Wednesday, April 28, 2021

வெளிநாடு செல்லும் யோகம் உங்களுக்கு இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷட எண்கணித ஜோதிட நிபுணர் - ஆர் . இராவணன் BSC

                                                   தாயே பூமாதேவி 


வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதிக்கும் ஆசை அனைவருக்கும் உண்டு . அந்த ஆசை நிறைவேற அவரவர் ஜாதகப்படி கிரகங்களின் ஒத்துழைப்பும் வேண்டும் . அயல்நாட்டில் சென்று சம்பாதிக்கும் கிரகநிலைகளை இங்கு காண்போம் .  

லக்னத்துக்கு 12 பாவம் நீர் ராசியாக அமைவது அல்லது சர ராசியாக அமைவது வெளிநாடு செல்வதகிரக நிலையாகும் .

சுக்ரன் அல்லது சந்திரன் 12 ம் பாவத்தில் இருந்து அந்த 12 ம் இடம் சர ராசியாக அல்லது நீர் ராசியாக அமைவது .


சந்திரன் லக்னத்துக்கு 7 - 8 - 9 - 12 - வீட்டில் இருப்பது அல்லது அந்த வீட்டின் அதிபதியோடு  காணப்பட்டாலும் அயல் நாடு செல்லும் யோகங்களில் ஒன்றாகும் .

லக்னத்துக்கு  9 - 12 - அதிபதிகள் பரிவர்த்தனை ஆனாலும் அல்லது 7 - 12 - அதிபதிகள் பரிவர்த்தனையானாலும் அல்லது 7 - 9 - ம் அதிபதிகள் பரிவர்த்தனையானாலும் வெளிநாடு செல்லும் அமைப்பு உறுதியாகிவிடும் .

இனி வெளிநாடு செல்லும் ராஜ யோக அமைப்பை காண்போம் .


விஷ்ணு யோகம் என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு 9 - 10 - வீட்டுக்கு அதிபதிகள் இணைந்து 2 ம் பாவத்தில் இருப்பது வெளிநாடு சென்று சம்பாதிக்கும் கிரக அமைப்பில் ஒரு ராஜயோக அமைப்பாகும் . இந்த யோகத்தை தரும கருமாதிபதி யோகம் என்றும் சொல்லலாம் .

9 - 10 - அதிபதிகள் அவர்கள் இருந்த அம்சாதிபதிகளுடன் இணைந்திருப்பது மேலும் அவர்களுடன் 2 ம் பாவத்தில் இருப்பது இன்னும் கூடுதலான அமசமாகும் .

மேலே சொன்ன கிரக அமைப்புகள்  உங்களின் ஜாதகத்தில் இருந்தால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் உறுதியாகிவிடும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328

0 comments:

Post a Comment