ஓம் சிவசக்தி
ஒருவரின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளை அனுசரித்து ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தால் அந்த வியாபாரத்தில் நல்ல லாபம் காணலாம் . இந்த மூன்று எண்களின் கிரகங்கள் அவர்களின் ஜாதகத்தில் ஆட்சி - உச்சம் - கேந்திரம் திரிகோணம் - லாபஸ்தானம் போன்ற இடங்களில் இருந்து அந்த கிரகங்களின் ஆதிக்க எண்களில் கடை அல்லது நிறுவனத்தின் பெயரை அமைத்தால் லாபம் ஒரு படி மேலே போய் நிற்க்கும் .
இன்றும் பல பெரிய கடைகள் சிறிய கடைகள் வியாபாரத்தில் லாபம் ஈட்ட முடியாமல் தடுமாறி கொண்டுதான் இருக்கின்றன . பெருமளவுக்கு முதலீடு செய்து தொழிற்சாலைகளை அமைத்து நடத்த முடியாமல் மூடப்படும் நிலையில் உள்ள தொழிற்சாலைகளும் இருக்கின்றன . இவற்றுக்கு பல காரணங்கள் இருக்கலாம் . ஆனால் எனது கருத்து என்னவென்றால் செய்யப்படும் தொழில் பொருத்தமான பிறந்த தேதிக்கு தகுந்தவாறு தொழிலை தேர்ந்தெடுத்து அதில் இறங்கினால் வெற்றிகாணலாம் . வியாபார நிலையத்தின் பெயர் பொருத்தமான அதிர்ஷ்ட எண்களில் அமையவேண்டும்
ஒரு பெரிய நகரத்தில் பல ஜவுளி கடைகள் இருக்கின்றன . பல மில்களில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள் எல்லா கடைகளுக்கும் வருகின்றன ஆனாலும் சில கடைகளில் மட்டுமே கும்பல் அதிகம் காணப்படுகிறது .. அந்த கடையின் பெயரிலுள்ள எண் மக்களை தன்பால் இழுக்கும் சக்தி கொண்டதே என்பது ஜோதிட ரீதியான பார்வையில் என்னுடைய கருத்தாகும் . பிறந்த தேதிக்கு ஏற்ற வகையில் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து அதில் இறங்கி தொழில் நிறுவனத்தின் பெயரின் எண்களும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து விட்டால் அதில் லாபம் காணலாம் என்பது உண்மை .
சூரியனின் ஆதிக்க தேதியில் தேதியில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம் .
சூரியனின் ஆதிக்க தேதிகள் : 1 - 10 - 19 - 28 -
இந்த தேதிகளைதேதிகளை ஆதிபத்தியம் வகிக்கக்கூடிய சூரியன் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அரசாங்கத்தில் உயர்ந்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மிகுந்த தன்னம்பிக்கையும் உண்டு . தங்க வியாபாரம் வைர வியாபாரம் - பளபளப்பான ஓளி தரும் பேப்பர் வியாபாரம் ஓட்டு வியாபாரம் அக்கினியை மையமாக கொண்ட மர வியாபாரம் மூங்கில் கடை நடத்தலாம் . பணம் வட்டிக்கு விடுவது மருத்துவராகி மருத்துவ தொழில் செய்வது போன்றவை லாபம் தரும் .
சூரியனின்
ஆதிக்க எண்களில் 1- 10 - 19 - 28 - 37 - 46 - 55 - 64 - 73 - 82 - 91 -
100 என உண்டு . இவற்றில் 10 - 19 - 37 - 46 - 73 - 82 என்ற எண்களில்
நிறுவனத்தின் பெயர் அமைந்தால் அதிக நற்பலன்களை தரும் வலிமை கொண்டது . எண்
25 - 55 - இந்த எண்களில் வியாபார நிறுவனத்தின் பெயர் அமைந்தால் பிரமாதமாக
ஆரம்பித்து பின் நஷ்டத்தில் முடிய வாய்ப்புகள் அதிகம் .
பிறந்த
தேதியின் கூட்டு எண் 6 க இருந்தால் தங்கம் வெள்ளி வியாபாரமே சிறந்தது .
கூட்டு எண் 3 க இருந்தால் புத்தக கடை நல்ல லாபம் தரும் . கூட்டு எண் 4
என்றால் அரசாங்கம் மூலமாகவோ - அல்லது அரசு பணியில் உயர்ந்த ஸ்தானத்தை
அடையலாம். கூட்டு எண் 2 என்றால் ஐஸ்க்ரீம் - பால் வியாபாரம் மிக சிறந்த
லாபத்தை கொடுக்கும் . கூட்டு எண் 8 க அமைந்தால் இரும்பு வியாபாரம் எண்ணெய்
வியாபாரம் சோப்பு வியாபாரம் லாபத்தை தரும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
நான் ஒரு கடைவைக்கிறேகடை
ReplyDeleteகடையின் பெயர்
New Green Park
என்று வைத்துள்ளேன் எனது பெயர் ராஜாராம் தந்தையார் பெயர் ஆறுமுகம் தாயார் பெயர் சோமு அம்மாள் எனது ராசி கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பாகம் 4
பிறந்த தேதி 3/8/70
ReplyDelete