Friday, February 5, 2021

மரணம் உங்களை நெருங்காமல் இருக்க ? பெயரில் சூட்சுமம் இருக்கிறது ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

                                                               ஓம் சிவசக்தி 


ஒரு குழந்தை  இந்த பூமியில்  எந்த தேதியில் வேண்டுமானாலும் ஜெனனமாகலாம் .அந்த குழந்தையின் பிறந்த தேதி - பிறந்த கூட்டு எண் - இவைகள் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைகிறதோ அந்த கிரகத்தின் குணாதிசயங்கள் அந்த குழந்தைக்கு ஓரளவுக்கு அமையும் என்றாலும் - அந்த குழந்தை பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக எந்த எண்ணாக அமைகிறதோ அந்த கிரகத்தின் குணாதிசயம் முழுக்க முழுக்க அந்த குழந்தைக்கு உண்டாகும் . 

அதேபோல் ஒரு குழந்தைக்கு நியுமராலஜிபடி பெயரின் கூட்டு எண்கள் ராசியான எண்களில் அமைந்தால் மட்டும் போதாது . அந்த பெயரில் ஆபத்து விளைவிக்காத எழுத்துக்கள் அமைந்து இருக்க வேண்டும் . எந்த ஒரு ஜெனனமான குழந்தையாக  இருந்தாலும் சரி - அல்லது பெரியவர்களின் பெயராக இருந்தாலும் சரி - அந்த பெயரில் D என்ற எழுத்து வராமல் பார்த்து  கொள்ள வேண்டும் . 


ஆங்கில எழுக்களின் 26 எழுத்துகளில் இந்த D என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களில் தான் - அபசகுனமான சொற்களும் - ஆபத்தை விளைவிக்க கூடிய சொற்களும் - நன்மைக்கு மாறான தீமையான பொருளை தரக்கூடிய சொற்களும் அதிகமாக அடங்கி உள்ளன .இந்த சொற்களை உள்ளடக்கிய பொருளுக்கு தகுந்தாற்போல்தான் அவர்களுடைய வாழ்க்கையும் ஏற்ற - இறக்கமாக அமைகிறது . 

DANGER (ஆபத்து )
DEATH (இறப்பு )
DAMAGE (நஷ்டம் )
DOWN (கீழே )
DIVORCE (விவாகரத்து )
DIFFICULTY (கடினம் )
DARK (இருட்டு )
DISSOLVE (கலைத்தல் )
DEFEAT (தோல்வி )

போன்ற அபசகுனமான - ஆபத்தை விளைவிக்ககூடிய - நன்மைக்கு மாறான பொருளை தரும் சொற்கள் இந்த D என்ற எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்டு பொருள் தருகின்றன . இந்த D என்ற எழுத்து DIE என்ற உச்சரிப்பை பெற்று சாவு - இறப்பு என்ற பொருளை தருவதால் இளமையில் மரணத்தை தரும் ஆபத்தான செயலும் இந்த D என்ற எழுத்துக்கு உண்டு . மேலும் நியுமராலஜியில் ஆபத்தை - மரணத்தை உண்டாக்கும் - எண்களும் உண்டு . அந்த மாதிரியான எண்கள் பெயரின் கூட்டு எண்களாக வந்து பெயரில் D என்ற எழுத்து வருமானால் இளமையில் மரணம் ஏற்படும் .


இந்த D என்ற எழுத்தால் பாதிக்கப்பட்ட நம் நாட்டு தலைவர்களை நாம் காண்போம் .

MAHATHMA GANDHI (மகாத்மா காந்தி ). நான் 120 வருடம் வாழ்வேன் என்று சொன்னவர் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முடியாமல் சுட்டு கொல்லபட்டார் . இவரின் பெயரில் D என்ற எழுத்து இருப்பதை கவனிக்கவும் .

SANJAY GANDHI(சஞ்சய் காந்தி ) இவர் முன்னால் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் மகன் ஆவார் . இவரும் இளம் வயதில் 23 - 6 - 1980 அன்று விமான விபத்தில் இறந்தார் . இவரின் பெயரிலும் D என்ற எழுத்து இருப்பதை உற்று நோக்கவும் .

முன்னாள் பிரதமர் RAJIV GANDHI (ராஜீவ் காந்தி ) . வெடி குண்டு வைத்து கொல்லப்பட்டார் .இந்த பெயரிலும் D என்ற எழுத்து இருப்பதாய் கவனிக்கவும் .
முன்னாள் பாரத பிரதமர் INDIRA GANDHI (இந்திரா காந்தி ) . தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லபட்டார் . இந்த பெயரில் D என்ற எழுத்து வந்து அவர்  உயிருக்கு ஆபத்தாக அமைந்து விட்டது .

இந்தியாவின் 3 வது பாரத பிரதமர் INDIRA GANDHI (இந்திராகாந்தி ) தன்னுடைய பாதுகாவலர்களாலேயே 31 - 10- 1984 அன்று துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டார் . இவரது பெயரிலும் D என்ற பெயர் எழுத்து அமைந்து அவரது உயிருக்கு எமனாக அமைந்து விட்டது . 

இங்கிலாந்து இளவரசி DAYANA (டயானா ) கார் விபத்தில் இறந்தார் . இவரது பெயரிலும் முதல் எழுத்தாக D - அமைந்திருப்பதை கவனிக்கவும் . 

JOHN . F . KENNADI (ஜான் F. கென்னடி  ) அமெரிக்காவின் 35 வது குடியரசு தலைவராக இருந்த இவர் 22 - 11 - 1963 - ல் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டார் . இவரது பெயரில் D என்ற எழுத்து இவரது உயிருக்கு உலை வைத்து விட்டது .

இந்த D என்ற எழுத்தினால் விவாகரத்து பெற்றவர்களை காண்போம் . 

DAYANA - டயானா - இங்கிலாந்து இளவரசி )

RADIKA - ராதிகா - தமிழ் சினிமா நடிகை - விவாகரத்து பெற்றவர் )

PRADAP POTTHAN - பிரதாப் போத்தன் - தமிழ் சினிமா இயக்குனர்-  விவாகரத்து பெற்றவர் . 

SARIDHA - சரிதா - தமிழ் சினிமா நடிகை- விவாகரத்து பெற்றவர் .



தமிழ் நடிகை சௌந்தர்யா இவரை மறந்திருக்க முடியாது . நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் . SOUNDARYA (சௌந்தர்யா -)யாரும் எதிர் பார்க்காத வண்ணம்  3 - 10 - 2004 - அன்று இவர் விமான விபத்தில் இறந்தார் . இந்த பெயரில் D எழுத்து இருப்பதை கவனிக்கவும் . 

இந்த D என்ற எழுத்து எந்த ஒரு இடத்தின் பெயரில் வந்தாலும் சரி அந்த இடமோ அல்லது அந்த இடத்துக்கு உட்பட்ட பகுதிக்கோ சோகமான சம்பவங்கள் அல்லது அழிவு நேரலாம் . உதாரணத்துக்கு THANUSHKODI (தனுஷ்கோடி ). தமிழ்நாட்டில்  இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே உள்ளது.

1964  ஆம் ஆண்டு டிசம்பர் 23  இல் மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து  அடித்துச் செல்லப்பட்டதில் அதில் சென்று பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர்.. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

இப்படி நிறைய பெயர்களையும் - இடங்களையும் உதாரண பெயர்களாக சொன்னாலும் அனுபவ ரீதியாக நீங்களும் இந்த D என்ற எழுத்தை பெயரில் பெற்ற ஒரு ஆணையோ - பெண்ணையோ - அவர்களின் வாழ்வில் ஏற்படும் சோதனைகளையும் கஷ்டங்களையும் - இழப்புகளையும் - கண்கூடாக காணலாம் . 

மேலும் திருமணம் முடிக்கும் ஆணாக இருந்தாலும் சரி - பெண்ணாக இருந்தாலும் சரி இவர்களின் பெயரிலும் D என்ற எழுத்து வந்து இவருக்கு வாழ்க்கை துணையாக வருபவரின் பெயரிலும் இந்த D என்ற எழுத்து வருமானால் இவர்களின் திருமண வாழ்க்கை சோகமானதாகவும் - அமையும் என்பதை மறந்து விடவேண்டாம் .

ஆதலால் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்ட விரும்பினாலும் - அல்லது ஒரு ஆணுக்கோ - பெண்ணுக்கோ - பெயரில் - D என்ற எழுத்து வந்தாலும் அதை தவிர்த்து நன்மை தரக்கூடிய உச்சரிப்பை கொண்ட ஒலி அலைகளை உடைய அதிர்ஷ்டகரமான பெயரை தேர்வு செய்து அந்த பெயரின் மூலம் மற்றவர் பார்த்து பொறாமைபடும் - பிரமிப்பான - மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்து கொண்டு வளமான வாழ்க்கை வாழுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment