Tuesday, March 8, 2022

மார்ச் 8 - 2022 - இன்று செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர் . இராவணன் BSC

0 comments

                                             இன்று   பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 8 - 3 - 2022 (சனியின்  ஆதிக்க தேதி )

பிறந்த தேதியின் கூட்டு எண்  - 17  (சனியின்  ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 73 (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - செவ்வாய் கிழமை 

இன்று 8 - 3 - 2022 செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 73.  பிரமாதமான வித்யாபலம் பொருள் வரவு சொத்து மாடு மனை கம்பீரமான தோற்றம் போன்றவைகளை தரக்கூடியது இந்த எண் .

விளக்கு வெளிச்சத்தில் நிலத்தில் நடக்கும் மனிதர்களுக்கு மேலே ஐந்து நாணயங்கள் இருப்பது போன்ற எகிப்திய  சித்திரங்கள் இந்த 73 எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . அமிர்த ரசம் என்றும் - குன்றாத இளமை மோக்ஷம் என்றும் மந்திர நூல்களில் இந்த எண் பற்றி வருணிக்கப்படுகிறது .  

கேதுபகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் மனோ சக்திகள் பலம் அடைதலும் 3 என்ற அதிகார பலமும் புகழும் சுக வாழ்வும் சமயோசித சமர்த்தவர்களாக விளங்குதலும் மந்திரிகளின் செல்ல பிள்ளைகளாகவும் வீடு வாசல் தோட்டம் துரவு பால் - பசு பலவகையான ஸ்திர சொத்துக்கள் பெறுதலும் உண்டாகும் . தொழிலில் கூட்டு முயற்சிகள் வெற்றி உண்டாகும் . காம எண்ணங்கள் குறைந்து துறவற மனப்பான்மை கூட ஏற்படலாம் . தனுசு ராசி வீட்டில் மூலம் 1 ம் பாதத்தில் இடம்பெறும் இந்த 73 ம் எண் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோருக்கு மிகுந்த மேன்மைகளை தரும் . 

பரம்பொருளின் வற்றாத அமுத சுரபி போன்ற கருணை மழை எப்பொழுதும் இவர்கள் காட்டில் பெய்தவாறு இருக்கும் . குழந்தைத்தனமான அப்பழுக்கற்ற இதயத்துடனும் நேர்மையுடனும் சாந்த சொரூபமாகவும் வாழ்ந்து வந்தால் தாழ்வு இல்லை . எப்பொழுது அநியாயமான நடத்தைகள் தோன்றுகிறதோ அப்பொழுது வீழ்ச்சிகள் தொடங்கிவிடும் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர் இன்னும் சிறப்பாக இருக்கும் . 

                                                   அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 31 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்         
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு . 
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை 

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு உரிய சூரியன் நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்தால் A - I - J - Q - Y - போன்ற ஆரம்ப எழுத்துக்களில் குழந்தையின் பெயரை வைக்கலாம் . 

A என்ற எழுத்தின் பலன்கள் :

A என்ற எழுத்து யாவற்றுக்கும் முதல் . படிப்படியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற அபிலாஷயையும் மன வலிமையையும் எடுத்த காரியத்தை சாதிக்கும் மன உறுதியை தரவல்லது . ஆக்கும் சக்தியையும் தரும் . எந்த விஷயத்திலும் நன்மையே மனதில் தோன்றும் . எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் . 

I என்ற எழுத்தின் பலன்கள் :

உலகத்தை ஆட்டி வைக்கும் எழுத்து இதுதான் என்றால் பொருத்தமே . நான் என்னுடையது என்ற சுய நலத்தை சுட்டி காட்டும் எழுத்தாகும் .மனதில் உறுதியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி தரும் . எல்லா ஆங்கில எழுத்துக்களிலும் இரண்டு மட்டுமே தனித்து நின்று அர்த்தத்தை தரும் . அதில் A . (ஒரு ) . மற்றொன்று I (நான் ) . எப்பொழுதும் எச்சரிக்கையுடனும் சுய நம்பிக்கை உடனும் இருக்கும் தன்னபிக்கை கொண்டது . திருமணம் தொழில் போன்ற போன்ற நல்ல பழங்கள் ஏற்படும் . வழக்குகளில் வெற்றி கிட்டும் . தன் மனதில் பட்டதை கூறி அதை சட்டப்படி பலரை பின்பற்ற வைக்கும் தன்மை கொண்டது . அவசரபடுதலும் உண்டு . இந்த I என்று சப்தம் ஸ்ரீசரஸ்வதி பீஜாட்சர மந்திரத்தில் காணப்படுகிறது . 

J என்ற எழுத்தின் பலன்கள் :

புதிய நண்பர்களை தரும் . இந்த எழுத்து எந்த பிரச்சனைகளையும் பல கோணங்களில் இருந்து ஆராயும் சக்தியை தரும் . செல்வங்கள் பெருகும் . இன்பமயமான வாழ்க்கை ஏற்படும் . ஆக்கல் சகதியும் சொந்த அபிப்பிராயமும் உண்டு . அரசாங்கம் காரியங்கள் பலிதமாகும் . கலைகளில் ஆர்வம் ஏற்படும் . நண்பர்கள் உறவினர்கள் ஆதரவு கிட்டும் . இந்த J என்ற எழுத்து ஜெயம் என்ற சொல்லில் வருவதையும் காணலாம்.

Q என்ற எழுத்தின் பலன்கள் :

நிதானமான அறிவையும் தீர்மானமான அபிப்ராயமும் வெற்றிக்காக போராடும் உறுதியை தரும் வலிமை கொண்டது . தலைவராக இருக்க விரும்புவார்கள் . இருப்பினும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் தரும் . பலவிதமான சோதனைகள் ஏற்படும் . 

Y என்ற எழுத்தின் பலன்கள் :

மற்றவரை அடக்கி ஆளும் திறமை ஏற்படும் . சொற்களை பயன்படுத்துவதில் வல்லமை ஏற்படும் . எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும் . செய்தொழிலில் நல்ல லாபம் ஏற்படும் .  
  
இன்று 8 - 3 - 2022 செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய 73 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :
பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ்  கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும்  காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயில் 

                                  இன்று மார்ச் 8 ல் பிறந்த பிரபலங்கள் : 

ஓட்டோ ஹான் - நோபல் பரிசு பெற்ற கதிரியக்க வேதியலின் தந்தை ( பிறப்பு - 8 - 3 - 1879)

பெத்ரா கிவிதோவா - செக் குடியரசின் டென்னிஸ் வீராங்கனை  ( பிறப்பு - 8 - 3- 1990  )

பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர், -  அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் - தயாரிப்பாளர் (பிறப்பு - 8 - 3 - 1976 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

விஜயன் - VIJAYAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments

விஜயன் -VIJAYAN - சூரியனின் ஆதிக்க எண்ணும் செவ்வாயின் ஆதிக்கமும் கலந்து மறுபடியும் சூரியன் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் மிதுன ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

மந்திர சாஸ்திர நூல்களில் திரிலோக வசியம் என்று இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண் பற்றி கூறப்பட்டுள்ளது . " ஆகாய அரசகுமாரன்"  "கருத்தொருமித்த காதலர் எனவும் போற்றப்படுகின்ற இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் .   

வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது . லட்சுமி கடாட்சம் வீடு வாகனம் பொருள் போக்கியம் நல்ல வாழ்க்கை துணை இவை அனைத்தும் இந்த பெயருக்கு  சுலபமாக கிடைத்து விடும் . 

அரசு சம்பந்தப்பட்ட துறையிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றியும் போகம் சுகம் அனைத்தும் அமையும் . 

சாஸ்திர ஞானம் கூர்மையான அறிவு புத்திசாலித்தனம் உண்டாகும் . பெண்களாலும் அரசாங்கத்தாலும் முன்னேற்றம் உண்டாகும் .

இவர்களின் சொல்லுக்கு ஒருவிதமான வசிய சக்தி ஏற்பட்டு உலக மாந்தர்கள் அனைவரும் இவர்களுக்கு  கட்டுப்பட்டு நடப்பார்கள் .

கடவுளுடைய அனுக்கிரகம் இவர்களுக்கு எளிதில் கிடைத்து ருத்ரன் பவானி நந்தி பிருங்கி இவர்களின் அருளாசியால் மேன்மை பெருகி கொண்டே போகும் . 

ஸர்வ ஸதம்பன வித்தைகளும் மிருக வசியமும் மந்திர சித்தியும் இந்த எண்ணிற்கு உண்டு . நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும் இந்த எண்ணிற்கு விலகி விடும் . எப்பொழுதும் திறமையுடனும் கட்டுப்பாடான வாழ்க்கையில் பிரியாத சக்தியாக இவர்கள் விளங்குவார்கள் . 

உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையுடன் இவர்கள் வாழ்வார்கள் . 

ராஜயோகமான பெயராகவும் லட்சுமி கடாட்சம் கொண்ட பெயராக இந்த விஜயன் - VIJAYAN - என்ற பெயர் அமைப்பு இருந்தாலும் பெயரின் நியூமராலஜி எண் 16 என்ற துர் அதிர்ஷ்டமான எண்ணிலும் ஆபத்தான எண்ணிலும் அமைந்துள்ளதால்  இருக்கும் ராஜயோக வாழ்க்கையை கடைசி வரை அனுபவிப்பது காலத்தின் கையில் உள்ளது . 

பிறந்த தேதி 8 - 17 - 26 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 8 க வருபவர்கள் இந்த பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் அடிக்கடி ஆபத்திற்கு உள்ளாகலாம்  
 
பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்தும் அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்தும் அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் . 

                விஜயன் - VIJAYAN பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 31 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்         
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு . 
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை 

விஜயன் - VIJAYAN - பெயருக்கு தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் 

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் இந்த பெயருக்குள்ள அனைத்து தோஷங்களும் போகும் .

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும்  காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் பாக்கியங்களும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயில்  சென்று வழிபட்டு வர வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஜோதிடம் என்பது மெய்யா ? ஜோதிடம் என்பது விஞ்ஞானத்துடன் தொடர்புடையதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - பதில்கள் ?

0 comments

இன்றைய வானியல் விஞ்ஞானத்தின் தாய் பண்டைய ஜோதிட கலையே என்று உலகமே ஒப்பு கொள்ளும் வகையில் வரலாற்று பக்கங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டி கிடக்கின்றன . சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வானிலுள்ள கோள்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிப்பதில் நம் முன்னோர்கள் நிபுணர்களாக இருந்திருக்கின்றனர் .  

கலிலியோவும் நியூட்டனுக்கு தோன்றுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே பாஸ்கரா ஆரியப்பட்டா போன்ற வான சாஸ்திர நிபுணர்கள் இந்தியாவில் தோன்றி வானியல் குறித்த பல அற்புதமான உண்மைகளை கண்டுபிடித்தனர் .

பைபிளிலும் பண்டைய எகிப்திய சீன நூல்களிலிலும் நமது ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிகாச காவியங்களிலும் கோள்களின் அடிப்படையில் வருங்கால நிகழ்வுகளை கணித்ததாக பல கதைகளும் குறிப்புகளும் உள்ளன . 

சரித்திரத்தின் பக்கங்களை புரட்டினாலும் ஜோதிட கலை குறித்த பல வியப்பான தகவல்கள்  கிடைக்கின்றன . 

மாவீரன் அலக்சாண்டாரின் அரண்மனையில் இந்திய ஜோதிட நிபுணர்கள் இருந்திருக்கின்றனர் . அவர்கள் அலெக்சாண்டரின் ஜாதகத்தை கணித்து பாபிலோன் நகரில் நீங்கள் விஷம் வைத்து கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்திருக்கின்றனர் . 

பல ஆண்டுகள் பாபிலோன் நகருக்கே செல்லாமல் அலேக்சாண்டர் தவிர்த்து வந்தார் . இறுதியாக வேறு வழியின்றி பாபிலோன் சென்றபோது ஜோதிடர் கணித்தபடி எதிரிகளால் விஷம் வைத்து கொல்லப்பட்டார் . 

இயேசு கிறிஸ்து பிறந்தபோது ஏரோது மன்னனின் அவையில் இருந்தது ஜோதிட நிபுணர்கள் யூத குலத்தில்  ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும் அந்த குழந்தை யூத மக்களது குலத்தின் தலைவனாக மாறுவான்  ஏரோது மன்னனின் பரம்பரை ஆட்சி அழிந்து விடும் என எச்சரித்தனர் . 

இதனால் கலக்கமடைந்த ஏரோது மன்னன் தனது நாட்டிலுள்ள ஒரு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள்யும் கொன்று விட உத்தரவிட்டான் . ஆனால் இயேசு தப்பித்து விட்டார் . ஜோதிடம் பலித்தது . 

கம்சன் கதையும் கிட்டத்தட்ட இதேதான் . தனது தங்கைக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடம் சொல்லியதால் தங்கையையும் அவளது கணவனையும் சிறையில் அடைத்து குழந்தைகளை கொன்றான் .  ஆனாலும் கிருஷ்ணன் தப்பித்து கடைசியில் கம்சனை வதம் செய்ய ஜோதிடம் உண்மையானது . 

ஜுலியஸ் சீசரின் அரண்மனையில் ஸ்பூரினா என்ற புகழ் பெற்ற ஜோதிட நிபுணர் இருந்தார் . ஒவ்வொரு முறை போருக்கு செல்லும்போதும் அவரது அறிவுரைபடியே வியூகங்களை அமைத்து பல வெற்றிகளை ஜுலியஸ்  பெற்றார் . தனது நண்பர்களாலேயே ஜுலியஸ் சீசர் கொல்லப்படுவார் என சீசரை ஸ்பூரினா எச்சரித்திருந்தார் அப்படியே நடந்தது . 

பாஸ்கரா க்கான பட முடிவு

நெப்போலியன் காலத்தில்  லினோர்மாண்ட் என்ற பெண் ஜோதிட நிபுணர் மிகவும் புகழ் பெற்று விளங்கினார் . மாஸ்கோ மீது படை எடுத்து சென்றால் தோல்வி நிச்சயம் என இவர் நெப்போலியனை எச்சரித்து இருந்தார் . ஆனால் நெப்போலியன் அதை பொருட்படுத்தாமல் ரஷ்யா மீது படை படை நடத்தி சென்று தோல்வியை தழுவ வென்றி இருந்தது . 

இவ்வாறு பண்டை காலம் தொட்டே வரலாற்றின் பக்கங்களில் ஜோதிட கலைக்கு பல ஆதாரங்கள் உள்ளன .

சர் ஐசக் நியூட்டன் க்கான பட முடிவு
இயற்பியலின் தந்தை என அழைக்கப்படும் சர் ஐசக் நியூட்டனின் அறையில் நூற்று கணக்கான விஞ்ஞான புத்தகங்களின் நடுவே ஜோதிட கலை புத்தகங்ளையும் அவர் வைத்து இருந்தாராம் .

நியூட்டனின் மாணவரான ஹாலி என்ற விஞ்ஞானிக்கு இது பிடிக்கவில்லை  விஞ்ஞான புத்தகங்கள் இருக்கும் அறையில் அவற்றுக்கு நிகராக மூட நம்பிக்கை வளர்க்கும் ஜோதிட புத்தகங்களா ? என தனது எதிர்ப்பை நியுட்டனிடம் தெரிவித்தார் . 

அதற்க்கு நியூட்டன் கூறிய பதில் என்ன தெரியுமா? ஜோதிட கலை குறித்து நான் முழுமையாக கற்றிருக்கிறேன் . எனவேதான் மதிப்புக்கு உரிய இந்த புத்தகங்களை நான் வைத்திருக்கிறேன் . உனக்கு ஜோதிடம் பற்றி தெரியாததால் நீ அதை எதிர்க்கிறாய் . இவ்வாறு பதில் சொன்னார் . 

ஜோதிடமும் விஞ்ஞானமும் இன்று எதிரெதிர் துருவங்களாக நின்று மல்லு கட்டி கொண்டு இருக்கின்றன . ஒரு காலத்தில் உயர்ந்த கலையாக விஞ்ஞானமாக போற்றப்பட்ட ஜோதிடம் இன்றும் ஒரு சிலரால் இது ஒரு ஏமாற்று வேலை என்று ஒதுக்கப்படுகிறது .

அந்த காலத்தில் ஜோதிடமும் வான சாஸ்த்திரமும் ஒட்டி பிறந்த குழந்தைகளாகவே இருந்திருக்கின்றன . மத குருமார்களே வானியல் வல்லுனர்களாகவும் ஜோதிட விற்பன்னர்களாகவும் அரசுக்கு ஆலோசகர்களாக கோலோச்சி வந்திருக்கிறார்கள் . அவர்களின் கணிப்புகளும் அப்படியே நடந்திருக்கின்றன . 