Tuesday, November 9, 2021

இன்றைய ராசி பலன் புதன் கிழமை நவம்பர் 11 - 2021 ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் -ஆர். இராவணன் BSC

                                                    

இன்று பிலவ வருடம் ஐப்பசி 24 ஆம் தேதி நவம்பர் 10,2021 புதன்கிழமை  . சஷ்டி திதி காலை 08.25 மணி வரை அதன் பின் சப்தமி திதி மறுநாள் காலை 06.50 மணிவரை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 03.41மணி வரை அதன் பின் திருவோணம். சந்திரன் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் 

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பணியிடத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக நல்ல வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். காதல், மண வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான நாள்.

ரிஷபம்

 ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்றைக்கு உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இன்றைக்கு பணி செய்வீர்கள். சுக ஸ்தானத்தில் உள்ள செவ்வாயும் சுக்கிரனும் உங்களுக்கு அதிக உற்சாகத்தை கொடுப்பார்கள். பெண்களுக்கு ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உடல் நலம் சுமாராக இருக்கும். காதல் மண வாழ்க்கையில் இன்றைக்கு சஞ்சலங்கள் அதிகரிக்கும்.

மிதுனம் 

உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. இன்றைய தினம் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். உடல் உழைப்பும், வேலைப்பளுவும் அதிகரிக்கும். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மவுன விரதம் இருப்பது நல்லது. அஷ்டமத்து சனியால் உடலில் அசதி ஏற்படும் கவனம் தேவை.

கடகம் 

ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் மனதிற்குள் ரொமான்ஸ் நினைவுகள் அதிகரிக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். இன்று இனிமையான நாள். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். 

சிம்மம் 

ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். காதல், மணவாழ்க்கை இன்றைக்கு உற்சாகமாக இருக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் அமையும். அலுவலகத்தில் இன்றைக்கு உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்கவும்.செய்யும் பணியில் பிறரின் இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படும். 

கன்னி

ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். காதல் வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் உதவி கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். 

துலாம்

 ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரநிலை சூப்பராக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் கேது இருந்தாலும் கலகலப்பான மனநிலையில் இருப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தல் கவனமும் தெளிவும் தேவை. பயணங்களைத் தவிர்த்து விடவும். 

விருச்சிகம் 

ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளதால் செய்யும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். காதல் நினைவுகளும், பேச்சுக்களும் உங்களின் துணையை உற்சாகப்படுத்தும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். உடல் நலம் உற்சாகமாகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் பணி பாராட்டத்தக்க வகையில் இருக்கும். 

தனுசு

ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் உடல் நலம் சீராக இருக்கும். செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். அதே நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் நலம் சீராக இருக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். 

மகரம்

ராசிக்குள் இன்று சந்திரன் பயணம் செய்வதால் உடல்நலம் நன்றாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். அம்மாவின் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். 

கும்பம் 

ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். புதுவித உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். பண வரவு நன்றாக இருக்கும். உங்களின் காதல் வாழ்க்கையும் மணவாழ்க்கை நன்றாக இருக்கும். மனைவியிடம் காதலோடு பேசுவீர்கள். திருமண வாழ்வின் உச்சக்கட்ட மகிழ்ச்சியை அடைவீர்கள். 

மீனம் 

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் உற்சாகமாக இருப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் வேலை பிறரால் மதிக்கும்படி இருக்கும். உங்களின் அந்தரங்க விசயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதுவே உங்களின் குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



0 comments:

Post a Comment