகையில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

இந்த வருடம் முழுவதும் சனி 9-ல் இருப்பதால், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். 

குடும்பத்திற்கு தேவையான அவசியமான செலவுகள் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும்.வருடம் பிறக்கும்போது புதன் சாதகமான வீட்டில் இருப்பதால், உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை பிறகு 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் இருப்பதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும்.
நீங்கள் நினைத்து பார்க்க முடியாத பயணங்களாலும் அதனால் அதிகரிக்கும் செலவுகளாலும் திணறுவீர்கள். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாகவும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை 9-ம் வீட்டில் அமர்வதால், செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தவோ அல்லது புதுப்பிக்கவோ செய்வீர்கள். தந்தையுடன் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும்.

மூலதனத்தை  போட்டு தொழில் செய்யும் வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்குவீர்கள். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்கள் வகையில் லாபம் கிடைக்கும்.

அரசாங்க உத்தியோகமானாலும் , தனியார் உத்தியோகமானாலும் - அயராது உழைக்கும் உத்தியோகஸ்தர்களே! குரு 8-ல் இருப்பதால் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரிகளின் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். இடமாற்றம் ஏற்படக்கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கல்வி பயிலும் மாணவ செல்வங்களே ! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடன் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.

வாழ்க்கையில் ஏழாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடா முயற்சியுடன் செயல்படும்  கலைத்துறையினரே! சின்னச் சின்ன தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும், புகழும் கௌரவமும் கூடும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.வருடத்தின் முற்பகுதி மனதில் சலனத்தை ஏற்படுத்தினாலும், பிற்பகுதி சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருக பெருமானுக்கு சிகப்பு நிற வஸ்திரத்தை சாத்தி வழிபடவும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Saturday, December 22, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 73 ல் இன்று 23 - 12 - 2018 - ல் - ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                         தாயே பூமாதேவி

இன்று  23 - 12 - 2018 - ஞாயிற்று  கிழமை  பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 23 ( புதனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 19 ( சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 73.( சூரியனின் ஆதிக்க எண் )
பிரமாதமான வித்யாபலம் பொருள் வரவு சொத்து மாடு மனை கம்பீரமான தோற்றம் போன்றவைகளை தரக்கூடியது  விளக்கு வெளிச்சத்தில் நிலத்தில் நடக்கும் மனிதர்களுக்கு மேலே ஐந்து நாணயங்கள் இருப்பது போன்ற எகிப்திய  சித்திரங்கள் இந்த 73 எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . அமிர்த ரசம் என்றும் - குன்றாத இளமை மோக்ஷம் என்றும் மந்திர நூல்களில் இந்த எண் பற்றி வருணிக்கப்படுகிறது .  ஹீப்ரு பிரமிடு எண் 73 ல் 

கேதுபகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் மனோ சக்திகள் பலம் அடைதலும் 3 என்ற அதிகார பலமும் புகழும் சுக வாழ்வும் சமயோசித சமர்த்தவர்களாக விளங்குதலும் மந்திரிகளின் செல்ல பிள்ளைகளாகவும் வீடு வாசல் தோட்டம் துரவு பால் - பசு பலவகையான ஸ்திர சொத்துக்கள் பெறுதலும் உண்டாகும் . தொழிலில் கூட்டு முயற்சிகள் வெற்றி உண்டாகும் . காம எண்ணங்கள் குறைந்து துறவற மனப்பான்மை கூட ஏற்படலாம் . தனுசு ராசி வீட்டில் மூலம் 1 ம் பாதத்தில் இடம்பெறும் இந்த 73 ம் எண் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோருக்கு மிகுந்த மேன்மைகளை தரும் . 

பரம்பொருளின் வற்றாத அமுத சுரபி போன்ற கருணை மழை எப்பொழுதும் இவர்கள் காட்டில் பெய்தவாறு இருக்கும் . குழந்தைத்தனமான அப்பழுக்கற்ற இதயத்துடனும் நேர்மையுடனும் சாந்த சொரூபமாகவும் வாழ்ந்து வந்தால் தாழ்வு இல்லை . எப்பொழுது அநியாயமான நடத்தைகள் தோன்றுகிறதோ அப்பொழுது வீழ்ச்சிகள் தொடங்கிவிடும் . 

இன்று 23 - 12  -  2018 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர் இன்னும் சிறப்பாக இருக்கும் . 

                                                   அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 31 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்         
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு . 
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை 

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு உரிய சூரியன் நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்தால் A - I - J - Q - Y - போன்ற ஆரம்ப எழுத்துக்களில் குழந்தையின் பெயரை வைக்கலாம் . 

A என்ற எழுத்தின் பலன்கள் :

A என்ற எழுத்து யாவற்றுக்கும் முதல் . படிப்படியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற அபிலாஷயையும் மன வலிமையையும் எடுத்த காரியத்தை சாதிக்கும் மன உறுதியை தரவல்லது . ஆக்கும் சக்தியையும் தரும் . எந்த விஷயத்திலும் நன்மையே மனதில் தோன்றும் . எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் . 

I என்ற எழுத்தின் பலன்கள் :

உலகத்தை ஆட்டி வைக்கும் எழுத்து இதுதான் என்றால் பொருத்தமே . நான் என்னுடையது என்ற சுய நலத்தை சுட்டி காட்டும் எழுத்தாகும் .மனதில் உறுதியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி தரும் . எல்லா ஆங்கில எழுத்துக்களிலும் இரண்டு மட்டுமே தனித்து நின்று அர்த்தத்தை தரும் . அதில் A . (ஒரு ) . மற்றொன்று I (நான் ) . எப்பொழுதும் எச்சரிக்கையுடனும் சுய நம்பிக்கை உடனும் இருக்கும் தன்னபிக்கை கொண்டது . திருமணம் தொழில் போன்ற போன்ற நல்ல பழங்கள் ஏற்படும் . வழக்குகளில் வெற்றி கிட்டும் . தன் மனதில் பட்டதை கூறி அதை சட்டப்படி பலரை பின்பற்ற வைக்கும் தன்மை கொண்டது . அவசரபடுதலும் உண்டு . இந்த I என்று சப்தம் ஸ்ரீசரஸ்வதி பீஜாட்சர மந்திரத்தில் காணப்படுகிறது . 

J என்ற எழுத்தின் பலன்கள் :

புதிய நண்பர்களை தரும் . இந்த எழுத்து எந்த பிரச்சனைகளையும் பல கோணங்களில் இருந்து ஆராயும் சக்தியை தரும் . செல்வங்கள் பெருகும் . இன்பமயமான வாழ்க்கை ஏற்படும் . ஆக்கல் சகதியும் சொந்த அபிப்பிராயமும் உண்டு . அரசாங்கம் காரியங்கள் பலிதமாகும் . கலைகளில் ஆர்வம் ஏற்படும் . நண்பர்கள் உறவினர்கள் ஆதரவு கிட்டும் . இந்த J என்ற எழுத்து ஜெயம் என்ற சொல்லில் வருவதையும் காணலாம்.

Q என்ற எழுத்தின் பலன்கள் :

நிதானமான அறிவையும் தீர்மானமான அபிப்ராயமும் வெற்றிக்காக போராடும் உறுதியை தரும் வலிமை கொண்டது . தலைவராக இருக்க விரும்புவார்கள் . இருப்பினும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் தரும் . பலவிதமான சோதனைகள் ஏற்படும் . 

Y என்ற எழுத்தின் பலன்கள் :

மற்றவரை அடக்கி ஆளும் திறமை ஏற்படும் . சொற்களை பயன்படுத்துவதில் வல்லமை ஏற்படும் . எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும் . செய்தொழிலில் நல்ல லாபம் ஏற்படும் .  
  
குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய 73 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும்  காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயில் .