Wednesday, April 27, 2022

GOPAL - கோபால் - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                     ஓம் சிவசக்தி


GOPAL - கோபால் - ராகுவின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . இரண்டு கிரகங்களின் ஆதிக்கமும்  கலந்து புதனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் . 

ஒரு தேவதையின் கையில் கோப்பை போன்ற   எகிப்திய சித்திரங்கள் இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு  எண்ணோடு தொடர்பு பெற்று காணபடுகின்றன. 

சிருங்கார தாண்டவம் " என்ற மந்திர வார்த்தைகளும் - " தேவியின் ஆனந்த தாண்டவம் என தேவியின் புகழ் கூறும் சௌந்தர்ய லஹரி நூல் கூறுகிறது . 

புதனின் ஆதிக்கத்தை கொண்ட பெயர் வரிசையில்   மிகவும் அற்புதமானபெயராகும்  .

சிம்ம ராசியில் புதனின் பலனை குறிக்கும் பெயராக  இந்த பெயர்  விளங்குகிறது 

சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை இந்த பெயர் ஏற்படுத்துகிறது . 

சரித்திர புகழ் - மிக உயர்ந்த பதவி - வசீகரமான முகம் - மக்கள் சக்தி கூடி கொண்டே போகுதல் போன்ற பாக்கியங்களை இந்த பெயர்  வழங்கும் 

வாழ்க்கையில் அனைத்துவித சுகத்தை அனுபவிக்கும் சூழ்நிலையையும் பதவியையும் இந்த பெயர் கொடுக்கும் . 

.பராசக்தியின் அருள் பூரணமாக  இந்த பெயருக்கு உண்டு .  

பரம ஏழ்மை நிலையில் உள்ளவரும் கூட பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த பெயரில் உண்டு . 

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வல்லமை இந்த பெயருக்கு உண்டு .

ஆன்மிகம் தத்துவம் - அரசியல் - விஞ்ஞானம் - திரவம் சம்பந்தப்பட்ட பொருள்கள் ஆகிய அனைத்திலும் மேன்மை உண்டாகும் . 

நண்பர்கள் - பெண்களால் உதவி போன்றவைகள் இந்த பெயருக்கு  

எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களும் இவர்களே . லாகிரி வஸ்துக்கள் போதை பொருள்கள் போக சுகங்கள் இவைகளில் தீவிரமான ஈடுபாடுகள் உண்டாகும் . 

மனிதருள் மாணிக்கமாகவும் - சாதனை செம்மலராகவும் - எவ்வழியிலும் உயர்ந்த பதவியை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . 

சுயநலக்காரர்கள் சிலரால் அவர்களின் சுகத்துக்காக இவர்களை பலிக்கடாவாக ஆக்கி விடுவதும் உண்டு . 

வளமான வாழ்க்கை பாதையை நோக்கி செல்லும் இவர்கள் செல்வம் நல் வாழ்க்கைதுணை வாகனம் ஆன்மீகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள் .

உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் நட்பு எந்த கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை அனைத்தும் இந்த எண் காரர்கள் பெற்றிருப்பார்கள் 

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை மறந்து மயக்க உணர்ச்சிகளுக்காக மண் மனை பூமி பொருள்களையெல்லாம் இழக்க கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் 

வெற்றி வீரராகவும் - இவர்களின் சொல்லுக்கு  அனைவரும் அடங்குதலும் இந்த பெயரின்  அற்புத பலன்களாக கருதலாம் . முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ள இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய செயல்களில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . 

பிறந்த தேதி - 5 - 14 - 23 - 8 - 17 - 26 - 9 - 27 - 18- க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் - 5- 8 - 9-  க வருபவர்களும் - இந்த பெயரை வைத்துக்கொண்டால்  மிகுந்த நற்பலன்கள் தரும் . 



                                         அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 


GOPAL - கோபால் - பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் உண்டாக ;

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் .  .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் இந்த பெயருக்கு வாழ்க்கையில் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் . 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

ஏழாம் இடத்தில் கேது இருந்தால் திருமணம் தடைபடுமா(அனுபவ ஜோதிட ஆராய்ச்சி கட்டுரை) ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர். ராவணன் BSC

0 comments

                                                        ஓம் சிவசக்தி


எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னத்துக்கு 7 ம் இடத்தில் கேது இருந்தால் திருமணமாவது சந்தேகம் என்று சொல்பவர்கள் உண்டு . கேதுவிற்கு ஞானி என்றும் - துறவி என்றும் வேறு பெயர்களும் உண்டு . துறவி களத்திர ஸ்தானம் பெற்றால் இல்லறத்தை விரும்ப மாட்டார்கள் என்பதால் உற்ற வயதில் திருமணம் தடை படும் என்று சொல்லலாம் . 

ஞானி களத்திர ஸ்தானம் பெற்றால் ஞானியாகவே ஆகிவிடுவான் எனவே திருமணம் தடை படும் என்று சொல்பவர்களும் உண்டு . ஏழாம் இடத்தில் கேது இருந்தால் துறவி அல்லது ஞானி திருமணத்தை விரும்பாதவன் என்று கொண்டால் துறவி ஆவதற்கு வேறு கிரகங்களே தேவை இல்லை என்றும் ஏற்படுகிறது 

பல ஞானிகளின் ஜாதகங்களையும் துறவிகளின் ஜாதகங்களையும் பார்க்கும்பொழுது அவர்கள் எல்லோரும் எழில் கேதுவை பெற்றவர்கள் அல்ல என்று தெரிகிறது . ஆனால் என்னுடைய ஜோதிட அனுபவத்தில் ஏழில்  கேது இருந்து சில காலத்துக்கு பின் ஞானி ஆனவர்களையும் , முதலில் ஞானியாயிருந்து பின்னால் திருமணம் செய்து கொண்டு நல்லபடி வாழ்பவர்களையும் நான் அனுபவத்தில் பார்த்ததுண்டு . 


அதனால் லக்னத்துக்கு 7 ம் இடத்தில் கேது இருந்தால் ஞானியாகவோ துறவியாகவோ ஆகி விடுவார் என்ற வாதம் சரியில்லை . 

நான் பார்த்த ஜோதிட அனுபவத்தில் சில பெண்களுக்கு லக்னத்துக்கு ஏழாம் இடத்தில கேது வீற்றிருந்து அவர்களுக்கு திருமணம் நடந்து இருக்கிறது . ஏழில்  கேது இருக்கும் பெண்கள் எல்லாம் ஞானிகளாக ஆகிவிட்டார்களா? இல்லை . அவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள் .

மேலும் ஏழாம் இடத்தில் கேது இருந்து அந்த கேதுவை குரு பகவான் பார்த்தல் திருமணம் இனிதாக முடிந்து சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துவார்கள் . இது ஜோதிடராகிய நான் சொல்லும் அசைக்க முடியாத வார்த்தை . 

சுருக்கமாக சொல்ல போனால் ஏழாம் இடத்தில் கேது இருந்தால் 30 வயது தாண்டியவர்களுக்கு திருமண தடையை செய்வதில்லை . ஆனால் மனைவிக்கு அடிக்கடி ஏதாவது  நோயை கொடுத்து கொண்டிருக்கும் . இது என்னுடைய ஜோதிட அனுபவத்தில் நான் கண்ட உண்மை . 


ஏழாம் இடத்தில கேதுவுடன் சூரியன் சேர்ந்து இருந்தாலும் திருமணம் நடக்கும் .ஆனால் குடும்பத்தில் வெறுப்புணர்ச்சி அதிகரித்து காட்டும் . மனைவியிடம் அடக்கடி மன வேற்றுமை காட்டும் . 

ஏழாம் இடத்தில் கேதுவுடன் சந்திரன் சேர்ந்து இருந்தால் காதலில்  தோல்வி அடைந்து விரக்தி அடைந்து விடுவார். அல்லது மனைவியின் எண்ணம் வேறு விதமாக இருக்கும் தம்பதிகளுக்கு ஆயுளும் குறையலாம் . 

செவ்வாயும்  கேதுவும் ஒரே மாதிரியான பலனை செய்வார்கள் . ஒரு ஆண் மகனின் ஜாதகத்தில் செவ்வாயும் கேதுவும் இருவருமே ஏழாம் இடத்தில் இருந்தாலும் சிறு பெண்ணையே அவர் மணப்பார் . இவருக்கு   கணவனை இழந்த ஒருத்தியின் நேசமும் ஏற்படும் . 

ஏழாம் இடத்தில் கேதுவுடன் புதன் சேர்ந்தால் நாள் கடந்து திருமணம் நடந்தாலும் சிறிய பெண்ணையே அந்த ஜாதகர் மணப்பார் . இல்லற வாழ்க்கையில் நல்ல சந்தோஷமும் செழுமையும் வளமும் செழித்தோங்கும்

ஏழாம் இடத்தில் கேதுவுடன் குரு சேர்ந்து இருந்தால் சம்பிரதாயப்படி திருமணம் ஏற்படுவது அரிது . உயர்ந்த குலத்தை சேர்ந்த பெண் இவருக்கு மனைவியாக வாழ்க்கை படுவார் . 


ஏழாம் இடத்தில் கேதுவுடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் நல்லபடி திருமணம் ஏற்படுவது அரிதாகும் . இவருக்கு கீழ் படிந்த வேலை செய்பவர்களின் தொடர்பு ஏற்படும் . 

ஆதலால் ஏழாம் இடத்தில கேது இருந்தால் திருமணம் நடக்காது என்ற கருத்து காலம் காலமாக சொல்லி கொண்டு வந்தாலும் எழில் இருக்கும் கேது அதனை பார்க்கும் கிரகம் - அதனோடு சேர்ந்து இருக்கும் கிரகம் இவற்றை கொண்டு பலன் சொல்ல வேண்டும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

ஏப்ரல் 28 - 2022 - இன்று வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                      தாயே பூமாதேவி 


                                            இன்று பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி - 28 - 4 - 2022  (சூரியனின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 20  (சந்திரனின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 76 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வியாழன் 

இன்று 28 - 4 - 2022 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 76 .

கேது பகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் சுக்ரனை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் இணைந்து ராகு கிரகத்தின் ஆதிக்கத்தை இந்த 76 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

புது புது வழிகளில் பணம் பொருளாதாரம் வந்து சேரக்கூடிய பாக்கியத்தை கொடுக்கக்கூடியது இந்த எண் .எகிப்திய பிரமிடுகளில் நாணயங்களில் நட்சத்திர குறி பொறிக்கும் மனிதனோடு கூடிய சித்திரங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

இவர்கள் மூலமாக கஷ்டப்படுபவர்களுக்கு நன்மையும் பலனும் உண்டாகும் . மற்றவர்களுக்கு உதவும் செயல்களில் ஈடுபடுவதால் கடவுளின் ஆசியுடன் இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும் . 


சமுதாய நலனில் அக்கறை கொண்டு பொது காரியங்களில் அந்தஸ்தும் புகழும் உயரும் . மற்றவர்கள் பார்த்து வியப்படையும் அளவுக்கு மற்றவர்கள் கண்டு பிடிக்கமுடியாத புது புது வழிகளில் பண வரவு இவர்களிடம் இருக்கும் . இவ்வளவு சிறப்பான பலன்கள் இவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றாலும் சில நேரங்களில் திடீரென எல்லா செல்வங்களையும் இழக்க நேரிடும் சூழ்நிலையும் உண்டாகும் . 
தொழில் நிறுவங்களுக்கு இந்த எண்களில் பெயர் அமைவது லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் .     

வட்டிக்கடை நிதி நிறுவனம் மூலமாக லாபம் உண்டாகும் . ஓவியம் பிரிண்டிங் தொழில் சிற்பம் போன்ற தொழில்களால் மேன்மை உண்டாகும் . 

கலை துறையில் நிலையான வெற்றி உண்டாகும் . 


பெயரின் எண் இந்த 76 வந்து  பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 19 - 46 - 37 ஜக வந்தால் நிலைத்த வெற்றிகளை தரும் . பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் மேலே கெட்ட பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குழந்தையின் எதிர்காலம் வளமானதாக அமையும் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  குழந்தைகளுக்கு  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வரும் குழந்தைகளுக்கும்  இந்த 76 ம் எண்ணில் பெயர் அமைத்து கொண்டால் வாழ்க்கையில் தீமையான பலன்களை அனுபவிக்க நேரிடும் . 


                                                அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி

நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று பிறந்த குழந்தைகளின்  ஜாதகத்தில் 76 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 

           இன்று ஏப்ரல் 
28  ல் பிறந்த பிரபலங்கள் : 


ஜேம்ஸ் மன்றோ - அமெரிக்காவின் 5வது குடியரசு தலைவர் ( பிறப்பு 28 - 4 - 1758 )


சமந்தா ருத் பிரபு - இந்திய தெலுங்கு திரைப்பட நடிகை (பிறப்பு - 28 - 4 1987)



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328