Monday, January 18, 2021

காலசர்ப்ப தோஷத்தின் வகைகளும் - அதை போக்கும் பரிகாரங்களும் ? ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                              

அனைத்து கிரகங்களும் ராகு கேதுவுக்கு இடையில் அமைந்து ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால் அது பூரண கால சர்ப்ப தோஷமாகும் . ஏதேனும் ஒரு கிரகம் வெளியே அமைந்தாலும் அது பூரண கால சர்ப்ப தோஷம் ஆகாது . லக்கினம் ஏழாம் வீடு தவிர மற்ற வீடுகளில் அமரும் ராகு கேதுக்களை பொறுத்து சர்ப்ப தோஷம் பல வகைப்படும் . 

அனந்த காலசர்ப்ப தோஷம் :

ராகு முதல் வீட்டிலும் கேது ஏழாம் வீட்டிலும் இருக்க மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைவதே அனந்த கால சர்ப்ப தோஷம் . இதை விபரீத காலசர்ப்ப தோஷம் எனவும் கூறலாம் . இவர்கள் பல இடையூறு கஷ்டங்களுக்கு பிறகு தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர் . எனினும் திருமண காலத்தில் சில இடையூறுகள் உண்டாகும் . 

சங்க சூட சர்ப்ப தோஷம் :

ராகு 9 ம் வீட்டிலும் கேது 3 ம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் கூறுவர் . முன்கோபியும் கூட . வாழ்க்கை ஏற்ற தாழ்வு நிறைந்ததாக இருக்கும் . 

கடக சர்ப்ப தோஷம் :

ராகு 10 ல் இருக்க கேது 4 ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும் . அரசாங்க தண்டனை உண்டு . 10 ல் இருக்கும் ராகு  இருட்டு சம்பந்தமான தொழிலை கொடுப்பார் . புகைப்படம் எக்ஸ்ரே போன்ற தொழில்கள் கிடைக்கும் . ராகுவுக்கு இடம் கொடுக்கும் ராசிக்கு அதிபதி கெட்டிருந்தால் சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்ய தூண்டுவார் . 

குளிகை சர்ப்ப தோஷம் :

ராகு 2 ம் வீட்டிலும் கேது 8 ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் கெடும் . இழப்புகள் விபத்துகள் ஏற்படும் . பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் . ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியாதிபதி பலம் பெற்றிந்தால் வெளிநாட்டு பணம் கிடைக்கும் . 

வாசுகி சர்ப்ப தோஷம் :

ராகு 3 ம் வீட்டிலும் கேது 9 ம் வீட்டிலும் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும் . தொழிலில் பிரச்சனை ஏற்படும் . காது மற்றும் இளைய சகோதரத்தினால் பிரச்சனை உண்டாகும் . 

சங்கல்ப சர்ப்ப தோஷம் :

ராகு 4ல் கேது 10 ல் இருந்தால் ஜாதகரின் வேலை தொழில் கெடும் . தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவைப்படும் . 

பத்ம சர்ப்ப தோஷம் :

ராகு 5 ம் வீடு கேது 11 ம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சனை ஏற்படும் . இதனுடன் சந்திரன் கெட்டால் ஆவி தொல்லை ஏற்படும் . மேலும் நண்பர்களால் ஏமாற்றமும் ஏற்படும் . நோய் உண்டானால் குணமாக தாமதம் ஏற்படும் . 

மகா பத்ம சர்ப்ப தோஷம் :

ராகு 6ல் கேது 12 ல் இருந்தால் நோயினால் தொல்லை உண்டாகும் . எதிர்காலம் இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும் . 6 ம் அதிபதியை பொறுத்து நோய் குணமாகுதலும் எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும் . 


தக்க்ஷக சர்ப்ப தோஷம்: 

கேது லக்கினத்தில் இருந்து ராகு 7 ல் இருந்தால் முன் யோசனையும் யூகம் செய்யும் ஆற்றலும் உடையவர் . தன் செல்வத்தை மது மாது சூதில் இழப்பார் . திருமண வாழ்க்கையில் தொல்லை உண்டாகும் . 

கார்கோடக சர்ப்ப தோஷம் :
 
ராகு 8 ல் கேது கேது 2 ல் இருந்தால் கார்கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும் . தந்தையின் சொத்து கிடைக்காது . முன் கோபியாக இருப்பார் . எதிரிகள் அதிகமாக உருவாவார்கள் . 

விஷ்தார சர்ப்ப தோஷம் :

ராகு 11ல் கேது 5 ல் இருந்தால்  குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும் . அடிக்கடி பயணம் செய்வர் . வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும் .

சேஷ நாக சர்ப்ப தோஷம் :

ராகு 12 ல் கேது 6 ல் இருந்தால் உடல் நலத்தில் பிரச்சனை ஏற்படும் . வழக்குகளால் சிக்கல் உண்டாகும் . எதிரிகளால் தொல்லை உண்டாகும் . 

ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் விலக அந்தணர்க்கு உணவளித்தல் ராகு காயத்திரி மந்திரம் ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுதல் மிகுந்த மேன்மையை தரும் . 

நாக த்வஜாய வித் மஹே 
பத்ம வஜாய வித் மஹே 
தந்நோ ராகு ப்ரசோதயாத் 

என்ற ராகு காயத்திரி மந்திரத்தை பாராயணம் செய்யவும் . ராகுவுக்கு உரிய கோமேதகத்தை அணியவும் . 

அச்வத் வஜாய வித் மஹே 
சூல ஹஸ்தாய தீமஹி 
தந்நோ கேது ப்ரசோதயாத் 

என்னும் கேது காயத்திரி மந்திரத்தை பாராயணம் செய்யவும் . கேதுவுக்கு உரிய வைடூரியம் அணிவது சிறப்பு . கேதுவுக்கு விநாயகர் வழிபாடு சிறந்தது .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment