தாயே பூமாதேவி
திருமணம் செய்துகொள்ளும் ஆண் பெண் இருவரும் கடைசிவரை பிரியாமல் ஒன்று சேர்ந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் அவர்களின் பிறந்த பிறந்த தேதி ஒன்றுக்கொன்று நட்பான எண்களில் அமைந்திருக்கும் .இரண்டு மனங்களும் ஒத்துபோய் கடைசிவரை இணை பிரியாமல் இருந்து குடும்பம் நடத்துவது ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கையாகும் .
இப்படி கடைசிவரை சந்தோஷமாக இணைபிரியாமல் இருப்பதற்கு காரணம் கணவன் மனைவி இருவரின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்கள் ஒன்றுக்கொன்று ஒத்துபோகக்கூடிய - வசியப்படுத்த கூடிய தேதிகளில் இருவரும் பிறந்து இருப்பார்கள் . இப்படி இணைபிரியாமல் இருக்கும் கணவன் மனைவியின் பிறந்த தேதிகள் எவ்வாறு இருக்கும் என்பதை காண்போம் .
உதாரணத்துக்கு கணவனின் பிறந்த தேதி 1- 10 - 19 - 28 இந்த தேதியில் பிறந்திருந்தால் மனைவியின் பிறந்த தேதி 2 - `11 - 20 - என்று அமைந்திருக்கும் . கணவனின் பிறந்த தேதி - 3- 12 - 21 - 30 என்று அமைந்திருந்தால் மனைவியின் பிறந்த தேதி 9 - 18 - 27 - என்று அமைந்திருக்கும் . கணவனின் பிறந்த தேதி 5 14 - 23 என்று அமைந்திருந்தால் மனைவியின் பிறந்த தேதி 6 - 15 - 24 என்று அமைந்திருக்கும் . இந்த தேதிகளின் எண்கள் ஒன்றுக்கொன்று நன்மை தரக்கூடிய ஒன்றுக்கொன்று வசியப்படக்கூடிய எண்களாகும் .
காரணம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தம்பதிகளாக இணையும்பொழுது கடைசிவரை இணைபிரியாமல் இருப்பார்கள் .
திருமணம் முடிந்து ஒரு சில காலகட்டங்களில் கணவன் மனைவி இருவருக்கும் பிரிவினை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லும் நிகழ்வுகளும் உண்டு . உதாரணத்துக்கு மனைவியின் பிறந்த தேதி - 3 - 12 - 21- 30 என்று இருந்து கணவனின் பிறந்த தேதி 6- 15- 24 என்று அமைந்திருந்தால் கணவன் மனைவி இருவர்க்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் .
காரணம் 3 - 12 - 21- 30 இந்த தேதிகளில் எண்களை குறிக்கக்கூடிய தேவர்களின் தலைவரான குருபகவானும் - 6- 15- 24 இந்த தேதிகளின் எண்களை குறிக்கக்கூடிய அசுரர்களின் தலைவரான சுக்ரனும் ஒற்றுமையாக இருந்ததாக புராண சான்றுகள் கூட இல்லை . ஆதலால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையும்பொழுது பிரிவினையை காட்டும் .
மனைவியின் பிறந்த தேதி 2 - 11 - 20 - 29- என்று இருந்து கணவனின் பிறந்த தேதி 9 - 18 - 27 என்று அமைந்து விட்டால் என்றுமே திருமண வாழ்க்கையில் சிக்கல்தான் . சாந்த குணத்தை கொண்ட 2 - 11 - 20 - 29 தேதிகளில் பிறந்தவர் ஆக்ரோஷ குணத்தை கொண்ட 9 - 18 - 27 தேதிகளில் பிறந்தவர்களுடன் திருமண வாழ்க்கையில் இணையும்பொழுது திருமண வாழ்க்கை பிரகாசிக்காமல் போவது உண்டு . ஒரு வேளை பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்கள் சாதகமான - ஒன்றுக்கொன்று வசியப்படக்கூடிய எண்களில் அமைந்து விட்டால் இந்த இந்த கணவன் மனைவி பிரிவினை சம்பவங்களிலுருந்து தப்பிக்கலாம் .
வாழ்க்கை துணையில் இணைய இருக்கும் தம்பதியர் பிறந்த தேதியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பொருத்தமான பிறந்த தேதியில் பிறந்தவரை திருமணம் செய்துகொண்டு வெற்றிகரமான திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment