Saturday, February 19, 2022

வண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் -அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                           

பல லட்ச ரூபாய் பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்களை வாங்கி அந்த வாகனங்களினால்  லாபங்களை அடைந்தவர்களும் உண்டு.   நஷ்டங்களை அடைந்தவர்களும் உண்டு. 

வண்டி வாகனங்கள் வாங்கும்பொழுது அந்த வாகனங்கள் கடைசிவரை நமக்கு உபயோகமாய் இருந்து , அந்த வாகனங்களினால் நமக்கு நன்மை ஏற்படுவதற்கு வாகனம் வைத்திருக்கும் நபரின் பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்ணுக்கு ஏற்றாற்போல் அந்த வாகனத்தின் மொத்த கூட்டு எண் அமையவேண்டும்.  

அப்படி அந்த நபரின் பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்ணுக்கு அவருக்கு அமைந்திருக்கும் வாகனத்தின் கூட்டு எண் விரோதமாக அமைத்திருக்குமானால் அந்த வாகனத்தினால் அவருக்கு நஷ்டம் எண்டு சொல்ல கூடிய வாகன விபத்து  வாகனத்துக்கு அடக்கடி செலவு செய்தல் வாகனத்தை விற்கும் சூழ்நிலை என்று அந்த வாகனத்தினால் நன்மையை அனுபவிக்க முடியாத  சூழ் நிலைகள் போன்றவை ஏற்படலாம்.

மாத சம்பளத்துக்கு டிரைவர்களை வைத்து ஒட்டும்பொழுதும்  வாகனத்தின் உரிமையாளருக்கு  சரியான ஆள் கிடைக்காத சூழ்நிலையும்  ஏற்படலாம். 


சரி ஒருவரின் பிறந்த தேதிக்கு தகுந்தால்போலும் பிறந்த தேதியின் பிரமிடு எண்ணுக்கு தகுந்தார்போலும் வாகனத்துக்கு அமையும் அதிர்ஷ்ட எண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி பார்ப்போம்.

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு வண்டி வாகன யோகம் சிறப்பாக அமைய வேண்டுமானால் அவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் வீட்டுக்கு அதிபதியும் வண்டி வாகனக்காரன் என்று சொல்ல கூடிய சுகரனும் சிறப்பான இடத்தில அமைந்திருக்கும்பொழுது அவருக்கு வண்டி வாகன யோகம் சிறப்பான பலனை  தரும்.

ஜோதிட சாஸ்திரத்தில் வண்டி வாகனங்களை குறிக்கும் கிரகமாக சுக்ரன் திகழ்கிறார். நியூமராலஜிபடி வண்டி வாகனம் என்ற சொல்லை குறிக்க கூடிய ஆங்கில சொல்லான MOTOR(4 7 4 7 2 ) என்ற ஆங்கில சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை 24 = 6 என்றும்

CAR (3 1 2 ) என்ற ஆங்கில சொல்லின் மொத்த  கூட்டு எண்ணிக்கை 6 என்று சுகரனின் ஆதிக்க எண்ணில்  வருவது விந்தையான ஆச்சர்யமான விஷயமாகும். 

வண்டி வாகனங்களுக்கு ஏற்ற ராசியான எண் 6 எண் என்பது புலப்படுகிறது . அதேபோல் என்னுடைய ஜோதிட அனுபவத்தில் ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்ணும் வண்டி வாகனங்களுக்கு ஏற்ற எண்ணாக கருதுகிறேன். 


நில்லாமல் ஓடிகொண்டிருக்கும் ஒரு சாதனம் தான் வாகனங்கள்.ஓடு ஓடிகொண்டிரு ஓடுதல் போன்ற தமிழ் சொல்லின் ஆங்கில வார்த்தையான  RUN என்ற சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை (2 6 5 = 13 ) என்ற ராகுவின் ஆதிக்க எண்ணில்  வருவதால் தான் இந்த ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்  வண்டி வாகனங்களுக்கு ஏற்ற மற்றொரு எண்ணாகவும் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். 

வண்டி வாகனங்களுக்கு 6, 4 ம் எண் அதிர்ஷ்ட மானது என்று சொல்லி இருந்தாலும்   பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 3 க வருபவர்களுக்கு வாகனத்தின் எண் 6 அமைத்துவிட்டால் அந்த வாகனத்தினால் அவருக்கு பெருத்த சேதம் ஏற்படும் என்பதை நான் கூறிகொள்கிறேன். 

அதேபோல் 2 ம் எண்ணை பிறந்த தேதியில் கொண்டவர்களுக்கு வாகன எண் 9  க வருவதும்  5ம் கொண்டவர்களுக்கு 6 ம் எண்ணும் 7 ம்  கொண்டவர்களுக்கு 2 ம எண்ணும் 8 ம் எண் கொண்டவர்களுக்கு 1, 9 ம் எண்ணும் வாகன எண்ணாக அமைந்தால் தீமையான பலன்களை கொடுக்கும்.

உதாரணத்திற்கு ஒருவரின் வாகன எண் TN 31 AA 4056 என்று இருப்பதாக் கொண்டால்  அந்த வாகனத்தின் மொத்த கூட்டு எண்ணிக்கை 4 5 3 1 1 1 4 0 5 6 = 303+0= 3 என்று வரும். 


இந்த எண்ணை வாகனத்தின் கூட்டு எண்ணாக கொண்ட ஒரு நபருக்கு அவருக்கு அமைந்திருக்கும் வாகனத்தின் கூட்டு எண் 
6க அமையுமானால் அவருக்கு அந்த வாகனத்தால் எப்பொழுதும் பிரச்சனைதான் . நியூமராலஜிபடி மேலே சொன்ன வாகனத்தின் கூட்டு எண்   = 3 என்று சொல்லி இருக்கிறேன். 

ஆனால் பிரமிடு நியூமராலஜி படிஅந்த வாகனத்தின் கூட்டு எண் 76 = 13 = 4  . ஆக அந்த வாகனத்தின் நியூமரலாஜி எண் 3.  பிரமிடு நியூராலாஜி எண் 4 இப்படியாக வரும்பொழுது அந்த வாகனத்தை வைத்திருப்பவரின் பிறந்த தேதியின் எண்கள் 1, 9 க  இருந்தால் மட்டுமே அந்த வாகனத்தினால் அவருக்கு நன்மை உண்டு.

அதேபோல் ஒவ்வொருவருக்கும் அமையும்  வாகனத்தின் கூட்டு எண் அவரின் பிறந்த தேதிக்கு சாதகமானதாக இருந்தால் மட்டுமே அந்த வாகனத்தினால் அவருக்கு நன்மை உண்டு என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன் . மேலும் நியூமரலாஜி படி ஒருவருக்கு அமைய  இருக்கும் வாகனத்தின் மொத்த கூட்டு எண்  எந்த எண்ணில் அமைய  வேண்டும் என்பது பற்றி மிக எளிதாக புரிந்து கொள்ளலாம் 

என்றாலும் பிரமிடு நியூமராலாஜிபடி ஒருவருக்கு அமையும் அதிர்ஷ்ட எண் பற்றி அறிந்து கொள்வது  உங்களுக்கு விவரிக்க முடியாத சற்று கடினமான விஷயமாகும் .  மேலும் எந்த தேதியில்  பிறந்து இருந்தாலும் வாகனத்தின் கூட்டு எண்  18, 29  இந்த எண்களில் வந்தால் அந்த வாகனத்தால் அவரின் உயிருக்கோ அல்லது அவர்  குடும்பத்தினரின் உயிருக்கோ பங்கம் ஏற்படலாம் என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் கண்டுள்ளதால் வண்டி வாகனத்துக்கு இந்த எண்ணை  அறவே தவிர்க்கவும்.     



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
  

0 comments:

Post a Comment