Wednesday, November 10, 2021

சத்யமூர்த்தி - SATHYAMOORTHI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


சத்யமூர்த்தி SATHYAMOORTHI
 சுக்ரனின் ஆதிக்கமும் சந்திரனின் ஆதிக்கமும் கலந்து சனிகிரகத்தின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் துலாம் ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும்.
 .
எகிப்திய பிரமிடுகளில் எட்டு விதமான வாள்களின் நடுவில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒரு பெண் சித்திரம் இந்த சத்யமூர்த்தி SATHYAMOORTHI என்ற பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு . 

"வாக்கு பலிதம் எனவும் - எதிர்காலத்தை உணர்தல் எனவும் மந்திர சாஸ்திர நூல்கள் இந்த பெயரோடு தொடர்புடைய அதிர்ஷ்ட எண்கள்  கூறுகின்றன . " லக்ஷ்மி கடாட்சம் - பிரகாசிக்கும் முகத்தாமரை எனவும் கூறப்பட்டுள்ளது . 

மிக சாமானிய மனிதரும் மிக மேலான நிலையை அடையலாம் . பெரிய பதவிகளையும் - நிகரற்ற மேன்மைகளையும் அடையலாம் . தீவிர உழைப்பும் - தனது காரியத்தை சாதித்து கொள்ளும் பிரமிக்க வைக்கும் சாமார்த்தியமும் இந்த பெயருக்கு சுலபமாக அமைந்து விடும் . 

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படியான முன்னேற்றமான சூழ்நிலை உண்டானாலும் போக போக  அனைத்தும் சரிய தொடங்கிவிடும் . 

பலருடைய விரோதத்தை வளர்த்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . மனக்கசப்பு முறைகேடான சூழ்நிலையால் மிகவும் கீழான சூழ்நிலையை அடைவார்கள் .

மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் உள்ள குடும்பத்தில் மனைவி குழந்தைகளிடத்தில் மகிழ்ச்சி இருக்காது . 

மற்றவர்கள் பார்வைக்கு நல்லவர்கள் போன்ற தோற்றம் கொண்டாலும் தனது மூளை பலத்தால் மற்றவர்களை வசீகரித்து ஏமாற்றும் சூழ்நிலை உண்டாகும் .

காவல் துறை உளவு துறை சிறை அதிகாரிகள் ராணுவ வீரர்கள் ஆகியோர்கள் இந்த பெயரை உடையவர்கள்  விபத்துக்களையும் எதிரிகளால் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும் .

சிறைவாசம் அனுபவித்தல் அதனால் சிக்கல்  இவர்களுக்கு அமையலாம் .  .

ஆரம்பத்தில் எவ்வளவுதான் சுகப்பட்டாலும் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் . கால புருஷனின் 7 ம் வீட்டில் இந்த பெயரின் ஹீப்ரு எண்  வருவதால் அந்தரங்க உறவுகள் மூலம் நோய்களும் ஆபத்துகளும் உண்டாகும் .

பிறந்த தேதி ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை வைப்பதன் மூலமும் அதிர்ஷ்டமான முறையில் பெயரை அதிர்ஷ்ட திருத்தம் செய்வதன் மூலமும் அதிர்ஷ்டமான எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம் . 


                                            அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

சத்யமூர்த்தி SATHYAMOORTHI பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக : 

பரிகாரம் : 1 

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்க இந்த பெயருக்கு உள்ள தோஷங்கள் போகும் .  . 

பரிகாரம் : 2 


நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிஅதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும் .  . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் சென்று வர நன்மைகள் பல உண்டாகும் . 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment