Monday, March 22, 2021

இன்று மார்ச் 22 - 2021 - திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி - அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC ?

                                                                    ஓம் சிவ சக்தி


                                                      இன்று பிறந்தவர்களின்  :

பிறந்த தேதி - 22 - 5 - 2021  (ராகுவின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 12 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 13 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - திங்கள்  

இன்றைய தேதியில் பிறந்தவர்களின்  பிறந்த தேதியினுடைய ஹீப்ரு எண்  13. ராகுவின் ஆதிக்கத்தை கொண்ட இந்த எண் ரிஷப ராசியில் வரக்கூடிய என்னாகும் . ஆங்கிலேயர்கள் இந்த எண்ணை  கண்டு ஒதுக்கி விடுகிறார்கள் . பல விதமான சோதனைகளை தந்து இந்த எண் வெற்றியை கொடுக்கும் . எகிப்திய ஓவியங்களில் மரண தேவனை குறிப்பதாக இந்த எண்னை பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஸ்திரி லாபம் - ஜீவ எண் என்றெல்லாம் இந்த எண் பற்றி மந்திர நூல்களில் உள்ளது .

நேர்மைக்கு புறம்பாக செயல்படும்பொழுது வீழ்ச்சி உறுதி என்பதை இந்த எண் பறை சாற்றுகிறது . புதிய ஜெனனம் என்பதை இந்த எண் எடுத்து காட்டுகிறது .


இந்த 13 - ம் எண் நல்லவர்களுக்கு தேசத்தையும் ஆட்சியையும் வழங்குகிறது சிவராஜ யோகமும்  சதுர வடிவமும் கொண்ட இந்த எண் தனி மனிதனின் பெயரில் வரும்பொழுது சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கி விடுகிறது . ஆனால் நிறுவனங்கள் - கம்பெனிகள் - கட்சி - மொழி - இப்படியாக பொதுவான பெயராக அமையும்பொழுது அதிர்ஷ்ட விருத்தியை வலுவாக வழங்கும் . 

தனி மனித பெயரின் மொத்த கூட்டு எண்ணாக இந்த 13 ம் எண் வரும்பொழுது மனைவி - மக்கள் - சகோதரர் இவர்களிடம் சண்டைகளும் இருப்பிடம் விட்டு வேறு இடத்தில் வசிப்பதும் கூட ஏற்படலாம் .  RAMAN இந்த பெயரின் எண்ணிக்கை 13 ம எண்ணிக்கையில் அமைவதை காணலாம் .

TVS - AMWAY - BPL - HMT - TAMIL - இவை பொதுவான பெயர்கள் . இவைகளின் மொத்த கூட்டு எண்கள் 13 க வருகிறது .

நிறுவனங்களின் உயிர் நாடியான ஒருவரை தாழ்த்தி பிறகு உச்ச நிலைக்கே கொண்டு செல்கிறது . இந்த 13 ம எண்ணை பெயரில் உடையவர்களுக்கு விஞ்ஞான ஆராய்ச்சி - நீதித்துறை - சீருடை அணியும் துறைகளில் புகழ் உண்டாகும் .

ஏசு கிறிஸ்து 13 பேருடன் சேர்ந்து உணவு உண்ணும்பொழுது காட்டி கொடுக்கபட்டார் என்றும் . வெளிநாடுகளில் 13 ம் எண்ணை கொண்ட அறைகளே இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

1 என்ற சூரியனும் 3 என்ற குருவும் ஒன்று இணைந்து ராகு ஆதிக்க சக்தியை இந்த எண் வெளிபடுத்துவதால் சுக்கிரன் மனையில் 13 என்ற ராகு உச்சம் என்பதை உணர்த்துவதால் பெண்களால் பிரச்சனைகளையும் - சிரமங்களையும் இந்த எண் உண்டாக்கும் . தான் விரும்பா விட்டாலும் துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டே இருக்கும். 

தவறு என்று தெரிந்தாலும் மன சாட்சிக்கு விரோதமான முறையில் அடுத்தவர்களை தண்டிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த 13 ம்  எண்ணுக்கு ஏற்படுவதால் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்தாலும் மனம் முழுவதும் சஞ்சலமும் சங்கடமுமாகவே இருக்கும் . இவர்களுக்கு 1 - 10 - 19 - 28 - தேதிகளும் கூட்டு எண் 1 க வரும் தினங்களும் மிக்க அதிர்ஷ்டமான எண்களாகும் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் இவைகளுக்கு சாதகமான வகையில் அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் .

                                           அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி

நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று பிறந்த பிறந்தவர்களின்  ஜாதகத்தில் 13  ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 

மார்ச் 22 ல் இன்று பிறந்த உலக பிரபலங்கள் : 

இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் 

ரீஸ் விதர்ஸ்பூன் - அமெரிக்க நடிகை திரைப்பட தயாரிப்பாளர் (பிறப்பு 22 - 3 - 1976)

தி. வே. சுந்தரம் அய்யங்கார் - TVS நிறுவனத்தின் நிறுவனர் (பிறப்பு - 22 - 3 - 1887)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.   

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி வழியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment