Sunday, April 15, 2018

உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு ஜாதக அமைப்பும் ஒரு காரணமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                      ஓம் சிவ சக்தி 
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தை வைத்து அந்த ஜாதக அமைப்பு எத்தகைய சிறப்புகளை கொடுக்கும் ஜாதக அமைப்பு என்றும் - உலக புகழ் பெறப்போகும் ஜாதக அமைப்பா?  என்பதையும் கணிக்கலாம் . அதே போல் உலக அழகி பட்டத்தை வெல்லும் ஒரு  சில ஜாதக அமைப்புகளையும் அந்த ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகளை கொண்டும்  அறிந்து கொள்ளலாம். ஒரு பெண் பிறக்கும் காலகட்டம் சிறப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் அழகு, யவனம், இளமை இதற்கெல்லாம் அதிபதிகளாக விளங்குவது சந்திரன், சுக்கிரன். இதில் சந்திரன் வசியத்தை கொடுக்கும். கண்கள் காந்தத்தைப் போல் பார்ப்பவரை இழுக்கும். இதேபோல் சுக்கிரனும் பல அழகுகளைக் கொடுக்க வல்லவர்.


சுக்கிரனின் ஆதிக்கத்தில் அல்லது சுக்கிரன் ஓரையில் அல்லது சுக்கிரன் லக்னத்தில் இருக்கும் போது அல்லது லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கும் போது அல்லது சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது அல்லது லக்னத்தை சுக்கிரன் பார்க்கும் போது பிறந்த பிள்ளைகள் எல்லாம் அளவெடுத்தாற் போல் அங்க அவையங்களை பெறலாம். நீளமான விரல்கள், உடலுக்கு ஏற்ற காதுமடல், கவர்ச்சிகரமான கண்கள் அமையப் பெறுவர்.

சாதுர்யமான புத்திக் கூர்மைக்கும் உரிய கிரகம் சந்திரன். உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டாலும், அதில் கேள்வி-பதில் சுற்றில் சிறப்பாக பதிலளித்தால்தான் அழகிப் பட்டத்தை வெல்ல முடியும். அங்க அழகு மட்டும் போதாது அறிவுப்பூர்வமான அணுகுமுறையும் தேவை என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கேள்வி-பதில் சுற்றில் வெல்ல சிறப்பாக அதேசமயம் விரைவாக பதிலளிக்க வேண்டும்.

 


கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலைத் தர உதவுவது, நவகிரகங்களில் வேகமாக நகரும் சந்திரன். அந்த பதில் சரியான முறையில் வெளிப்படுவதற்கு உதவுவது புதன். உலக அழகியாக வேண்டுமென்றால் சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் பங்களிப்பு தேவை.

குரு லக்னத்தை பார்த்தால் கோபப்பட்டாலும் அந்த ஜாதகர் அழகாகவே தெரிவார். கோபத்தில் சீற்றம் இருக்காது. இப்படி ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு பலனைத் தருகிறது. அதேபோல் பிறக்கக் கூடிய ஓரை சிறப்பாக இருக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment