Tuesday, November 30, 2021

நவம்பர் 30 - 2021 - இன்று செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலமானவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி                              

                                               இன்று பிறந்தவர்களின்  :

பிறந்த தேதி -30 - 11 - 2021  (குரு கிரகத்தின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 10  (சூரியனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 72 (இதுவும் செவ்வாயின் ஆதிக்க எண் ) 
பிறந்த கிழமை - செவ்வாய் 

இன்று 30 - 11 - 2021 - செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 72. மிக மிக அதிர்ஷ்டமான எண் . ஈசுவர அம்சம் கொண்டது . 

ஞானகாரகன் கேதுவும் மனோகாரகன் சந்திரனும் இணைந்த இந்த எண்ணை  பெற்றவர்கள் ஞானிகளாகவும் சந்தேகபுத்தி உடையவர்களாகவும் விளங்குகிறார்கள் . ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் பிறகு மிகவும் சுகப்படக்கூடிய எண்ணாகும் . 

சம்பாதிக்கிற  சொத்துக்கள் அடுத்தடுத்து வரும் சந்ததிகள் அன்பவிக்கிற அளவுக்கு வந்துவிடும் . 


அபாரமான செல்வநிலையும் மனோதைரியமும் இந்த எண்ணிற்கு உண்டு . நிலையான ஐசுவரியமும் நிறைந்த சொத்தும் உண்டு . 

செல்வம் நீர்வீழ்ச்சிபோல் வந்துகொண்டே இருக்கும் . வற்றாத நீர்வீழ்ச்சியாக இருக்கும் , 

பலவிதமான சுகங்களையும் - அரசாங்க ஆதரவையும் இந்த எண் பெற்று தரும் குபேர தன்மை பெற்ற இந்த எண் கொடுக்கல் வாங்கல் தொழில்களில் முன்னேற்றம் தரும் .

எப்பொழுதும் பணம் புழங்கிக்கொண்டே இருக்கும் . வியாபாரம் வெற்றி தரும் . வீடு நிலம் வாகன வகை தொழில்களும் உண்டு .  விரோதிகள் சரணடைதல் - தீய சக்திகளை அழித்தல் தியானம் யோகம் இசை வெளிநாட்டு பொருள்கள் மூலம் யோகம் உண்டு . 

ஆண்களுக்கு பெண்களால் சிக்கல்கள் சில சமயங்களில் தோன்றும். பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயர் அமைப்பதன் மூலம் இன்று பிறந்தவர்களுக்கு   எதிர்காலம் மேலும் சிறப்பாக இருக்கும் . 

                                                   அதிர்ஷ்டமானவைகள் :
திசை -  தெற்கு 
வர்ணம் - நீலம் சிகப்பு 
கல் - பவழம் 
கிழமை - செவ்வாய் - வியாழன் - வெள்ளி 
தேதி -  5 - 14 - 23 - 9 - 18 - 27 - 3 - 12 - 21 - 30 - 6 - 15 - 23.
உலோகம் - தங்கம் - வெள்ளி 

வழிபாடு - முருகப்பெருமான் 

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 72 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்

                                  இன்று நவம்பர் 30 ல் பிறந்தவர்கள் :


ஜெகதீஷ் சந்திரபோஸ் - தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை நிரூபித்த இந்திய அறிவியல் அறிஞர் . பிறப்பு 30 - 11 - 1858 


வாணி ஜெயராம் - இந்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகி .  பிறப்பு . 30 - 11 - 1945 


கே ஆர் . விஜயா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை . பிறப்பு 30 - 11 - 1947 


ஜானகி ராமச்சந்திரன் .  தமிழகத்தின் முந்நாளைய முதல்வர் திரு எம். ஜி ராமச்சந்திரனின் மனைவி ஆவார் . 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment