Thursday, July 12, 2018

வெளிநாடு செல்வதை (FOREIN) குறிக்கும் கிரக அமைப்புகள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

                                                               ஓம் சக்தி
வெளிநாடு சென்று சம்பாதிக்கும் மோகம் இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகிறது . வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஆசைகள் மனதில் இருந்தால் மட்டும் போதாது . அதற்குரிய கிரக அமைப்புகளும்அவருடைய ஜாதகத்தில் அவர் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் பாக்கியத்தை கொடுக்கவேண்டும் .ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி வெளிநாடு செல்லும் கிரக அமைப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அவர் எந்த திசையில் உள்ள நாடுகளுக்கு செல்வார் என்பதையும் என்ன காரணங்களுக்காக செல்வார் என்பதையும் காண்போம் . காண்போம் .

சனிபகவான் குரு ராகு இந்த மூன்று கிரகங்களும் அயல் நாடு செல்வதை குறிக்கும் கிரகங்களாகும் . 

ராகு இதில் மிக முக்கியமான கிரகமாகும் . அயல் நாட்டு மக்களையும் அயல் நாட்டில் வசிக்கும் சூழ்நிலையை உருவாக்கும் கிரகமாகும் . அதேபோல் கிரகங்களில் சந்திரனும் அயல் நாட்டு மக்களையும் அந்நாட்டிற்கு போகும் எண்ணத்தையும் உருவாக்குபவர் . சந்திரனே மனதிற்கு காரகர் . அவர்தான் ஒருவருக்கு அயல்நாடு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அடிமனதில் உருவாக்குபவர் . ஆர்வத்தை தூண்டுபவரும் சந்திர பகவானே ஆவார் . 


சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் சுக்கிரன் இந்த கிரகங்கள் அனைத்தும் அயல் நாடு செல்வதற்கு உதவி செய்யும் கிரகங்கள் ஆகும் . துலாம் ராசி சர ராசியாகவும் (அதாவது நீண்ட தூர ராசி ) அதன் அதிபதி சுக்ரன் நீண்ட தூர பிரயாணத்தை குறிக்கும் கிரகம் என்பதாலும் துலாம் ராசியும் அதன் அதிபதி சுக்ரனும் இவைகள் வெளி நாடு செல்வதை குறிக்கும் மிக முக்கிய அம்சமாகும் . 

லக்கினத்திற்கு 3 - 9 - 12 - இடங்கள் முக்கியமாக நீண்ட தூர பயணத்தை குறிப்பிடும் பாவங்கள் ஆகும் . 

இதில் லக்னத்துக்கு 3 ம் இடம் சிறு தூர பயணத்தையும் 

லக்னத்துக்கு 9 ம் இடம் நீண்ட தூர பயணத்தையும் 

லக்னத்துக்கு 12 ம் இடம் அயல் நாட்டு தொடர்பையும் குறிக்கும் பாவங்கள் ஆகும் . 

புதன் கிரகம் - ஒருவர் உயர் கல்வி பெறுவதற்காக - ஆராய்ச்சி செய்வதற்ககாக வெளிநாடு செல்வதை குறிப்பிடும் கிரகமாகும் .

குரு பகவான் - ஆன்மீக சொற்பொழிவுக்காக கல்வி சாலைகளில் சொபொழிவு ஆற்றுவதறகாக செல்வதை குறிப்பிடும் கிரகமாகும் . 

சுக்கிரன் - சுற்றுலா செல்வத்தையும் திருமணமான புது தம்பதியர் இன்ப சுற்றுலா செல்வத்தையும் குறிக்கும் கிரகமாகும் . 

சனி - குரு - இந்த இரண்டு கிரகங்களும் 12 ம் வீட்டிற்கு அதிபதியும் அயல் நாட்டில் ஆசிரமம் அமைப்பதை குறிப்பவர்கள் . 

லக்கினத்திற்கு 1 - 3 - ம் இடங்கள் தன் நாட்டிற்கு அருகில் உள்ள நாடு களையும் 

லக்கினத்திற்கு 7 ம் சிறிது தூரமுள்ள நாட்டையும் 

லக்கினத்திற்கு 8 - 12 - ம் இடங்கள் நீண்ட தூரமுள்ள நாட்டையும் 
குறிக்கும் பாவங்கள் ஆகும் . 

இதில் லக்கினம் கிழக்கு பக்கமுள்ள நாடுகளையும் . 4 ம் இடம் வடக்கு பக்கமுள்ள நாடுகளையும் 7 ம் இடம் மேற்கு பக்கமுள்ள நாடுகளையும் 10 ம் இடம் தெற்கு பக்கமுள்ள நாடுகளையும் குறிக்கும் இடங்களாகும் .

மேலே சொன்ன கிரக அமைப்புகள் நீங்கள் வெளிநாடு செல்வத்தையும் எந்த திசையில் உள்ள நாடுகளுக்கு செல்வீர்கள் என்பதையும் துல்லியமாக காட்டும் கிரக அமைப்புகள் ஆகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





0 comments:

Post a Comment