Tuesday, May 26, 2020

இன்று 27 - 5 - 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


                                   பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
                                          இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 27 - 2  - 2020 செவ்வாயின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 18  - ( செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 18 ( செவ்வாயின் ஆதிக்க எண் )

1என்ற சூரியனும் 8 என்ற சனியும் இணைந்து 18 என்று வந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும்   ஒளி  நிறைந்த நிலவின் படமும் - குளக்கரையும் - ஜீவ ஜந்துக்களும் - போன்றவைகளை குறிக்கும் படங்கள்  எகிப்திய ஓவியங்களில் இந்த 18 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன.  

தேவ கன்னிகை வசியம் என் இந்த எண்ணை பற்றி மந்திர நூல்கள் சொல்லுகின்றன . 1 என்ற சூரியனும் - 8 என்ற சனியும் இணைவதையும் - 9 என்ற செவ்வாயின் தன்மை 18 னுள் விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . 


தெய்வீகத்தையும் - போரையும் - நீதிக்காக - போராடுவதையும் இந்த எண் உணர்த்துகிறது . பூசல் - போராட்டம் - தீ - நீர்  - புயல் - ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த எண் குறிக்கிறது . 18 நாள் நடந்த பாரத யுத்தத்தையும் - பகவத் கீதையின் 18 அத்தியாத்தையும் - 18 படிகளை கடந்தால் ஐயப்ப தரிசனம் என்பதையும் இவ்வெண் உணர்த்துகிறது . 

காரிய தாமதம் - தெய்வீக வீழ்ச்சி - கஷ்ட நஷ்டங்கள் - சூழ்ச்சிகள் - சுய நலம் போன்றவற்றை இவ்வெண் வழங்குகிறது  . அருள் குறைந்து அமைதி இழந்து மனமறிந்தே தவறான பாதைகளில் இறங்குவதையும் - சமூக விரோத செயல்களையும் பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் -ஆயுதங்களினாலும் உயிருக்கு ஆபத்து வருவதையும் இந்த 18 ம் எண் குறிக்கிறது . தவறு என்று தெரிந்தும் மற்றவர்களை தண்டிக்கும் சூழ்நிலையும் உண்டாகும். 

சூரியனும் - சனியும் - ஜாதகத்தில் சேர்ந்து இருக்க கூடாது என்பது ஜோதிட விதி . சூரியனின் சிம்ம லக்னத்திற்கு ரோக - ருண - சத்துரு ஸ்தானமாக சனியின் மகர வீடும் - சனியின் மகர லக்னத்திற்கு அப ஜெயம் - ஆபத்து - ஆயுள் விரய ஸ்தானமாக சூரியனின் சிம்ம வீடும் - "சஷ்ட அஷ்டமும் "  ஜோதிடம் கற்றோர் அறிவர் . 


பெயரில் இவ்வெண் அமைவதை விட ஹீப்ரு இந்த 18 ம் எண் அமையும் பொழுது இரட்டிப்பான தீமைகளை வழங்கி விடுகிறது . 18 ம் எண்ணில் பெயர் உடையவர்கள் தீய குணங்கள் தெரியாத வண்ணம் காட்சியளிப்பார்கள் . 1 என்ற ஆத்மகாரனும் 8 என்ற ஆயுள் காரனும் இணைந்து யுத்த காரனான 9 ஐ வெளிபடுத்துவதால் மனதுக்கு மாறான காரியங்கள் நிகழ்ந்தே வருகின்றன . SRILANKA (ஸ்ரீலங்கா )- KASHMIR (காஷ்மீர் ) இவைகளின் கூட்டு தொகை 18 வருவதும் இந்த இடங்கள்  யுத்த - ரத்த களங்களாக இருப்பதை அறியலாம். 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு :  பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - மற்றும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - 2 க வருபவர்கள் இந்த 18 ம் எண்ணில் பெயரை வைத்து கொண்டால் உடல் சிதறுண்டு போதல் அல்லது சேதப்படுதல் அகால மரணங்களுக்கு ஆளாக கூடும். இது மிக்க தீமை பயக்கும் எண்ணாகும் .

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 18 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 


நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் .

இன்று மே 27  ல் பிறந்தவர்கள் :

ரவி சாஸ்திரி - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ( பிறப்பு - 27 - 5 - 1963  )
நிதின் கட்காரி -  பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்  ( பிறப்பு 27 - 5 - 1957)

ராச்சல் லூயி கார்சன் - அமெரிக்க உயிரியல் ஆய்வாளர் (பிறப்பு 27 - 5 - 1907)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment