Monday, January 11, 2021

ஜனவரி 11 - 2021 - திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                பெரியாண்டவர்சாமி தாயே பூமாதேவி 


                                             இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி -  11 - 1 - 2020 (சந்திரனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 8 (சந்திரனின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 21 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - திங்கள்  - சந்திரனின் ஆதிக்க கிழமை  

அஷ்ட லக்ஷ்மியின் ரூபங்களில் வீர லக்ஷ்மியின் கடாட்சம் கொண்டது .பிரபஞ்சத்தின் சித்திரமாகவும் மகரிஷிகளின் மகுடமாகவும் இந்த எண் விளங்குகிறது என எகிப்திய சித்திரங்கள் விளக்குகிறது . "ஸர்வ வசீகரம் " "அளவு கடந்த ஆனந்தம் " என்று மந்திர நூல்களில் இந்த 21 எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . சந்திரன் என்ற 2 ம் எண்ணும் - சூரியன் என்ற 1 ம் எண்ணும்-சேர்ந்து குரு பகவானின் 3 ம் எண்ணை தரும் இந்த 21 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் லஷ்மி கடாட்சம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்.   


பெரிய அறிவாளி என பெயர் கிட்டும். பொருளும் - கௌரவமும் பெருகி வரும் .பந்துக்களின் ஆதரவும் - தனம் - தானியம் - மாடு  - மனை - இவை போன்ற சகல் சம்பத்துக்களும் கிடைக்கும் . 

"அமாவாசை யோகம் " பெற்ற எண் என்பதால் புகழ் - ஆனந்தம் - அதிர்ஷ்டம் - போன்றவை இந்த எண்ணிற்கு கட்டாயம் உண்டு. சாதாரண மனிதர்களும் உயர்வான நிலையை பெறுதல் - கூட்டு வியாபார வெற்றி போன்றவைகளை தரும். தனது சந்தோஷத்திலும் - லாபத்திலுமே கவனம் செலுத்தி - ஊக்கத்துடன் உயர்வான நிலையை பெறுவார்கள். முன் வாழ்வில் சோதனைகள் இருந்தாலும் -பின் வாழ்வில் மிகுந்த வெற்றியும் சந்தோஷமும் - நிரந்தரமான பதவிகளும் உண்டு. 

செல்வம் -செல்வாக்கு - குடும்ப வாழ்க்கை - புத்திர பாக்கியம் அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு. 


இந்த 21 எண்ணில் 2என்ற சந்திரன் முன்னே வரவதும் பின் 1 என்ற சூரியன் அடுத்து வருவதால் முன் வாழ்வு தேய்பிறை - வளர்பிறை பிறை போல் இருந்தாலும் வியாபார நிறுவனங்கள் ஆரம்பத்தில் லாப நஷ்டங்களை ஆரம்பத்தில் பிரதி பலித்தாலும் வலிமையான செங்கோலை அடுத்து நிற்கும் 1 ம் வழங்கி விடுகிறது . 

பிறந்த தேதி 6- 15 - 24 - க  வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 6 க வருபவர்களும் இந்த 21 எண்ணில் பெயர்  வைத்து கொண்டாலும் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - இந்த 21 ம் எண்ணில் இருந்தாலும் கெடுதலான தீமையான பலன்கள் ஏற்படும். 

பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் இந்த 21 ம் எண்ணில் பெயரை  அமைத்து கொண்டால் அனைத்து வகையிலும் அதிஷ்டகரமான வாழ்க்கை அமையும். 

                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 21  ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1 


கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2


நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் .  

பரிகாரம் : 3


தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  


இன்று ஜனவரி 11 ல் பிறந்த உலக பிரபலம் : 


ராகுல் டிராவிட் - முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் - பிறப்பு - 11 - 1 - 1971 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment