Monday, August 10, 2020

காவல் துறையில்(POLICE DEPARTMENT) துறையில் பிரகாசிக்க கூடிய பெயர் அமைப்புகள். ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                          

ஜோதிடத்தில் தொழில் ரீதியாக ஒவ்வொரு துறையிலும பிரகாசிக்க ஒரு சில கிரக அமைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் ஒருவருடைய பெயர் அமைப்பையும் பெயரின் கூட்டு எண்களையும் வைத்து அவர் அந்த துறையில் வெற்றி பெற முடியுமா என்பதை சொல்லலாம்.

அதே போல் ஒருவர் காவல் துறையில் பிரகாசிக்க வேண்டுமானால் அவருடைய பெயரின்கூட்டு எண்கள் 9ம் எண்ணான செவ்வாயின் ஆதிக்கத்தில் அமையவேண்டும். அல்லது   இந்த 9  ம்  எண்ணின் நட்பு எண்ணான 6  5  3  1 போன்ற எண்களில் பெயரின் கூட்டு எண்கள் அமைய வேண்டும்.காரணம் ஜோதிட சாஸ்திரத்தில் போலீஸ் , ராணுவம், போன்ற துறைகளில் வேலை வாய்ப்பு அமைய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நல்ல இடங்களில் அமைந்திருக்க வேண்டும்.

இதில் செவ்வாய் பகவான் போலிஸ் ராணுவம். போன்ற துறைகளோடு சம்பந்தப்படுவதால் ஆங்கிலத்தில் POLICE  என்று எழுதி நியூமராலஜியில் ஒவ்வொரு எழுத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை  கொடுத்து மொத்தமாக கூட்டும்பொழுது POLICE =  8 7  3  1  3  5   = 27  = 9 .என்ற செவ்வாயின் ஆதிக்க எண் வரும்பொழுது இந்த துறையில் வேலை வாய்ப்பு அமைவதும் இந்த துறையில் மேலும் சில சாதனைகளை புரியவும் ஒருவருடைய  பெயரின் கூட்டு எண்கள் 9 எண்ணில் அமைய வேண்டும் என்பது நன்குஅறிய முடிகிறது.


அதே போல் காவல் துறையை ஆட்சி செய்யும் எண்ணான  9  ம் எண்  அதன் நட்பு எண்களான 5  6   3  1  போன்ற எண்களுக்கு நன்மை செய்யும் என்பதால் இந்த 5  6   3  1 போன்ற எங்களை பெயரின் கூட்டு எண்களாக கொண்டவர்களும் போலிஸ் துறையில் பிரகாசிக்கலாம். 
மேலும் பெயரின் கூட்டு எண்கள் எண்ணினர் மட்டும்தான் போலிஸ் துறையில் பிரகாசிக்க முடியுமா என்ற கேள்வி எழும்பொழுது இந்த 9  எண்ணை  பெயரில் பெற்றவர்கள் புகழ் செல்வாக்கு, தைரியம் பதவி உயர்வு போன்றவற்றை எளிதில் பெற்று விடுவார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்த 9 எண்ணை பெயரில் பெற்றவர்கள் காவல்  துறையில் (POLICE  DEPARTMENT ) பிரகாசிக்க முதல் தரமானவர்கள். 

அதேபோல் 9 ம் எண்ணிற்கு நட்பு எண்களான 5 6 3 1 போன்றவற்றை பெயரில் பெற்றவர்கள் காவல் துறையில் (POLICE  DEPARTMENT ) பிரகாசிக்க இரண்டாம் தரமானவர்கள். இரண்டாம் தரம் என்னும்பொழுது புகழ் செல்வாக்கு, பதவி உயர்வு போன்றவற்றை படிப்படியாக சிறிது காலம் கழித்து பெறுவார்கள். 

குறிப்பாக பெயரின் கூட்டு எண்கள் 9 ஐ  பெற்றவர்கள் காவல் துறையில் வேலை வாய்ப்புகளை  பெறவும் காவல் துறையில் பிரகாசிக்க முடியும் என்றாலும் . செவ்வாய் பகவானின் ஆதிக்க இரட்டை எண்ணான 27 எண்ணை பெயரில் பெயரில் பெற்றவர்கள் இந்த துறையில் மிக சிறந்த பலனை அனுபவிக்க முடியும்.  

காரணம் இந்த 27 ம் எண் பன்னிரண்டு ராசிகளில் மிதுன ராசியில் வரும் எண்ணாகும். 


இந்த மிதுன ராசி பஞ்ச பூதங்களில் காற்று அம்சத்தை  கொண்ட ராசியாகும்.  

புகழ் என்ற அர்த்தத்தை குறிக்கும் BOOST  என்ற சொல்லின் மொத்த எழுத்துக்களின் கூட்டு  எண்ணிக்கையான  23 எண்  இந்த மிதுன ராசியில் வரும் எண்ணாகும். 

எனவே பெயரில் 27 எண்ணை பெற்றவர்கள் காவல் துறையில் , இவர்களின் பெயர்கள் காற்றை போல் மூளை முடுக்கெல்லாம் பரவி புகழையும் செல்வாக்கையும் கொடுக்கும்.

மேலே சொல்லப்பட்ட எண்களை பெயரில் பெற்றவர்கள் மட்டும்தான் காவல் துறையில் இருக்கின்றார்களா? வேறு சில எண்களை பெயரின் கூட்டுஎண்களாக பெற்றவர்கள் காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கவில்லையா என்ற கேள்வி அனைவரின் மனதில்  எழும்.  

அப்படி பட்டவர்கள்  அந்த துறையில் பனி புரிந்தாலும் அந்த மேல் மட்ட பதவிகளையோ காவல் துறை சம்பந்தப்பட்ட அடுக்கடுக்கான மேன்மையான பதவி உயர்வுகளையோ அல்லது அந்த துறை சம்பந்தப்பட்ட ஒரு மேன்மையான அங்கீகாரத்தை பெற முடியாமல் எதோ இருந்தோம் வாழ்ந்தோம், சாப்பிட்டோம் உறங்கினோம் என்பது போல் காவல் துறை சம்பந்தப்பட்ட துறையில் ஒரு மேன்மையான பலனை எதிர்பார்க்க முடியாது.   


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment