Friday, August 26, 2022

வியாபாரத்தில் நிறுவனங்கள் கடைகள் லாபத்தை அடைய ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

  



எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும் சரி – அல்லது வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி – அல்லது கடையாக இருந்தாலும் சரி – அந்த நிறுவனம் அல்லது அந்த கடையின் பெயர் எண் – பெயரின் பிரமிடு எண் – அதிர்ஷ்டகரமானதாக அமைய வேண்டும் . 

அதேபோல் அந்த நிறுவனம் எந்த பொருளை உற்பத்தி செய்கின்றதோ அல்லது அந்த கடையில் எந்த பொருள் விற்பனை செய்யபடுகின்றதோ – அந்த கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அந்த நிறுவனத்தின் பெயர் அல்லது கடையின் பெயர் அமையவேண்டும் . அப்படி அமையும் பட்சத்தில் வியாபார ரீதியாக பெரும் லாபத்தை எதிர்பார்க்கலாம் . 

உதாரணத்திற்கு ஹேர் ஆயில் என்ற உடனே நினைவுக்கு வருவது அஸ்வினி ஹேர் ஆயில் (ASWINI HAIR OIL). இந்த ASWINI என்ற பெயரின் மொத்த கூட்டு எண் 17 என்று வரும் . 

இந்த 1 ம் எண்ணையும் 7 ம் எண்ணையும் கூட்டினால் சனி பகவானின் ஆதிக்க எண்ணான  8 ம் எண் வரும் . நியுமாராலஜிப்படி இந்த எட்டாம் எண் ஒருவரின் பெயரில் வருவது அதிர்ஷ்டம் தர இயலாத எண்ணாக கருதப்படுகிறது .

அப்படி இருந்தும் இந்த ASWINI என்ற பெயர் கொண்ட HAIR OIL நிறுவனம் வியாபார ரீதியில் லாபத்தை நோக்கி வெற்றி நடை போட காரணம் இருக்கிறது 

.நவ கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளையும் – நம் உடம்பில் ஒவ்வொரு உடல் உறுப்பையும் ஆட்சி செய்கிறது . அதில் எட்டாம் எண்ணுக்குரிய சனி பகவான் நம் உடம்பில் தலை முடி – நம் உடலில் நரம்பு பகுதி – நிறத்தில் கருமை நிறம் – போன்றவற்றை ஆட்சி செய்கிறார் . 

ASWINI என்ற பெயரின் கூட்டு எண் சனி பகவானுக்கு உரிய எட்டாம் எண்ணாக வந்து சனி பகவான் ஆட்சி செய்ய கூடிய தலை முடியோடு தொடர்பெற்று அந்த தலை முடிக்கு இந்த ASWINI ஹேர் ஆயிலை உபயோகபடுத்துவதால் வியாபர ரீதியாக இந்த எட்டாம் எண் பெயர் சொல்லும் அளவுக்கு புகழையும் லாபத்தையும் சம்பாதித்து கொடுக்கிறது . 

இந்த நிறுவனம் லாபத்தை அடைவதற்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கிறது இந்த ASWINI என்ற பெயரில் WIN என்ற சொல் VIN என்ற உச்சரிப்பை பெற்று வெற்றி என்ற பொருளை தருவதால் ASWINI ஹேர் ஆயில் வெற்றி பாதையில் சென்று மக்கள் மனதில் இடம் பெற்று லாபத்தை சம்பாதிக்கிறது . 

அடுத்து ஒரு உதாரணத்தை உதாரணத்தை எடுத்து கொள்வோம் . நாம் அன்றாடம் முக சவரம் செய்வதற்கு பிளேடை பயன்படுத்துகிறோம் . கடையில் முக சவரம் செய்தவதற்கு எத்தனையோ பிளேடுகள் கிடைக்கின்றன . இதில்  SUPER MAX பிளேடின் தரத்தை அந்த பிளேடை முக சவரம் செய்வதற்கு பயன்படுத்துகிறவர்களுக்கு தெரியும் . 

அந்த அளவுக்கு ஷேவிங் செய்வதற்கு சிறப்பாக இருக்கும் . இந்த SUPER MAX என்ற பெயரை ஆராய்வோம் . இதன் மொத்த கூட்டு தொகை 36 = 9. என்று செவ்வாயின் ஆதிக்க எண் வரும். இந்த செவ்வாயை சகோதரகாரன் என்றும் அழைப்பார்கள் .  

இந்த செவ்வாய் நம் உடம்பில் ரத்தத்தையும் – கூர்மையான ஆயுதங்களையும் ஆட்சிசெய்கிறது. பிளேடு என்பது ஒரு கூர்மையான ஆயுதம் என்பதாலும் – அதன் பெயர் (SUPER MAX)= என்று செவ்வாயின் ஆதிக்க எண்ணாக  அமைந்திருப்பதாலும் இந்த இந்த SUPER MAX பிளேடு விற்பனையில் தனக்கு என்று  ஒரு தனி இடத்தை பிடித்து வியாபார ரீதியல் லாபத்தை சம்பாதிக்கிறது . 

இந்த பிளேடு நிறுவனம் லாபத்தை சம்பாதிப்பதற்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கிறது . இந்த SUPER MAX என்ற பெயரில் UP என்ற சொல் மேலே - உயரே - என்ற பொருளை தருவதால் வியாபார ரீதியில் லாபம் சம்பாதிப்பதில் இதன் மதிப்பு உயருகிறது . என்று காணலாம் . 

ஆதலால் ஒரு செல்போன் கடை வைத்தாலும் சரி - அல்லது அல்லது ஒரு அரிசி கடை வைத்தாலும் சரி - ஒரு கூல் ட்ரிங்க்ஸ் கடை வைத்தாலும் சரி - அல்லது ஒரு ஹோட்டல் வைத்தாலும் சரி - எந்த ஒரு வியாபாரம் ஆரம்பித்தாலும் சரி அந்த பொருளை ஆட்சி செய்கிற கிரகத்தின் ஆதிர்ஷ்டமான ஆதிக்க எண்ணில் அந்த நிறுவனத்தின் பெயரை அமைத்தால் லாபத்தை அடையலாம் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
 

0 comments:

Post a Comment