Friday, May 1, 2020

இன்று 2 - 5 - 2020 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                       தாயே பூமாதேவி
                                          இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 2 - 5 - 2020 (சந்திரனின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 11 (இதுவும் சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 93 ( குருவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்றைய தேதியில் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 93. இந்த எண் கும்ப ராசியின் ஆதிக்கத்திக்கு உட்பட்ட எண்ணாகும் . மனோரத சித்திகளை வழங்கும் எண் ஆகும் . " உலகை ரட்சித்தல் "  வருவதால் மக்களை ஆளும் பதவிகள் உண்டு . தெய்வகருணை  பெற்ற எண் என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகளை உண்டாகி வரும் . 

செவ்வாயும் குருவும் இணைந்து 93 ம் எண்ணாக வருவதால் கற்பனை வளம் மிகுந்திருக்கும் . யாரும் சாதிக்க முடியாத காரியங்களை சாதித்து வெற்றி கொள்ளும் வெற்றிமானாக விளங்குவார்கள் . 


அற்புதமான காரியங்களை ஆற்றி சீர்திருத்த  மேன்மைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் உள்ளவர்கள் . சதயம் எண்ணும் ராகு நட்சத்திரம் முதற்பாதம் 93 ம் எண்ணாக வருவதால் உலக அறிவு மிகுதியாக  உண்டாகும் . 

மனதில் மலரும் ஆசைகள் நிறைவேறும் . காவிய நாடகங்களும் திரைப்படங்களும் சொற்பொழிவுகளும் புகழும் பொருளும் வழங்கி கலைஞர் என்ற பெயரும் தரும் . பல தொழில்களில் லாப மேன்மை உண்டு . கும்ப ராசி 310 டிகிரி பாகையில் இடம்பெறும் இவ்வெண் நவாம்சத்தில் தனுசு ராசியின் முழு தன்மையை பிரதி பலிப்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வரும் குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு எண் 93 க வரும்பொழுது மிகுந்த அதிர்ஷ்ட மேன்மையை உண்டாக்கும் . 


பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 க வரும் குழந்தைகளுக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்தால்  எதிர்காலத்தில் வீண் சிக்கல்கள் உண்டாகும் . 

ஆகவே பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் .  


                                               அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - வடகிழக்கு 
வர்ணம் - தாமிர சிகப்பு - ரோஸ் 
ரத்தினம் - புஷ்பராகம் 
கிழமை - வியாழன் திங்கள் செவ்வாய் 
தேதி - 3 - 12 - 21 - 30 -  9 - 27 - 2 - 11 - 20.
உலோகம் - தங்கம் 
தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2


நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3


தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  


இன்று 2 - 5 - 2020 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

பிரையன் லாரா - மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் ( பிறப்பு 2 - 5 -  1969 ) 
டேவிட் பெக்காம் - இங்கிலாந்தின் கால்பந்தாட்ட வீரர்  ( பிறப்பு - 2 - 5 - 1975)
கேம்பிரிட்ச் இளவரசி சார்லட்  -  இவர் வேல்சு இளவரசர் சார்லஸ் - டயானா அவர்களின் பேத்தியாவார் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment