Thursday, May 12, 2022

மே 13 - 2022 - இன்று வெள்ளிக்கிழமை குழந்தைகளின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                     தாயே பூமாதேவி 



                                         இன்று பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி - 13 - 5 - 2022  (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 15  (சுக்ரனின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 76 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை - சுக்ரனின் ஆதிக்க கிழமை 

இன்று 13 - 5 - 2022 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 76. 

7 6   =  ஹீப்ரு பிரமிடு எண் 
6 1 5
9 6 41
3 6 9 4 6
4 8 7 2 2 4
1 3 5 2 0 2 2   =  பிறந்த தேதி 

கேது பகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் சுக்ரனை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் இணைந்து ராகு கிரகத்தின் ஆதிக்கத்தை இந்த 76 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

புது புது வழிகளில் பணம் பொருளாதாரம் வந்து சேரக்கூடிய பாக்கியத்தை கொடுக்கக்கூடியது இந்த எண் 

எகிப்திய பிரமிடுகளில் நாணயங்களில் நட்சத்திர குறி பொறிக்கும் மனிதனோடு கூடிய சித்திரங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

இவர்கள் மூலமாக கஷ்டப்படுபவர்களுக்கு நன்மையும் பலனும் உண்டாகும் . மற்றவர்களுக்கு உதவும் செயல்களில் ஈடுபடுவதால் கடவுளின் ஆசியுடன் இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும் . 


சமுதாய நலனில் அக்கறை கொண்டு பொது காரியங்களில் அந்தஸ்தும் புகழும் உயரும் . மற்றவர்கள் பார்த்து வியப்படையும் அளவுக்கு மற்றவர்கள் கண்டு பிடிக்கமுடியாத புது புது வழிகளில் பண வரவு இவர்களிடம் இருக்கும் . 

இவ்வளவு சிறப்பான பலன்கள் இவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றாலும் சில நேரங்களில் திடீரென எல்லா செல்வங்களையும் பிற்காலத்தில் இழக்க நேரிடும் சூழ்நிலையும் உண்டாகும் . 

தொழில் நிறுவங்களுக்கு இந்த எண்களில் பெயர் அமைவது லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் . 

வட்டிக்கடை நிதி நிறுவனம் மூலமாக லாபம் உண்டாகும் . 

ஓவியம் பிரிண்டிங் தொழில் சிற்பம் போன்ற தொழில்களால் மேன்மை உண்டாகும் . கலை துறையில் நிலையான வெற்றி உண்டாகும் . 


பெயரின் எண் இந்த 76 வந்து  பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 19 - 46 - 37 ஜக வந்தால் இன்று பிறந்த குழந்தைகளுக்கு வாழ்க்கையில் நிலைத்த வெற்றிகளை தரும் .

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29  வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வரும் குழந்தைகளுக்கு இந்த 76 ம் எண்ணில் பெயர் அமைத்து கொண்டால் வாழ்க்கையில் தீமையான பலன்களை அனுபவிக்க நேரிடும் . 

பெற்றோர்களின் கவனத்திற்கு : 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் இன்று பிறந்த குழந்தைகளுக்கு ஆபத்து இல்லாத சிறப்பான எதிர்காலம் அமையும் . 


                                                 அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி

நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று  பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 76 ம் எண்ணுக்கு உரிய ராகு தீமை தரக்கூடிய இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால்   குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட குழந்தைக்கு ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 


                                      இன்று மே 13 ல் பிறந்த பிரபலம் : 



பக்ருதீன் அலி அஹமது . - இந்தியாவின் 5 வது குடியரசு தலைவர் . பிறப்பு 13 - 5 - 1905 . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

மே 12 - 2022- இன்று வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். ராவணன் BSC

0 comments




                                         இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 12 - 5 - 2022 - குருவின் ஆதிக்க தேதி 

பிறந்த தேதியின் கூட்டு எண் - 14. - புதனின் ஆதிக்க எண் 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 25 - கேதுவின் ஆதிக்க எண் 

பிறந்த கிழமை - வியாழன் - குருவின் ஆதிக்க கிழமை 


2 5    =  ஹீப்ரு பிரமிடு எண் 

2 9 5

6 5 4 1

1 5 9 4 6

3 7 7 2 2 4

1 2 5 2 0 2 2   =  பிறந்த தேதி 

இன்று 12 - 5 - 2022 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 25 .  மன பலத்தை ஆட்சி செய்யும் சந்திரனும் புத்திக்கு அதிபதியான புதனும் இணைந்து கேது பகவானின் குண நலன்களை இந்த 25 எண் வெளிபடுத்துகிறது . 

இந்த எண்ணை முற்றிலும் அதிர்ஷ்டமான எண் என்று சொல்ல முடியாது. இந்த எண்ணின் முழு பலத்தையும் தெரிந்து கொள்ளவும்  முடியாது . 

சரியான பாதையில் மனதை செலுத்தி உழைத்தால் உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கௌரவமும் தரும் . 

இந்த எண் ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த எண் குறிக்கிறது . 

ஆன்மீக வழியில் நாட்டம் அதிகரிக்கும் . 

கனவில் தெய்வீக ரூபங்களின் நடமாட்டம் இருக்கும். பெண்கள் மூலம் தொந்தரவுகளும் உண்டாகும் . புத்திரர்களுக்கு பீடையை உண்டாக்கும் . 


சோதனைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் இந்த எண் திருமண வாழ்க்கையிலும் திருப்தி இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி பெரும் சோதனைகளையும் தரும் .

இந்த எண்ணின ஆதிக்கத்தை கொண்டவர்கள் ஒரு சிலர் கலப்பு திருமணம் செய்து கொள்வதும் , ஒரு சில இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜெனனம் ஒரு வித சூட்சுமமான ரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் .

பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 2 11 20 29 வருபவர்களுக்கு  இந்த எண் நற்பலன்களை தரும் 
பெற்றோர்களின் கவனத்திற்கு :
.

இன்று  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதிக்குரிய ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்டம் இல்லாத கேதுவின் ஆதிக்கத்தில் அமைந்துள்ளதால்  பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும்
 . 

பிறந்த தேதிக்குரிய குரு ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்தால் C G L S போன்ற ஆரம்ப எழுத்துக்களிலும் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய புதன் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்தால் E H N போன்ற ஆரம்ப எழுத்துக்களிலும் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கேது ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்தால் O - Z  - போன்ற ஆரம்ப எழுத்துக்களிலும் குழந்தைக்கு பெயரை வைக்கலாம் 



                                                   அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்த குழந்தைகளின்  ஜாதகத்தில் 25  ம் எண்ணுக்குரிய கேது தீமை தரக்கூடிய இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 



                                        இன்று மே 12 ல் பிறந்தவர்கள்  : 



எடப்பாடி பழனிசாமி - தமிழகத்தில் முன்னாள் முதல் அமைச்சர் . பிறப்பு 12 - 5 - 1954 

           
 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, May 11, 2022

டைட்டானிக் கப்பலின் சோக முடிவும் - ஜோதிட ஹீப்ரு பிரமிடு எண்களும் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 comments

   தாயே பூமாதேவி 


உலகின் முதல் சொகுசு கப்பல் டைட்டானிக் என்ற கப்பல் எந்த ஒரு இயற்கை சீற்றத்தினாலும் பாதிக்கபடாது, கடவுளால் கூட இந்த கப்பலை எதுவும் செய்து விட முடியாது என்று கருதப்பட்ட அந்த கப்பல் கடலில் பெரும் பனிப்பாறையில் மோதி பெரும் விபத்துக்கு  உள்ளாகி ஏப்ரல் 15 2012 அன்றோடு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது உலகத்தையே சோகத்துக்கு உள்ளாக்கி கப்பலில் பயணம் செய்த 1514 உயிர்களை பலி வாங்கிய இந்த கப்பல் எப்படி விபத்துக்கு உள்ளானது என்பது பற்றி பல கேள்வி குறிகள் உலக மக்களிடையே எழுந்தது. 


கப்பலை உருவாக்கிய தொழில் நுட்ப வல்லுனர்கள் மத்தியில் இந்த டைடானிக் கப்பல் கவிழ்ந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது . பலதரப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி கப்பலின் தரத்தை சோதித்து பார்த்த பிறகு இந்த கப்பல் எந்த ஒரு விபத்துக்கும் ஆளாகாது என்று உத்திரவாதம் அளிக்கப்பட்ட பிறகே இந்த சொகுசு கப்பல் தனது ஆடம்பரமான பயணத்தை தொடங்கியது. ஆனால் விதியின் விளையாட்டு காரணமாக இந்த கப்பல் தனது  சோகமான முடிவை தேடிகொண்டது.


எதனால் என பல ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான கருத்துகளை சொல்லிக்கொண்டுதான் உள்ளார்கள் . ஆனால் இந்த டைட்டானிக் கப்பல் விபத்துக்கு உள்ளானதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்  என்பதை ஜோதிட ரீதியாக    ஆராய்ச்சி செய்ய தொடங்கினேன் . ஆராய்ச்சியின் முடிவில்  அந்த கப்பலின் பெயர் அமைப்பும் அந்த கப்பலின் கட்டுமான பனி தொடங்கிய தேதியும், அந்த கப்பல் தனது பயணத்தை தொடங்கிய தேதியும்  மோசமான விளைவுகளையும் , மரணத்தையும் தரக்கூடிய தேதியின் கூட்டு எண்களாக அமைந்ததே அந்த கப்பலின் சோக முடிவுக்கு ஒரு காரணம் என் எனது ஜோதிட ஆராய்ச்சி பார்வையில் தெரிந்தது .  அந்த ஜோதிட விளக்கத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் .  


நியுமராலஜி  படி  அதாவது எண் கணித ஜோதிடப்படி TITANIC என்ற கப்பல் பெயரின் மொத்த கூட்டு எண் 19 என்றுதானே வருகிறது. இந்த 19 எண்ணிற்கு சிறப்பான பலன்கள் தானே சொல்ல பட்டிருக்கிறது. இந்த கப்பல் விபத்திற்கு டைட்டானிக்  என்ற பெயர் எப்படி காரணமாக முடியும் என்ற ஒரு விதமான சந்தேகம் அனைவருக்கும் எழும் .  ஆனால் இந்த கப்பலின் பெயர் டைட்டானிக் என்றுதான் அனைவருக்கும் தெரியும்.  


ஆனால் இந்த கப்பலின் முழு பெயர் RMS TITANIC . இந்த நியூமராலஜி படி இதன் கூட்டு எண்  28 . இந்த இருபத்தி எட்டாம் எண் மனித சக்திக்கு அப்பாலுள்ள எண்ணாகும். இந்த எண் ஜனன மரண அடிப்படையை உணர்த்தும் எண்ணாகவும் கருதப்படுகிறது. இந்த 28 ம் எண் ராசி கட்டத்தில் நீர் ராசியான கடக ராசியில் வரும் எண்ணாக   வருவதால் என்னவோ கடலுக்கு மத்தியில் பெரும் கூட்டு மரணத்தை இந்த 28 ம் எண் நிகழ்த்தி காட்டி இருக்கிறது.  


இந்த இருபத்தி எட்டாம் எண் ஒரு மனிதனின் பெயரின் கூட்டு எண்ணாக வரும்பொழுது பெரிய அந்தஸ்து பணம் பதவி ஆகியவற்றை தந்து பிற்பகுதியில் அனைத்தையும் பிடுங்கிகொள்ளும் தன்மையை கொள்ளும் தன்மையை கொண்டது இந்த எண் என்றாலும் டைட்டானிக் கப்பல் விஷயத்திலும் ஆரம்பத்தில் ஒரு மகிழ்ச்சியான சூழ் நிலையை கொடுத்து பின் அந்த  மகிழ்ச்சிக்கு முற்று புள்ளி வைத்து மரணத்தையே அந்த கப்பலுக்கு பரிசாக தந்து விட்டது .

மேலும் இந்த டைட்டானிக் கப்பலின் இந்த சோக முடிவுக்கு அந்த கப்பலின் பெயரின் நியூமரலாஜி கூட்டு எண் ஒரு பக்கம் என்றாலும் RMS TITANIC என்ற பெயரின் பிரமிடு கூட்டு எண்ணான 38 ம் எண்.

3  8    =   ஹீப்ரு பிரமிடு எண் 
4  8   9 
2  2   6   3 
2  9   2   4  8 
8  3   6   5  8  9 
9  8   4   2  3 5   4 
4  5   3   1  1 2   3  1
6  7   7   5  5 5   6  6  4
2  4   3  4  1 4   1   5  1  3
R  M  S  T  I  T  A  N  I  C 


அந்த கப்பலின் விபத்துக்கு மற்றொரு காரணமாக அமைந்து விட்டது . இந்த 38 ம் எண் ஒரு நபரின் பெயரில் வரும்பொழுது படிப்படியாக செல்வமும் புகழும் அதிகரிக்கும் . ஆனால் எதிர்பாராத ஆபத்துக்களும் உண்டாகும். வாழ்க்கையின் முடிவும் எதிர்பாராத வகையில் சம்பவமாகவே இருக்கும் என்று சொல்லப்பட்ட பலனுகேற்ப   கப்பல் கவிழ்ந்து 1514 உயிர்களை பலி வாங்கிய  சோக முடிவும் யாருமே எதிர்பாராத ஒரு திடுக்கிடும் சம்பவமாகவே நிகழ்ந்தது .


ந்த ஒரு செயலை தொடங்கி அந்த செயல் கடைசி வரை நிலையான நல்ல பலனை தர அந்த செயல் ஆரம்பிக்கும் தேதி , அந்த தேதியின் கூட்டு எண் அந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் அனைத்துமே சிறப்பாக அமைந்து விட்டால் அந்த செயல் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்சிகளும் சிறப்பாகவே நல்ல பலனாகவே அமையும் .
அந்த வகையில் இந்த டைடானிக் கப்பலின் கட்டுமான பணி ஆரம்பிக்கபட்ட நாள்  31- 3- 1909  ஆகும் . இந்த 31ம் எண்ணிற்கு பலன்கள் எதிர்பாராத நிகழ்ச்சி களாலும் திடீர் முடிவுகளாலும் பாதிக்க படலாம் என்று நியூமரலாஜியில் (எண் கணித சோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது ) 

இந்த 31 ம்  எண் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாகும் . அரசனை போல் வாழ்வு உண்டாகும் .ஆனால் எதையும் அனுபவிக்க முடியாமல் விதி சதி செய்யும், இதற்க்கு உதாரணம் உலகத்தையே தன் வசதிற்கு கொண்டு வந்த மாவீரன் அலெக்சாண்டர் பெயரை எடுத்து கொள்வோம். ALEXANDER இந்த பெயரின் கூட்டு எண் 31 ஆக அமைந்து இருந்தது , ஆனால் உலகத்தையே தன் வசப்படுத்தி தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டர் எதையும் சரியாக ஆண்டு அனுபவிக்காமல்  தன்னுடைய 31 வயதில் இறந்தான் என்று  தெரிந்து கொள்வதன் மூலம் இந்த எண்ணின் குணத்தை நாம் தெரிந்து கொள்ளலாம் . 

அதேபோல் இந்த தேதியின் கூட்டு எண்ணை  மிகவும் கவனத்துடன் நாம் பார்த்தால் விபரீதம் புரியும் இந்த தேதியின் மொத்த கூட்டு எண்  26 ஆக வருகிறது . இந்த கப்பலின் கட்டுமான பணி தொடங்கியபோதே இந்த கப்பல் எப்படியும் விபத்துக்கு உள்ளாக போகிறது என்பதை இந்த 26 ம் எண்  சுட்டி காட்டுகிறது . விபத்து என்ற அர்த்தத்தை கொடுக்கும் ACCIDENT என்ற சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை இந்த 26 ம்  எண்ணில் வரும் என்பதை உங்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன் . 

                         
A C C I D E N T :

A =  1 
C =  3
C =  3
I =   1
D =  4
E =   5
N =  5
T =   4 
________ 
       26
________ 
  
மேலும் இந்த 26 எண்ணுக்கு  எண் கணித ஜோதிடத்தில் இந்த எண்ணிற்கு சிறப்பான பலன்களே கிடையாது . மிகவும் பழமையான நூல்களில் சகலமும் பிரளயத்தில் மூழ்குவது பற்றி இந்த 26 ம் எண்ணிற்கு பலன்களாக சொல்லப்பட்டுள்ளது .

அதே போல் இந்த கப்பலின் கட்டுமான பணி  தொடங்கிய தேதி 31 - 3 - 1909 இதன் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 38


   
3 8   =   ஹீப்ரு பிரமிடு எண் 
2  1  7   
7  4   6   1 
8  8   5   1  9 
4  4   4   1  9  9
3  1   3   1  9  0  9

கப்பலின் கட்டுமான பணி தொடங்கிய தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 38 ஆகவும் RMS TITANIC என்ற கப்பல் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் 38 ஆக வருவதை பார்க்கும்பொழுது இந்த கப்பலின் அழிவு அதன் கட்டுமான பணி ஆரம்பிக்கும்பொழுதே தீர்மானிக்கப்பட்டு விட்டது . 


இந்த விபரீத எண்கள்  கப்பலின் விபத்துக்கு வித்திட்டது என்றாலும் . இந்த ஆடம்பரமான கப்பல் தனது ஆடம்பரமான பயணத்தை 10- 4- 1912 அன்று தொடங்கியது . ஒரு மனிதனின் பெயரில் பெயரின் பிரமிடு கூட்டு எண் சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்  ஆதிக்கத்தில் வந்தால் அவனுக்கு ஆயுளில் குறைபாடு உண்டாகும் என்ற விளக்கத்தை  நடிகர் முரளியின் மரணத்திற்கு அவரின் பெயர் அமைப்பே காரணம் என்ற தலைப்பை உடைய என்னுடைய ஜோதிட கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளேன். இந்த கப்பல் தனது பயணத்தை தொடங்கிய தேதியின் பிரமிடு கூட்டு என் 71 ஆக சனி  பகவானின் ஆதிக்க எண்ணில் வந்ததால் அந்த கப்பலுக்கு ஆயுள் குறைவை ஏற்படுத்தி அதன்  அழிவுக்கு வழி செய்துவிட்டது .  

7  1  =  8  = ஹீப்ரு பிரமிடு எண் 
2  5  5 
5  6  8  6 
5  9  6  2 4 
1  4  5  1  1  3 
1  0  4  1  9  1  2 


ஆக இந்த டைட்டானிக்  சம்பந்தப்பட்ட அனைத்து எண்களும் தீமை தரக்கூடிய எண்களின் ஆதிக்கத்தில் அமைந்ததே அந்த கப்பலின் சோக முடிவுக்கும் அந்த கப்பலில் பயணம் அவரின் உயிரும் காரணம் என்று  இந்த ஜோதிட கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு உணர்த்த விரும்பிகிறேன் .   ஆதலால் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும்   நன்மை தீமை அனைத்தையும் தீர்மானிப்பது உங்களின் பெயரின் கூட்டு எண்களும் உங்களின் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும்   ஒரு காரணமாக அமையலாம் என்பதை நினைவில் கொண்டு உங்களின் பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்துக்கொண்டு  நலமுடன் வாழ நான் வணங்கும் சிவபெருமானை பிரார்த்தனை செய்கிறேன். 


டைட்டானிக் கப்பல் பற்றிய சேகரிக்கப்பட்ட முழு தகவல்களையும் எமது இணைய தள வாசகர்கள் படித்து பயன் பெறவும் . 


லகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.

கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும்.

Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது.

டைட்டானிக் கப்பல் பெண் பாலில் தான் (She) அழைக்கப்படுகிறது அதாவது இந்தக்கப்பலை பெண்ணாக கருதுகிறார்கள்.

இந்தக் கப்பல் A முதல் G வரை பல அடுக்குகளாக கட்டப்பட்டது. மேல் (A) அடுக்கில் முதல் வகுப்பு பயணிகளான செல்வந்தர்களுக்கும் அதன் கீழே வரும் அடுக்குகள் அதற்கு கீழ் வகுப்புகளான இரண்டு, மூன்று வகுப்பு பயணிகளுக்குமானது. மூன்றாம் வகுப்பு பயணிகள் அறை டார்மிட்டரி என்று அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட படுக்கைகளால் ஆனது. (டைட்டானிக் படத்தில் ஜேக் ன் அறை) இந்த சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டது. 

இதில் உள்ள ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல்க் குளம், சொகுசான உணவருந்தும் இடம், படிக்கும் எழுதும் இடம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. இதில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. புரியும் படி கூறவேண்டும் என்றால் சாதா விடுதியில் தங்கி இருந்தவர் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்றால் எப்படி மலைத்துப் போவாரோ அது போல இருக்கும். முதல் வகுப்புப் பயணிகள் தங்களுடன் செவிலியர் உதவியாளர்கள் ஆகியோரை துணைக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்.
 
இதில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் சென்றனர் இதில் அமெரிக்க மில்லியனர் John Jacob Astor IV மற்றும் இவரது 18 வயது கர்ப்பமான மனைவி பிரசவத்திற்காக நியூயார்க் சென்றார்கள். John Jacob Astor IV தான் இந்தக்கப்பலில் மிகப்பெரிய பணக்காரர். இவர் ஆண் என்பதால் படகில் ஏற அனுமதிக்கப்படவில்லை பின் 1912 ஏப்ரல் 22 ம் தேதி இவருடைய இறந்த உடலுடன் இருந்த பல ஆயிரம் டாலர்கள் பணமும் கண்டு எடுக்கப்பட்டது.

 RMS Carpathia கப்பலால் காப்பற்றப்பட்ட இவரது மனைவி இதன் பிறகு 1916 ல் மறுமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை 1933 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மூன்றாம் வகுப்பில் தான் அதிக பயணிகள் இருந்தார்கள் இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள், அமெரிக்கா சென்று வேலை தேடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டு இதில் வந்தவர்கள். பல நாட்டை சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர். மூன்றாம் வகுப்பில் இருந்த இரண்டு மாதக் குழந்தையான Millvina Dean தான் இருந்ததிலேயே வயது குறைந்த பயணி!! இவர் தன்னுடைய 97 ம் வயதில் 2009 ஆண்டு காலமானார். டைட்டானிக் விபத்தில் பிழைத்தவர்களில் இவர் தான் கடைசி நபர்.

ஒவ்வொரு அடுக்கிற்க்கும் கதவு இருக்கும் இதனால் ஒரு வகுப்பு பயணிகள் மற்ற வகுப்பு பயணிகளுடன் கலக்காமல் இருக்க முடியும். விபத்து ஏற்பட்ட போது கதவு மூடி இருந்ததால் சிலர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டனர்.

கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நூறு வருடம் முன்பு 4500$ என்றால் தற்போது கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்தக்காலத்தில் ஒரு வீட்டையே 1000$ க்கு வாங்க முடியுமாம்!

விபத்து ஏற்ப்பட்டால் தப்பிக்க 20 படகுகள் (Life boats) மட்டுமே இருந்தன இதில் 16 படகுகள் 65 பேரையும் 4 படகுகள் 47 பேரையும் கொள்ளும் அளவு கொண்டது 1100 – 1200 பேர் தப்பித்து இருக்க முடியும் ஆனால் இதில் 710 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. முதல் வகுப்பு பயணிகள் படகில் மிகக் குறைவானவர்களே இருந்தனர் அதோடு தனது படகில் ஏறி படகை கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று பலரை படகில் ஏற இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த விபத்திற்குப் பிறகே பாதுகாப்பு விசயத்தில் அனைவரும் அதிக கவனம் செலுத்தினார்கள். உயிர்காக்கும் படகுகளின் முக்கியத்துவம்  அதிகரிக்கப்பட்டது.


படகில் ஏற முடியாதவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து குளிரில் சில நிமிடங்களில் விரைத்து இறந்து விட்டார்கள். கடுமையான பனி (−2°C) அப்போது நிலவியது. டைட்டானிக் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் ஜேக் தண்ணீரில் விழுந்த உடனே அவரது தலை முடியில் இருந்த நீர் பனிக்கட்டியாக மாறி இருக்கும்.

நம்மால் பனிக்கட்டியையே சில நொடிகள் கூட கையில் வைத்து இருக்க முடியாது அப்படி இருக்கும் போது நம் உடல் முழுவதும் இதைப் போல குளிர்ச்சியில் இருந்தால்!…


தப்பித்துச் செல்ல குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது எனவே இந்தக்கப்பலில் சென்ற பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள். அப்படியும் தப்பித்த ஆண்கள் நாட்டில் உள்ளவர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர் காரணம் பல குழந்தைகள் பெண்கள் படகு கிடைக்காமல் இறந்து விட்டனர் அப்படி இருக்கும் போது அவர்களை காப்பாற்றாமல் கோழை போல இவர்கள் நடந்து கொண்டதால் பலரால் அதன் பிறகு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டனர்.


மூன்று என்ஜின்களைக் கொண்ட இதில் இரண்டு எஞ்சின்கள் இணைந்து 30,000 குதிரை சக்தியை (Horse Power) தரவல்லது. நிலக்கரி மூலம் வேலை செய்யும் Turbine மேலும் 16,000 குதிரை சக்தி வேகத்தை தரவல்லது மொத்தம் 46,000 குதிரை சக்தி. இரண்டு எஞ்சின்கள் 720 டன் எடை கொண்டதாகும். இதை இயக்குவதில் 176 பணியாளர்கள் பகுதி நேர வேலையில் (24/7) பயன்படுத்தப்பட்டார்கள். அழுக்கு, வெப்பம் அதிகம் உள்ள இடம் என்பதால் இங்கு பணி புரிவது என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். இதில் தினமும் வரும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டது.

கப்பலின் வேகம் மணிக்கு 39 கிலோ மீட்டர்முதல்வகுப்பில் 739 பயணிகளும், இரண்டாம் வகுப்பில் 674 பயணிகளும், மூன்றாம் வகுப்பில் 1026 பயணிகளும் இவர்களோடு 900 பணியாளர்களும் பயணம் செய்ய முடியும் ஆக மொத்தம் 3, 339 பேர் பயணம் செய்யலாம் ஆனால் இதில் 2,224 நபர்கள் மட்டுமே (900 ஊழியர்களும் சேர்த்து) பயணம் செய்தார்கள்.

முன்பே குறிப்பிட்டபடி இந்தக்கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளே அதிகம் இருந்தனர். அப்போது ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரியதாக இருக்கும் 7 குழந்தைகள் எல்லாம் சகஜமாக பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு வந்தவர்கள் பலர் குடும்பத்தோடு இறந்து போனார்கள்.

டைட்டானிக் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல பயன்படாமல் கார்கோ என்று அழைக்கப்படும் சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. இதில் பல டன் பொருட்கள் சரக்குகளாக கொண்டு செல்லப்பட்டன. கடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.

இதில் பயன்படுத்தப்பட்ட தந்தி முறை சாதனங்கள் 1000 மைல் வரை தகவல்களை அனுப்ப வல்லது.

ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீள பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20 மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்) மூழ்கியது. விபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும், தூரம் சுமார் 93 கிலோ மீட்டர். இது வர 4 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. 

RMS Carpathia சரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது. படகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள். இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.

கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார். கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றன. செய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும், அறையினுள் அமைதியாக சென்று விட்டார் என்றும், தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உலவுகின்றன. இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது.  

மூழ்க வாய்ப்பே இல்லை கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட டைட்டானிக்கின் முதல்ப் பயணமே கடைசிப்பயணமாக ஆகிப் போனது மிகவும் சோகமான விசயமாகும். 10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாக பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே! 

இந்த  டைட்டானிக் கப்பல் மூழ்கியது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு சந்திரனின் அதிக ஒளி வீச்சே காரணம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

டைட்டானிக் கப்பல் குறித்து டெக்சாஸ் பல்கலைகழகத்தின் சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வொன்றை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவு குறித்து நிபுணர்கள் கூறுகையில், 1400 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும். அப்போது மிக அதிகமான ஒளி வீசும்.


அதனால் கடல்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் அதிகரிக்கும். அவ்வாறு வீசிய ஒளியின் காரணமாக தான் அட்லாண்டிக் கடலின் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அளவுக்கு மீறிய வெள்ளம் உடைந்த கப்பலுக்கு புகுந்து, கப்பல் மூழ்க காரணமாக இருந்துள்ளது என தெரிவித்தனர்.  

                                              
 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328