Sunday, October 3, 2021

மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் சம நோக்கு நாள் என தினசரி காலண்டரில் இருக்கிறதே அப்படி என்றால் என்ன?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் -ஆர். இராவணன் BSC

                             


ஒவ்வொரு  நட்சத்திரங்களும் ஒவ்வொரு தன்மை உடையது. இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும் மும்மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்களை மேல்நோக்கு நாள் என்பார்கள். இந்நட்சத்திரங்களை ஊர்த்துவமுத நட்சத்திரம் என்பர். 

இந்த மேல்நோக்கு நாளில் மேலே எழும்பக்கூடிய வீடு கட்டுதல், செடி, கொடி, மரம், பயிர்கள், விருட்சங்கள் பயிரிடுதல், பந்தல், மதில் எழுப்புதல் போன்ற காரியங்களைச் செய்வார்கள். பட்டாபிஷேகம், உத்தியோகம், ராஜதரிசனம், வியாபாரம், கிரயம், விக்கிரயம், ஆபரணம், மெத்தை போன்றவற்றுக்கும் மேல்நோக்கு நாள் உகந்ததாகக் கருதப்படுகிறது.  

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் வரும் நாட்களை கீழ்நோக்கு நாள் என்பார்கள். இந்நாளில் கீழ்நோக்கி செல்லக்கூடிய குளம், கிணறு ஆகியவை உண்டாக்கலாம்; புதையல், களஞ்சியம் ஆகிய விஷயங்களில் இறங்கலாம்; 

கிழங்கு வகை பயிர்களை பயிரிடலாம். கணக்கு அப்யாசிக்கலாம். கீழ்நோக்கு நாளில் இடம்பெறும் நட்சத்திரங்களை அதோமுக நட்சத்திரம் என்பர். 

அசுவினி, மிருகசிரீடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களை சமநோக்கு நாள் என்பார்கள். 

இந்நாட்களில் யானை, குதிரை, மாடு போன்ற கால்நடைகள் வாங்குதல், மேய்த்தல், உழவு, வண்டி வாங்குதல், நிலம் வாங்கி பயிரிடுதல், யாத்திரை போன்றவற்றைச் செய்யலாம். இந்நாளில் இடம்பெறும் நட்சத்திரங்களை திரியக்முக் நட்சத்திரம் என்பர்.

ஆகவே, நாம் ஒரு காரியம் தொடங்கும் முன்னர் இவற்றை அறிந்து செயல்பட்டால், காலம் நமக்கு அனுகூலமாக இருக்கும் என்பது நமது முன்னோர்கள் கண்ட அனுபவ உண்மை.   



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:

91 + 8122733328



0 comments:

Post a Comment