Sunday, July 17, 2016

செல்போன் வியாபாரம் - எலெக்ட்ரானிக்ஸ் வியாபாரம் அதிர்ஷ்ட பெயரியல் முறைப்படி யாருக்கு லாபம் தரும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் – ராவணன் – BSC


தாயே பூமாதேவி




இன்று உலகம் முழுவதும் செல்போன் உபயோகபடுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதற்க்கு தகுந்தாற்போல் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு தனது செல்போன் உற்பத்தியை அதிகரித்து விற்பனையில் லாபத்தை சம்பாதிக்கிறார்கள் . இந்த செல்போன் வியாபாரம் யாருக்கு லாபம் தரும் என்பதை பார்ப்போம் .

நவ கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு உறுப்பையும் – ஒவ்வொரு வகையான சுவையையும் – ஒவ்வொரு திசையையும் – ஒவ்வொரு பொருளையும் ஆட்சி செய்கிறது . இதில் செல்போன் என்னும்பொழுது எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட பொருளோடு சேர்வதால் இந்த தொழில் சம்பந்தப்பட்ட கிரகமாக கேது கிரகம் ஆதிக்கம் வகிக்க கூடிய 7 எண்ணும் ராகு கிரகம் ஆதிக்கம் வகிக்க கூடிய 4 ம் எண்ணும் இந்த செல்போன் பொருளோடு சம்பந்தபடுகிறது . 


அதேபோல் செல்போன் நிறுவனத்தின் பெயரின் நியுமராலஜி எண் கேதுவின் ஆதிக்கத்தில் அமைந்து அந்த நிறுவனத்தின் பெயரின் பிரமிடு எண் – நியுமராலஜி எண்ணிற்கு கேந்திர ஸ்தானம் என்றும் விஷ்ணு ஸ்தானம் என்று சொல்ல கூடிய ஒன்று – நான்கு – ஏழு – பத்தாம் – இடங்களிலும் – லட்சுமி ஸ்தானம் என்று சொல்ல கூடிய – ஒன்று – ஐந்து – ஒன்பது – போன்ற ஸ்தானங்களில் அமையும் பட்சத்தில் செல்போன் நிறுவனத்தின் அல்லது கடையின் லாபம் அமோகமாக இருக்கும் .


உதாரணத்திற்கு எலெக்ட்ரானிக்ஸ் செல்போன் செல்போன் தயாரிப்பில்  SONY நிறுவனத்தின் பெயரை ஆராய்வோம் . 


இந்த SONY என்ற பெயரின் நியுமராலஜி எண் 16 . இதன் பிரமிடு எண் 68.  இந்த SONY என்ற பெயரின் பிரமிடு எண்ணான 16 ம் எண் ஜாதக கட்டத்தில் சுர்க்ரனுக்கு உரிய ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும். இதன் பிரமிடு எண்ணான 68 ம் எண்  செவ்வாய்க்கு உரிய விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும். 

ரிஷப ராசியில் இருந்து விருச்சிக ராசிவரை எண்ணிவர எண்ணிக்கையில் 7 ம் இடமாக வரும் . இந்த 7 ம் இடம் கேந்திர ஸ்தானம் என்றும் – விஷ்ணு ஸ்தானம் என்றும் அழைக்கபடுகிறது . இப்படியாக SONY நிறுவன பெயரின் நியுமராலஜி எண்ணும் – அதன் பிரமிடு எண்ணும் கேந்திர ஸ்தான அமைப்பை பெற்று வருவதால் இந்த நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட செல்போன் தயாரிப்புகள் விற்பனையில் லாபத்தை ஈட்டுகின்றன . 



அடுத்து SAMSUNG (சாம்சங் ) நிறுவனத்தின் பெயர் அமைப்பை சற்று ஆராய்வோம் . இந்த SAMSUNG என்ற பெயரின் நியுமராலஜி எண் 25 . இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 49. இந்த SAMSUNG என்ற பெயரின் நியுமராலஜி எண் 25 ம் எண்ணானது மிதுன ராசிக்கு உரிய எண்ணாகும். இந்த SAMSUNG என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 49 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும். 

மிதுன ராசியில் இருந்து கன்னி ராசிவரை எண்ணிவர எண்ணிக்கையில் 4 ம் இடமாக வரும் . இந்த நான்காம் இடம் கேந்திர ஸ்தானத்தின் அந்தஸ்தில் வருவதால் இந்த நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பான செல்போன் தயாரிப்புகள் விற்பனையில் தனி முத்திரையை  பதிக்கின்றன .

இன்னும் நிறைய உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம் . ஆதலால் புதிதாக CELLPHONE( செல்போன் ) நிறுவனம் அல்லது கடை அல்லது எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட கடை அல்லது நிறுவனம் தொடங்குவதாக இருந்தால் அந்த நிறுவனம் அல்லது கடையின் நியுமராலஜி எண் – அதன் ஹீப்ரு பிரமிடு எண் – 4 – 7 – ஆகிய இரண்டு எண்களின் ஆதிக்கத்திலும் – நியுமராலஜி எண்ணும் – அதன் ஹீப்ரு பிரமிடு எண்ணும் – ஒன்றுக்கு ஒன்று கேந்திர ஸ்தான அமைப்பை பெற்று வரும்பொழுதும். அல்லது அந்த நிறுவனம் அல்லது கடையின் நியுமராலஜி எண் – 4 – 7 ம் எண் ஆதிக்கத்தில் அமைந்து அதன் ஹீப்ரு பிரமிடு எண் ஏதாவது ஒரு அதிர்ஷ்டகரமான எண்ணில் அமைந்து கேந்திர ஸ்தான அமைப்பை பெற்று வரும்பொழுது விற்பனையில் அதிகமான லாபத்தை எதிர்பார்க்கலாம் . 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

 

0 comments:

Post a Comment