இவருக்கு ரிஷபம் ஆகியவை சொந்த வீடு . மீனம் உச்ச வீடாகும் . ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் . மேலும் அவர்கள் தங்கள் வீட்டின் சமையல் அறையை தென்கிழக்கு வீட்டில் அமைத்து கொண்டால் அந்த வீட்டினரின் மனைவி வாழ்வில் பலவிதமான சந்தோஷங்களை அடைவார் . தாய் வழியிலும் மிகப்பெரிய யோகம் உண்டு .
ஜாதகத்தில் சுக்ரன் நீச்சம் பெற்று அல்லது 6 8 12 ல் மறைந்திருந்தால் கை கால்களில் சூடான சமையல் பாத்திரங்கள் பட வாய்ப்புள்ளது . அவர்களின் வீடுகளில் தென்கிழக்கு மூலை தவிர வேறு இடத்தில் சமையல் அறை அமைத்திருக்கும் . இதற்க்கு பரிகாரம் குமபகோணம் கஞ்சனூர் சுக்ரன் ஸ்தலத்திற்கு சென்று வருவது நல்லது . திருச்சி ஸ்ரீரங்கனை வழிபட்டால் எவ்வித பிரச்சனையும் அகலும் .
சமையல் அறை ஒரு சிலர் வீட்டில் கன்னி ஈசான மூலையில் போட்டுவிட்டு அந்த அறைக்கு அக்கினி மூலையில அடுப்பு வைத்துவிட்டு சரி என்று நினைக்கின்றனர் . இது முற்றிலும் தவறானதாகும் .
அடுப்பு மேடையின் உயரம் இல்லத்தரசியின் உயரத்தை பொறுத்தே அமையவேண்டும் . ஆனால் ஒரு சிலருக்கு அதிக உயரமாக அமைவதற்கு காரணம் ஜாதகத்தில் சுக்ரன் மறைவு பெற்றிருப்பது தான் மேலும் கிழக்கு வடக்கு நோக்கி சமையல் செய்வது நல்லது .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment