Monday, August 31, 2020

கணவன் மனைவி பிரிவினையை உண்டாக்கும் பெயர் அமைப்புகள் ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர்.இராவணன் BSC

                          Woman being mad at her husband | Day Seven Ministries

திருமண வாழ்க்கையில் இணையும் ஆண் - பெண் இருவருமே  கடைசிவரை கணவனோடும் மனைவியோடும் இணைபிரியாமல் ஒற்றுமையுடன் - சந்தோஷமாக இருக்கவேண்டும் . இதுதான் திருமண வாழ்க்கையில் இணையும் ஒரு ஆணுக்கும் - பெண்ணுக்கும் உள்ள விருப்பம் .  

அதனால்தான் திருமணத்திற்கு முன்பு இருவரின் ஜாதகத்தையும் பார்த்து இருவருக்கும் பொருத்தம் இருக்கிறதா ? என்பதை பார்த்த பிறகே  திருமணம் செய்கிறார்கள் . அதேபோல் நியுமராலஜி முறைப்படியும் இருவரின் பிறந்த தேதியையும் பார்க்கவேண்டும் . இருவரின் பிறந்த தேதியும் நட்பான கிரகத்தின் ஆதிக்க எண்ணில் இருக்கவேண்டும் . 

அப்படி நட்பான கிரகத்தின் ஆதிக்க தேதிகளில் பிறந்திருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையும்பொழுது பிரச்சனைகள் பல இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து இல்லற வாழ்க்கையை சிறப்பாக அனுபவிப்பார்கள் . 

                           Naraj Shohar Ko Manane Ke Liye | Wazifa For Angry Husband – Talismat E  Sulemani +919242220786

அதேபோல் இருவரின் பெயரின்  மொத்த கூட்டு எழுத்துகளும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகத்தின் ஆதிக்க எண்ணின் அமைந்திருக்கவேண்டும் . அப்படி அமைந்திருக்கும் பட்சத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரிவினை வராது . மேலே சொன்ன பிறந்த தேதி - பெயரின் கூட்டு எண்கள் - ஜாதக பொருத்தம் - இந்த சாதகமான அமைப்புகள் எல்லாம் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஒற்றுமையை உண்டாக்கும் . 

சமீப காலத்தில் என்னிடம் ஜாதகம் பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார் . அவரின் ஜாதகம் - அவரின் கணவரின் ஜாதகம் - அவர் மகனின் ஜாதகம் - மூன்றையும் ஜாதக பலன்களை கேட்டார் . பின்பு தனக்கும் தனது கணவனுக்கும் இடையே உள்ள உறவு நிலை எப்படி இருக்கும் என்று கேட்டார் . கணவன் மனைவி இருவருக்கும் இடையே நிலவும் ஒற்றுமையில் நல்ல பலன்களே உள்ளது என்பதை கணவன் - மனைவி - அவர்களின் மகன் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் எடுத்து காட்டியது . 

                   Five Hilarious Reasons For Fight Between Husband and Wife - tubelight.pk

ஆனால் அந்த பெண்மணி கணவன் மனைவியாகிய நாங்கள் இருவருமே கடந்த பதினைந்து வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம் என்று சொன்னார் அந்த பெண்மணி . நான் அவர்களின் பெயர் அமைப்பை நன்கு ஆராய்ந்து பார்த்தேன் . அந்த பெண்மணியின் கணவர் பெயர் ராஜமாணிக்கம் (அதாவது ராஜாவாகிய மாணிக்கம் ). அந்த பெண்மணியின் பெயர் அழகுமதி . இந்த பெயர்களை நன்கு ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும் . 

நவகிரகங்களில் சூரியனை ராஜா என்றும் சந்திரனை ராணி என்றும் அழைப்பார்கள் . மேலும் சந்திரனுக்கு மதி -  இந்து - போன்ற பெயர்களும் உண்டு . அந்த பெண்மணியின் கணவர் பெயர் ராஜமாணிக்கம் . இந்த பெயரில் சூரியனை குறிக்ககூடிய ராஜா என்ற சொல்லும் - அந்த பெண்மணியின் அழகுமதி என்ற பெயரில் சந்திரனை குறிக்ககூடிய மதி என்ற சொல்லும் இணைந்திருக்கிறது . சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் பொழுதான் அமாவாசை . அமாவாசை என்பது இருள்மயமானது . பிரகாசம் இல்லாதது . அதனால்தான் ராஜமாணிக்கம் என்ற பெயரும் அழகுமதி என்ற பெயரும் திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையும்பொழுது அவர்களின் மண வாழ்க்கையே இருள்மயமாகிவிட்டது . அவர்களின் பிரிவினைக்கு இந்த பெயர் அமைப்பும் ஒரு காரணமாகிவிட்டது . 

ஆதலால் இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணைய போகிறவர்கள்களுக்கு  ஜாதக பொருத்தம் - பிறந்த தேதி - பெயர் பொருத்தம் - இது இருந்தால் மட்டும் போதாது . அவர்களின் பெயர்களில் உள்ளே ஒளிந்திருக்கும் நன்மை தீமை தரக்கூடிய பொருளையும் ஒலி உச்சரிப்பு அலைகளையும் பார்த்து திருமணம் முடித்தால்  இருமனமும் ஒற்றுமையுடன் - சந்தோஷத்துடனும் வாழலாம் . ஒவ்வொரு பெயருக்குள்ளும் உங்களுக்கே தெரியாத அர்த்தங்கள் ஒளிந்திருக்கும் என்பதை நிச்சயம் சொல்லலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment