Monday, April 2, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 46 ல் இன்று 2- 4 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

தாயே பூமாதேவி
இன்று 2- 4- 2018 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 46. இதனால் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :

ராகுவின் ஆதிக்க எண்ணும் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ஷ்டகரமான 46 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . கிரீடம் அணிந்த தலை என்று இந்த எண் பற்றி பழைய நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது . கிரீட மகிமையையும் நெற்றி வர்ணனையும் ஒளி நிறைந்த பூரண சந்திரனின் தன்மையையும் அமிருதத்தையும் இவ்வெண் ஒருங்கே குறிப்பதால் இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள் .


புத்திர பிராப்தி என்ன சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்யலஹரி நூல் கூறுவதால் புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் இந்த எண்ணை பயன்படுத்தினால் புத்திர பாக்கியம் பெறலாம் . சந்திர பகவானின் அருளும் இந்த எண்ணுக்கு இருப்பதால் புதுப்புது கற்பனை வளமும் மேலான சிந்தனைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெற்றிக்கோப்பைகளும் அரச சன்மானமும் கிடைத்துவிடும் .

சொந்தம் பந்தம் நட்பு இவற்றினால் ஆதாயமும் அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனைகளை புரியவைக்கும் . அபூர்வ செயல்களால் சாதனைகள் புரிய வைக்கும் இந்த 46 ம் எண் . கன்னி ராசியில் சூரியனின் பிரவேசம் என்பதால் நிபுணத்துவமான தன்மைகள் உண்டாகி இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டாலும் சிறப்பை தரும் . 


4 ம் எண்ணை குறிக்கக்கூடிய ராகுவின் ஆதிக்கமும் 6 ம் எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரனின் ஆதிக்கமும் சேர்ந்து 46 என்று வருவதால் ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாளும் யோகமும் கூடிக்கொண்டே போகும் . 

பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்கள் இந்த 46 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும் . மற்றவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானதே . முக்கியமாக குழந்தையின் ஜாதகத்தை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் வளமானதாக அமையும்.

                                             அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 31 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்         
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு . 
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை 

குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய 46 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும்  காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயில் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

 

0 comments:

Post a Comment