Saturday, September 8, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 32 ல் இன்று 8 - 9 - 2018 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிட நிபுணர் ? ஆர் . ராவணண் BSC

born baby with mother க்கான பட முடிவு


                                                          
ஹீப்ரு பிரமிடு எண் 32 ல் இன்று 8 - 9 - 2018 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள்
மூன்று என்ற குருவும் இரண்டு என்ற சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகத்தை இந்த 32 ம்  எண் கடக ராசியில் வந்து புதனின் ஆதிக்கத்தை வெளிபடுத்துவதால் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும் . " 6 செங்கோல்களும் அரசனும் குதிரையும் " போன்ற எகிப்திய படங்கள் வீரதைய்ம் சக்தியையும் குறிக்கும் வகையில் இந்த 32 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

"ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு   கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த எண்ணினர் விளங்குவர் . புத்திசாலி தனம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பேசும் திறனும் - சினிமா - இசை -  அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் . 

தொடர்புடைய படம்

அடுத்தவர் ஆலோசனையை கேட்காமல் தனது மனதில் உதிக்கிற படி நடந்து வந்தால் வெற்றி மேல் வெற்றி  உண்டாகியபடியே இருக்கும் . அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும். தொழில் - உத்தியோகம் - நீண்ட ஆயுளை தரும் . கூட்டு தொழில் வாகன சுகமும் இந்த எண்ணிற்க்கு உண்டு. 

"விக்கிரமாதித்தனின் எண் 32 என வருவதால் காடாறு மாதம் நாடாறு  மாதம் எனபது போல் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தோல்வியோ தாழ்வோ இந்த 32 எண்ணிற்கு இல்லை என்பதால் இந்த 32 எண்ணில் பெயரை அமைத்து பெயரின் ஹீப்ரு எண் 41 - 23 - 95 - போன்ற எண்களில் வருமாறு பெயரை அமைத்து கொண்டால் அனைத்து வித தரித்திரியங்களும் விலகி வெற்றி அனைத்து செயல்களிலும் வெற்றி ஏற்பட்டு லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்.  வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயரை அமைத்து ஹீப்ரு எண்ணையும் வேறு ஒரு அதிர்ஷ்ட எண்ணில் அமைத்து கொண்டால் மிக்க அதிர்ஷ்டம் உண்டாகும்.

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன்

8  - - 2018 ல் இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 32 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment