Sunday, August 26, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 77 ல் இன்று 26 - 8 - 2018 - ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
இன்று 26 - 8  - 2018 ஞாயிற்று  கிழமை பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 77. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :  

கிரகங்களில் கேதுபகவானின் 7 என்ற இரண்டு ஆதிக்க எண்கள் இணைந்து புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 77 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .  

சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாகும் . கம்பீரமான தோற்றத்தையும் புகழையும் தரும் வலிமை கொண்டது . சாதனைகளை உருவாக்கி புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டது . ஸர்வ ஜன வசியம் என்று மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . சொந்த தன்முனைப்பும் நிலையான ஐஸ்வரியத்தையும் தரும் . 

நிலையான புகழையும் வசீகரமான வாழ்க்கையும் இந்த எண்ணிற்க்கு உண்டு . வெளிநாட்டு பிரயாண யோகத்தை ஏற்படுத்தி கொடுத்து யோகங்களை வழங்கும் . 

கேதுபகவானை குறிக்க கூடிய 7 ம் எண் இரண்டு முறைவருவதால் தெய்வ பக்தியில் தீவிரமாக மனதை செலுத்தி வந்தால் முன்னேற்றமாக இருப்பார்கள் சாமர யோகம் என்ற  ஒருவகையான யோகம் இந்த 77 ம் எண்ணிற்கு இருப்பதால் உயர் பதவி  - புகழ்  - எடுக்கும் காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும் . வெளி நாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தையும் பொது காரியங்களில் பிரசித்தியையும் உண்டாக்கும் .

அரசாங்க துறையிலும் - அரசியலிலும் சட்ட நிபுணத்துவம் போன்ற துறைகளிலும் புகழை உண்டாக்கும் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 41 - 23 க வந்து பெயரின் நியூமராலஜி கூட்டு எண் 77 க வருமானால் ஆனந்தமான வாழ்க்கை அமையும் . 

ஆதலால் இன்று 26  - 8 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தைக்கு வளமான எதிர்காலம் அமையும் .

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

26  - 8 - 2018 ல் இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 77ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Saturday, August 25, 2018

ஹீப்ரு பிரமிடு எண் 26 ல் இன்று 25 - 8 - 2018 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                   ஓம் சிவ சக்தி
இன்று 25  - 8 - 2018 சனிக்கிழமை  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 26. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் : 

கிரகங்களில் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் சனிபகவானை குறிக்கக்கூடிய 6 ம் எண்ணும் இணைந்து மறுபடியும் சனியின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 26 ம் எண் மிதுன ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .

தோல்வியும் - ஆபரணம்  - பொருள் நஷ்டம் - இடம் பெயர்வதும் இந்த எண்ணில் காணப்படும் . இது மிகவும் அமானுஷ்யமான எண்ணாகும் . குடும்ப நலனும் நன்கு அமையாது . தெய்வீக மத சம்பந்தமானவற்றில் ஈடுபாடு ஏற்படலாம் . பொருளாதார வகையில் சுமாரான பலன்களை தரக்கூடியது . வயோதிகத்தில் வறுமையையும் - வீண் முயற்சிகளையும் - தோல்விகளையும் இந்த 26 ம் எண் குறிக்கிறது . நண்பர்கள் - கூட்டு ஒப்பந்தம் - ஜாமீன் வகைகளில் - நஷ்டங்களையும் - மனஸ்தாபத்தையும் உண்டாக்கும் . 

கஷ்டம் - நஷ்டம் -   தோல்வி - குழப்பம் போன்றவைகளை இந்த எண் உண்டாக்கும் . விரோதிகளால் பகிரங்கமாக தாக்கபடுதல் பணம் - பதவி வகைகளில் வீண் சிரமங்களையும் கொடுக்கும் . வீண் ஆடம்பரத்தையும் - ஆர்ப்பாட்டத்தையும் - பெண்களால் ஏற்ற - இறக்க - அவமானகளையும் தரக்கூடியது இந்த எண் . மிதுன ராசியில் 26 ம் - எண் - இடம்பெறுவதால் - மிதுன ராசிக்கு 8 ம் - இடம் - மகர ராசியாகவும் - 9 ம்  இடமாக - கும்பராசியாக இடம் பெறுவதால்  அஷ்டம பாக்கியங்களை இந்த 26 ம்  குறிக்கிறது . 

கஷ்டத்திற்கு பிறது லாபம் வந்தாலும் அந்த லாபம் எதற்கும் பிரயோஜனப்படாமல் போகும் . அரசியலுக்கு ஏற்றது இந்த 26 ம்  எண் . வீடு - நிறுவனம் - வியாபார துறைக்கு கடினமான தோல்விகளை வழங்கும் . ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் வெற்றிகள் ஏற்பட்டாலும் பிறகு சரிவை உண்டாக்கும்

" தனி மனித செங்கோல் " போன்ற சிற்பங்கள் எகிப்திய சிற்பங்கள் இந்த 26 ம்  எண்ணொடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . " த்வேஷம் " சிரஞ்சீவித்யம் " என சாஸ்திரங்களிலும் இந்த எண்  குறிப்பிடப்பட்டுள்ளது . 

"பஞ்சபூதனாம்". "வ்யஷ்டி ரூபதாம் மரண மிதியாவத் "(அதாவது பஞ்சபூதங்களும் தனித்தனியே பிரிந்து போகும் மரண நிலை ) 

பிரம்மா - விஷ்ணு - யமன் - குபேரன்  - மரணமடைதலையும் - சிவனின் சம்ஹார தாண்டவத்தை சக்தி பார்த்து கொண்டிருத்தலையும் இவ்வெண்  குறிக்கிறது . 

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த எண் திருப்தியான வாழ்வு தருவதில்லை - பழைய நூல்களில் சகலமும் பிரளயத்தில் மூழ்குவது பற்றி காணப்படுகிறது . 26 தத்துவம் - மனித யோகிகள் - ரிஷிகள் ஆகியோரின் தவ வலிமையையும் தாண்டின தத்துவத்தை இந்த எண் குறிப்பிடுவதால் ஒரு மனிதனின் பெயர் எண்ணாக இந்த எண் அமைவது பேரழிவை தரும் . அதுவும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 26 ம் - எண்  அமைந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

                                                  அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 26 ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, August 17, 2018

ஆடி மாதத்தில் கடவுள் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments

                                                                       ஓம் சக்தி 
தொடர்புடைய படம்
பொதுவாக ஆடி மாதங்களில் எந்த ஒரு சுப காரியங்களும் செய்வதில்லை . ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புணர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத  துவக்கம். தமிழ் மாதப் பிறப்புகளுக்கு ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும்  ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

வீடுகளில்  திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் எனக் கூறப்படுவது உண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள்  மக்களை இறைவழியில் அழைத்துச் செல்லும் மாதம் என்று கூறலாம்.

இந்த மாதத்தை பீடை  நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம் என்கிறோம். அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் அந்த மாதம் முழுவதும் வீட்டில் எந்தச் சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை.

குறிப்பாக ஆடி மாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதங்கள் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அந்த நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் தான் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன் மனைவி கூடி இருப்பதையும் தவிர்த்தனர்.

விஞ்ஞான ரீதியாக , ஆடி மாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது நில அதிர்வுகளும், கடல் சீற்றமும் ஏற்படும். அதிக காற்று வீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம்  கிரக பிரவேசம் போன்றவற்றைச் செய்வதில்லை.

இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும். ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஹீப்ரு பிரமிடு எண் 28 ல் இன்று 17 - 8 - 2018 வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                         ஓம் சிவாய நம 
இன்று 17 - 8 - 2018  வெள்ளி  கிழமை பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியினுடைய ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்  28. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் : 

நவ கிரகங்களில் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் என்னும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கடக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மனித சக்திக்கு வெகு  அப்பாலுள்ளது இந்த இந்த 28 - ம் - எண். ஜனன மரண அடிப்படைய  உணர்த்துகிறது.பெரிய பதவி - பணம் - அந்தஸ்து ஆகியவற்றை அளிக்கும் . பின் வந்தது வந்தது போலவே எல்லாம் மறைந்து விடும் .  

"இரண்டு செங்கோல்கள்"  - ஊன்றப்பட்ட காட்சி எகிப்திய சித்திரங்களில் இந்த 28 ம்  எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகிறது ."பிரதி பய - ஜராம் ருத்யு ஹரிணீம் ஸூ தாம் "  என வரும்  சுலோகத்தில் . "மூப்பு மரணங்களை விளக்குகிற அமிருததை சாப்பிட்டும் கூட பிரளய காலயத்தில் அழிவுறும்  தேவர்களையும் . கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவ பெருமான் தேவியின் தாடங்க மகிமையினால் காலத்தின் முடிவு நிலை   பெறாமையும்" இந்த 28 ம் எண்ணிற்க்கு    மந்திர சாஸ்திரம் கூறும் விளக்கமாகிறது . 

" கடக ராசியில் சந்திரன் வடிவில் சூரியனின் பலம் என்பது இந்த எண்ணை குறிக்கிறது . 

சாதரணமான நிலைமையில் உள்ளவரும் உலகத்தை வசமாக்கும் முயற்சிகளில  ஈடுபட்டு முன்னேருவதையும் - ஆன்மீகத்திலும் - தத்துவத்திலும் சிறந்து விளங்குவதையும் இந்த என் எண் குறிக்கிறது . வழக்கு சம்பந்தபட்டவைகளில் வெற்றியும் - சினிமா துறைகளில் புகழும் வாழ்க்கையில் ஏற்றமும் - இரக்கமும் மாறி மாறி வருவதை இந்த எண் குறிக்கிறது . 

2 என்ற சந்திரன் வளர்வதும் - தேய்தலுமான தன்மையை தருவதால் நிலையான வெற்றிகள் இல்லாமல் 8 என்ற சனி மிகபெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதால் " சமச்சீர் நிலையை தருவதில்லை " 

கஷ்டங்களும் - போட்டிகளும் - சோகமும் - குழப்பமும் - பொல்லாப்பும் - கடன் கொடுத்தால் திரும்ப வராமல் போவதும் இந்த 28 ம் எண்ணிற்க்கு உண்டு . ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் தடுமாறுவதை இந்த எண் குறிக்கிறது . பெயர் எண்ணாக வந்தால் ஆன்மீக பலம் இருப்பவர்களுக்கு தீமை ஏற்படாது . ஆனால் எந்த தேதியில் பிறந்தாலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த 28 ம் எண் வரவே கூடாது . 

ஆதலால் இன்று 1 - 6 - 2018 வெள்ளி  கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 
                               
                                              அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு 

இன்று 17 - 8 - 2018 வெள்ளி  கிழமை பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 28  ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, August 8, 2018

கடன் தொல்லைக்கு ஜோதிட ரீதியான காரணம் என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                                     ஓம் சக்தி
கடன் க்கான பட முடிவு
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற சொல் வழக்கு உள்ளது . எதற்கு அசையாத ராவணனின்  கவலையை கடன் படுபவர்களின் மனநிலைக்கு ஒப்பீடு செய்திருக்கிறார்கள் . அப்படியானால் கடன் வாங்கியவர்களின் கவலையை என்னவென்று சொல்வது . 

கடனுக்கு உரிய கிரகம் செவ்வாய் என்றும் அடுத்து கேது என்றும் கூறப்பட்டுள்ளது . நாடி ஜோதிடம் சனியையும் கடன் வாங்க வைக்கும் கிரகமாக கூறுகிறது . லக்னத்திலிருந்து 6 ம் பாவம் கடன் வாங்க வைக்கும் கெடு பலன் கொண்டது . 

6 ம் வீட்டுக்கு அதிபதி 2 ல் இருந்து 2 ம் வீட்டுக்கு அதிபதியான கிரகம் 12 ல் இருந்தால் செல்வம் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலை ஏற்படும் .

6 ம் வீட்டுக்கு குருவின் பார்வை கிடைத்தாலும் கடன் சுமை அதிகமாகும் . ஏனெனில் குருவின் பழக்கமே பார்க்கும் இடத்தின் பலனை பெறுக செய்வதுதான் . 

12  ம் வீட்டுக்கு அதிபதியும் 8 ம் வீட்டுக்கு அதிபதியும் சேர்ந்து 2 ம் இடத்தில இருந்தால் கொடுத்த கடனை வாங்க முடியாது . லக்கினாதிபதி நீச்சமடைந்தும் 12 ல் குரு அமைந்து 2 ல் சூரியனும் சந்திரனும் இருக்க 2 க்கு உரியவர் 6 ம் இடத்தில இருந்தால் பாரம்பரிய சொத்துக்களை இழந்து வறுமையில் வாடுவார் என்பது புலிப்பாணி முனிவரின் கூற்றாகும் . 

மீன லக்கினம் மீனராசி - தனுசு லக்கினம் தனுசு ராசி - ரிஷப லக்கினம் ரிஷப ராசி - துலா லக்கினம் துலாம் ராசி முதலிய லக்கின ராசிகளுக்கு சுக்கிர தசை கடன் நோய் இழப்பை கொடுக்கும் . ஏனெனில் சுக்ரன் 6 - 8 - ம் அதிபதியாக வந்து அவரின் தசை நடந்தால் கஷ்டத்தை கொடுப்பார் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Monday, August 6, 2018

சாபத்தின் காரணமாக புத்திர பாக்கியம் கிடைப்பதில் தோஷம் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர் . இராவணன் BSC

0 comments
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5 ம் இடம் என்பது அவருக்கு அமைய இருக்கும் வாரிசுகளை பற்றி அறிய கூடிய இடமாகும் . இந்த இடத்தில் இருக்கும் கிரகங்களை பொறுத்து அவருக்கு பிறக்கும் சந்ததிகள் எப்படி இருக்கும் என்பதையும் புத்திர பாக்கியம் கிடைப்பதில் சாப கேடு ஏதாவது இருக்கிறதா ? என்பதை தெரிந்து கொள்ளலாம் .

சூரியன் பாதிக்கப்பட்டு 5 ம் இடத்தில் இருந்தாலும் அல்லது 5 ம் வீட்டுக்கு அதிபதியான கிரகத்துடன் கூடி இருந்தாலும் சிவபெருமான் கருடன் ஆகியோரை வழிபடாதது மற்றும் இறந்து போன முன்னோர்களின் சாபத்தினால் புத்திர தோஷம் உண்டாகும் . 

சந்திரன் பாதிக்கப்பட்டு 5 ம் இடத்தில் இருந்தால் பார்வதி தேவி - தனது தாய் மற்றும் ஒரு சுமங்கலி பெண் ஆகியோரின் கோபம் - மன பாதிப்பு காரணமாக அவர்கள் இட்ட சாபத்தின் காரணமாக புத்திர தோஷம் ஏற்படும் . 

செவ்வாய் பாதிக்கப்பட்டு 5 ம் இடத்தில இருந்தால் சொந்த கிராமத்தில் உள்ள தெய்வத்தை வணங்காமல் இருப்பதாலும் முருக வழிபாட்டை செய்யாமல் இருப்பதாலும் புத்திர தோஷம் இருப்பதை தெரிந்து கொள்ளலாம் .

புதன் கெட்டு 5 ம் இடத்தில் இருந்தால் குழந்தைகளையோ கருவையையோ அழித்த சாபத்தின் காரணமாகவும் மஹா விஷ்ணுவுக்கான வழிபாடுகளை நிறைவேற்றாமல் இருப்பதாலும் நீர் வாழ் உயிரினங்களை கொன்ற பாவத்தின் காரணமாக ஏற்பட்ட சாபத்தின் காரணமாக புத்திர  தோஷம் ஏற்படும் 

குரு 5 ம் இடத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் உயர்ந்த குரு ஆசிரியர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு கெடுதல் செய்வதனாலும் புனித மரங்களை வெட்டியதன் காரணமாக ஏற்பட்ட சாபத்தினால் புத்திர தோஷம் ஏற்படும் . 

சுக்கிரன் 5 ம் இடத்தில இருந்து புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்தால் பெண்களை - பசுக்களை துன்புறுத்தியதன் காரணமாகவும் அழகிய மலர் செடிகளை வெட்டியதன் காரணமாகவும் ஏற்பட்ட சாபத்தின் காரணமாக புத்திர தோஷம் ஏற்படும் . 

சனி 5 ம் இருந்து புத்திர தோஷம் ஏற்பட்டால் பிணங்கள் மற்றும் பிசாசுக்களின் சாபத்தினால் புத்திர தோஷம் ஏற்பட்டதாக இருக்கும் . 

ராகு 5 ம் இடத்தில் இருந்தால் பாம்புகளை கொன்றதின் காரணாமாக புத்திரம் தோஷம் உண்டாகும் . 

கேது 5 ல் இருந்து புத்திர தோஷம் ஏற்பட்டால் பெரியோர்களை முதியவர்களை துன்புறுத்தியதன் காரணமாக புத்திர தோஷம் உண்டாகி இருக்கும் . 